Homeசெய்திகள்கட்டுரைஆளுநரின் ஊட்டி மீட்டிங்! செக் வைத்த ஸ்டாலின்!

ஆளுநரின் ஊட்டி மீட்டிங்! செக் வைத்த ஸ்டாலின்!

-

- Advertisement -

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்த ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் நடத்த உள்ள துணை வேந்தர்கள் மாநாடு குறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை ஏப்ரல் 25,26ல் நடைபெறும் என ஆளுநர் தெரிவித்துள்ளார். 2022ல் வந்த சட்டத் திருத்தத்தில் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு வந்துள்ளது. அத்துடன் துணை வேந்தர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் அரசாங்கத்திற்கு வந்துள்ளது. துணை வேந்தர் நியமனம் தொடர்பான மசோதாவுக்கு தான் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் அந்த மசோதாக்கள் அனைத்து சட்டமாக்கப்பட்டு விட்டது.  அதனால் இன்றைக்கு தேதியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனம், ஒழுங்கு நடவடிக்கை அதிகாரம் அரசாங்கத்திடம் தான் உள்ளது. அதேசமயம் வேந்தர் பொறுப்பு இன்றைய தேதி வரை ஆளுநரிடம் தான் உள்ளது. அந்த பொறுப்பு இன்னும் அகற்றப்படவில்லை. உதாரணமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக சட்டத்தில் பிரிவு 9-ன்படி பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் ரவிதான் உள்ளார். 2022ஆம் ஆண்டு சட்டத்திருத்தத்தில் ஆளுநர், பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்கிற பொறுப்பை நீக்கவில்லை.

தமிழ்நாடு அரசு நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே இன்னொரு திருத்தச் சட்டம் கொண்டுவந்து ஆளுநர் வேந்தராக நீடிப்பதை ரத்து செய்து, முதலமைச்சர் அல்லது உயர்கல்வித்துறை அமைச்சர் வேந்தராக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு அதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் அதற்கு 3 மாதத்திற்குள் ஆளுநர் ஒப்புதல் அளித்துதான் ஆக வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழ்நாடு அரசின் நிதியில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் உள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் தனித் தனியாக சட்டங்கள் உள்ளது. இந்த சட்டத்தில் ஆளுநரை வேந்தர் என்று அங்கீகரித்து கொடுத்தது தமிழ்நாடு சட்டமன்றம் ஆகும். ஆனால் அந்த மரியாதையை அவர் காப்பாற்றிகொள்ளவில்லை. அதனால் அவரை அந்த பதவியில் இருந்து நீக்குவது தான் தமிழ்நாடு அரசுக்கு உள்ள வழியாகும்.

"மத்திய நிதியமைச்சர் ஆணவமாகப் பதில் கூறுகிறார்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ஆளுநருக்கு வேந்தர் என்கிற முறையில் மாநாடு நடத்துகிற அதிகாரம் உள்ளதா? என்றால் 100 சதவீதம் கிடையாது. உச்சநீதிமன்றம் தன்னுடைய சமீபத்திய தீர்ப்பில் ஆளுநரை நேடியாக விமர்சனம் செய்து, ஆளுநர் மாநில மக்களின் நலனுக்கானவர். மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் படிதான் செயல்பட வேண்டும். அவர் சொந்த முறையில் செயல்படக்கூடாது என்று. 1935 இந்திய அரசு சட்டத்தில் ஆளுநருக்கான அதிகாரங்களில்,  அவர் விருப்புரிமை அடிப்படையில் செயல்படலாம் என்று இருந்தது. பின்னர் அந்த பிரிவை அம்பேத்கர் நீக்கினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, சட்டமன்றத்துக்கு தான் அதிகாரம் இருக்க முடியும். மத்திய அரசால் நியமிக்கப்படும் பதவியில் இருக்கும் நபருக்கு அவ்வளவு அதிகாரங்கள் இருந்தால் அது சர்வாதிகாரம் ஆகும். இதனால் உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு தான் அதிகாரம் என்று சொல்லிவிட்டார்கள். ஆளுநர் அரசியல் ரீதியாக செயல்படக்கூடாது. மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும் என்று ஒரு ஆளுநருக்கு அறிவுரை வந்துள்ளது என்றால் அது ஆளுநர் ஆர்.என்.ரவிக்குதான் வந்துள்ளது. வேறு யாராவது இருந்தால் பதவியை ராஜினாமா செய்திருப்பார்கள். அரசியல் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கும் வேளையில் அரசியல் செய்வதற்காக டெல்லியில் சென்று  ஜெகதீப் தன்கரை சந்திக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஊட்டியில் மாநாட்டை நடத்துகிறார்கள். அதற்கான அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது.

பட்டமளிப்பு விழா: மாணவர்கள் கருப்பு நிற உடை அணிந்து வரத் தடை!

பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில்  தமிழ்நாடு அரசே தலையிட முடியாது. அவை தன்னிச்சையாக செயல்படக்கூடிய அமைப்புகளாகும். அதில் ஆளுநர் இந்த அளவுக்கு தலையிடுவதற்கான அதிகாரம் என்பது சட்டப்படி இல்லை. அதனால் ஊட்டியில் ஆளுநர் நடத்தும் துணை வேந்தர்கள் மாநாடு என்பது அரசியல் சட்டத்திற்கும்,  பல்கலைக்கழகங்கள் சட்டத்திற்கும் விரோதமானதாகும். எனவே இந்த கூட்டத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்க கூடாது. இன்றைய தேதிக்கு புரோ சான்சலராக உயர்கல்வித்துறை அமைச்சர்தான் உள்ளார். 25ஆம் தேதி அரசு சென்னையில் ஒரு கூட்டம் நடத்தி, துணைவேந்தர்களை அழைக்க வேண்டும். கூட்டத்திற்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ