ஆளுநர் ஆர்.என்.ரவியின் குடியரசு தின அறிக்கையில் தமிழக அரசு மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் திட்டமிட்ட அரசியல் என்று பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.
குடியரசு தின விழா அறிக்கையில் தமிழக அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து யூடியூப் சேனலுக்கு பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தின அறிக்கையில் திமுக அரசு தலித் விரோத அரசு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசு என்று கூறியிருப்பது, கண்ணாடி முன்பு நின்று பேசுக்கொள்வது போன்றது. இன்றைய நிலையில் தேசிய அளவில் பாஜக ஆளும் மாநிலங்களில், இந்தி பேசும் மாநிலங்களில்தான் பெண்களின் நிலை மோசமாக உள்ளது. ஆளுநரின் சொந்த ஊரான பீகாரில் என்ன நிலை? தமிழ்நாட்டில் என்ன நிலை என ஆளுநருக்கே நன்றாக தெரியும். சும்மா ஒரே ஸ்கிரிப்டை ஐந்து ஆறு பேர் மாறி மாறி பேசிக்கொண்டு இருக்கின்றனர். இங்கு தலித் மக்களுக்கு, பெண்களுக்கு என்ன பிரச்சினை?. தமிழ்நாட்டில் கல்வி, இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் முன்மாதிரியாக உள்ளது. இங்கிருந்த ஆனைமுத்துதான் வடமாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு பிசி இடஒதுக்கீட்டை கொண்டுவந்தார். இந்த தமிழ்நாட்டை பார்த்து நீங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றும் செய்ய வில்லை, மக்கள் அச்சத்தில் வாழுக்கின்றனர் என்கிறீர்கள். இது திட்டமிட்ட அரசியல்.
சீமான் சொல்கிறார் இரட்டமலை சீனிவாசனைவிட பெரியார் பெரிய தலைவரா என கேட்கிறார். அதே மொழியில் ஆர்.என்.ரவி, இரட்டை மலை சீனிவாசன் என்கிறார். ஜனசங்கம் காலம் முதல் எத்தனை வருஷமாக பாஜகவினர் இவர்களின் பெயர்களை பயன்படுத்தி வந்துள்ளது. இரட்டைமலை சீனிவாசனின் பூனா ஒப்பபந்தத்தின்போது கைகொடுக்கும்போது தன்னை தொடக்கூடாது என்று இரட்டைமலை சீனிவாசன் சொன்னார். ஏன் என்று கேட்ட போது தான் ஒரு தீண்டத்தகாதவன் என்று சொன்னார். அதனால் எந்த அடிப்படையில் இரட்டைமலை சீனிவாசனை ஆதரிக்கிறீர்கள். அவருக்கும் பெரியார் இயக்கங்களுக்கும் சம்பந்தம் அதிகமா? இல்லை உங்கள் ஜனசங்கத்திற்கும் சம்பந்தம் அதிகமா? ஐயாவழி வைகுண்டர் முடிசூடும் பெருமாள் என பெயர் வைக்கவிடாமல் செய்தது யார்? இந்த பெயர் வைக்கவே அன்றைய சனாதனவாதிகள் பிரச்சினை செய்தனர். வள்ளலார், சனாதனத்திற்கு எதிராகத்தான் அவரது கொள்கைகளே அமைந்தன. அவரை பிடித்துக்கொண்டு வள்ளலாரும், பெரியாரும் ஏன் மோத வேண்டும்.
அம்பேத்கர் நூற்றாண்டின்போதே அவரை பாஜக கையில் எடுத்துவிட்டது. பாஜக என்பது பிராமின் கட்சியாக இருக்கக் கூடாது என்று பிசி, எஸ்சி பாலிடிக்சை கையில் எடுத்துவிட்டார்கள். கல்யாண் சிங், உமாபாரதி போன்ற பிசி தலைவர்களை வைத்து தான் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தனர். அதேபோல் அம்பேத்கரை வைத்து எஸ்.சி. எமர்ஜிங்கை ஏற்படுத்துகின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து தலித் கட்சிகளும் பாஜகவுடன்தான் கூட்டணியில் உள்ளனர். காங்கிரஸ் கூட்டணியில் தமிழ்நாட்டை சேர்ந்த விசிக மட்டும்தான் உள்ளது. அம்பேத்கரை குறியீடாக வைத்து, தலித்துகளை அழித்தொழிக்கிறார்கள். பாஜகவினர் தலித்துகளுக்கு தலைமை தருவதன் மூலம் என்ன நடைபெற்றது. ராஜாஜி காலத்தில் முனுசாமிபிள்ளை என்ற தலித்தை கொண்டுவந்தனர். ஆலய நுழைவு மசோதா வந்தபோது அவரது நிலைப்பாடு என்ன? எதற்கு எடுத்தாலும் தேசிய கட்சிகள் கக்கனை, எல். முருகனை கொடுத்துள்ளது என்கிறார்கள். ஆனால் திராவிட கட்சிகளும் தலைவர்களை கொடுத்துள்ளன. ஆ.ராசா, பரிதி இளம்வழுதி போன்ற தலைவர்கள் திமுகவில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கினர். இப்போது எல்.முருகனுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கியதன் அருந்ததியர் மக்கள் வளர்ச்சி பெற்றுள்ளனரா. 2009ல் அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியதன் வாயிலாக எத்தனையோ பேர் மருத்துவர்களாக உருவாகியுள்ளார்கள்.
துணை வேந்தர் நியமனத்தில் யாருடைய பங்கு அதிகம்?, மாநில சுயாட்சியில் கை வைப்பது யாரு? இந்த மாநிலத்தில் உள்ள வளாகத்தில் முதன்மை பங்கும் முழு பங்கும் மாநில அரசுக்கே இருக்க வேண்டும். பொதுப்பட்டியல் என்ற ஒன்றே இருக்கக்கூடாது என்பதுதான் நமது கொள்கை. பல்கலைக் கழகங்கள் அரசின் கட்டுப்பாட்டிற்கு செல்வதை விரும்பவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்கிறார். ஆனால் அவர் சொல்வது ஆளுநரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தான். உயர் கல்வித்துறை அமைச்சராக பொன்முடி இருக்கும்போதே துணை வேந்தர்களை அழைத்து ஊட்டியில் மாநாடு நடத்தினார். இது அரசையோ, முதலமைச்சரையோ அவமானப்படுத்துவது அல்ல. ஓட்டுபோட்ட மக்களை அவமானப்படுத்தவதாகும். ஆளுநர், ஆட்சியர் போன்ற நியமனப் பதவிகள் அதிகாரம் செலுத்தக்கூடாது. நியமனப் பதவிகள், தேர்ந்ததெடுக்கப்பட்ட அரசுக்கு ஆலோசனை சொல்வதுதான் வழக்கம். ஆனால் பாஜவின் கொள்கையே நியமன பதவிகள் வாயிலாக ஆட்சி செய்வது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் செய்வது. தமிழ்நாடு போன்ற மக்கள் செல்வாக்கு நிறைந்த அரசையும் அமுக்க பார்க்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக நாடும் வளர்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும் பின்னோக்கி செல்வதாக ஆளுநர் குறிப்பிடுகிறார். இது புள்ளிவிபர அடிப்படையிலே தவறானது. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட காலை உணவுத்திட்டம் குறித்து ஆங்கில நாளேடுகளில் வந்த செய்திகளை படித்தாலே தெரியும். இந்த திட்டம் நிறைய ஏழை குழந்தைகளை பள்ளிக்கு வரவைத்துள்ளது. இடைநிற்றலை பெரிய அளவில் குறைத்துள்ளது. செங்கல்சூளைகளில் பணிபுரிபவர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்களை அடுத்தக்கட்டத்திற்கு இந்த திட்டம் நகர்த்துகிறது. பெண்கல்வி மட்டுமின்றி பெண் உயர்கல்வியிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
ஆளுநர் பேசியுள்ளது பாஜக ஸ்கிரிப்ட், நாக்பூர் ஸ்கிரிப்ட். சீமான் போல ஆளுநர் பேச முடியாது என்பதால் மொழி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அவர் ஆங்கில புரிதலில் அவ்வப்போது பேசி வருகிறார். வைகுண்டருக்கு, ரெட்டமலை சீனிவாசனுக்கும், எம்.சி.ராஜாவுக்கும் என்ன தொடர்பு உள்ளது. ரெட்டலை சீனிவாசனுக்கும்,
நீதிக்கட்சிக்கும் தொடர்பு இருக்கிறது. ரெட்டலை சீனிவாசனுக்கும், பெரியாருக்கும் தொடர்பு உள்ளது. எம்.சி.ராஜாவுக்கும், பெரியாருக்கும் தொடர்பு உள்ளது. சிவராஜுக்கும், பெரியாருக்கும் தொடர்பு உள்ளது. பெரியார் பட்டம் வழங்கிய பெண்கள் மாநாட்டு குழுவில் சிவராஜின் மனைவியும் இடம்பெற்றிருந்தார். இவர்கள் எல்லாம் பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கத்தையோ, அதன் கொள்கைகளையோ ஆதரித்துள்ளனரா? ஆளுநர் ஆளுநராக இருக்க வேண்டும். இவர் ஏன் அரசியல் செய்கிறார். மக்கள் செல்வாக்கு இல்லாத ஒரு அரசு இருந்தால் ஆளுநரின் பணி வரும். அதுவரை தமிழ்நாடு அரசு என்ன சொல்கிறதோ அதைதான் கேட்டு கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் நீதிமன்றமும் கொட்டு வைத்துவிட்டது. இப்படி செய்கிறோம் என்ற கூச்ச உணர்வுகள் கூட இல்லாமல் பேசி கொண்டிருப்பார். உத்தரபிரதேசத்தில் எப்படி இருக்கிறது என்றால் சிறப்பாக இருக்கிறது என்பார்.
அவரால் இன்னொரு விஷயத்தை சொல்ல முடியாது. நேரடி நாக்பூர் ஆட்கள் என்பதால் அவரால் தமிழ்நாட்டில் முஸ்லீம்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேச முடியாது. அந்த வேலையை செய்வதற்காகதான் சீமானை வைத்திருக்கிறார். குருமூர்த்தி பாஜகவால் முஸ்லிம்களின் எதிரி திமுக என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அந்த வேலையைதான் பாஜக செய்கிறது. அதனால் சீமான், முஸ்லீம்களை துலுக்கன் என சொன்னார். கிறிஸ்தவர்களை அடித்துவிரட்ட சொன்னார் என சொல்லிக்கொண்டு இருப்பார். ஆளுநரருக்கும், சீமானுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்றால் தமிழர்களின் எதிரி திராவிடம், தலித்துகளின் எதிரி திராவிடம் என சொல்லுகிறோம். நீ எக்ஸ்ட்ராவா முஸ்லீம்களின் எதிரியும் திராவிடம் என்று சேர்த்து சொல்ல வேண்டும். மற்றபடி எல்லாருக்கும் ஒரே அசைன்மெண்ட்தான். சில பக்கங்களை கிழித்துவிட்டு ஆளுநருக்கு கொடுப்பார்கள். முழு ஸ்கிரிப்டையும் சீமானுக்கு தருவார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.