Homeசெய்திகள்கட்டுரைலெஃப்ட்ல இண்டிக்கட்டர் போடுவார், ரைட்ல திரும்புவார்; இதுதான் சீமானின் அரசியல்

லெஃப்ட்ல இண்டிக்கட்டர் போடுவார், ரைட்ல திரும்புவார்; இதுதான் சீமானின் அரசியல்

-

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் லெஃப்ட்ல இண்டிக்கட்டர் போடுவார், ஆனால் ரைட்ல திரும்புவார் இதுதான் அவருடைய அரசியல் என்று அந்த கட்சியில் இருந்து வெளியேறிய வெற்றிக்குமரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்தனர். அந்த இளைஞர்களை ஒருங்கிணைத்து வழிநடத்த உருவாக்கப்பட்டது தான் நாம் தமிழர் கட்சி.

அப்போது சினிமா துறையில் ஓரளவிற்கு அறிமுகமாகி இருந்தவரும், பெரியாரிய சிந்தனையில் ஈடுபாடு காட்டியதால் இளைஞர்களுக்கு சீமான் மீது ஒரு விதமான ஈர்ப்பு இருந்தது. அதனால் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமானை தேர்வு செய்தனர். அப்போது கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், திருமுருகன் காந்தி என்று எல்லோரையும் படிப்படியாக வெளியேற்றிய சீமான், தற்போது வெற்றிக்குமரன், காளியம்மாள் வரை வெளியேறி வருகிறார்.

நாம் தமிழர் கட்சியில் இளைஞர்கள் இணைய இணைய கட்சி வளர்ந்தது. வாக்கு சதவீதம் அதிகரித்தது. அதன் பின்னர் சீமானின் செயல்பாடுகள் மாற்றம் வரத் தொடங்கியது. பெரியாரின் சிந்தனையில் இருந்து விலகி ஆர்.எஸ்.எஸ் சிந்தனை போக்கில் மாறினார்.

அதன் பின்னர் அவர் பின்னால் சாதி உணர்வாளர்களும், மதப்பற்றாளர்களும் அணி வகுக்க தொடங்கினார்கள். சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள் படிப்படியாக குறைந்தனர். அதனால் அவரும் யார் பேச்சும் கேட்பதில்லை, நான் சொல்வதுதான் சட்டம், அதுவே சாசனம் என்று தன்னை ஒரு அதிபராக கற்பனை செய்து கொண்டு கட்சியில் சர்வாதிகாரியாக மாறினார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளரான வெற்றிக்குமரன் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய வெற்றிகுமரன், லட்சக்கணக்கான இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியில் இணைய இணைய கட்சி வளர்ந்தது என்றும் கட்சி வளர வளர சீமானின் செயல்பாடுகளில் மாற்றம் வந்தது என்றும் கூறினார். எதேச்சதிகாரமாக சீமான் செயல்பட்டதில் உடன்பாடு இல்லையென்றாலும் சில செயல்பாடுகளில் அவரை பின் தொடர்ந்ததாக வெற்றிக்குமரன் தெரிவித்தார். அவரோடு பயணித்து பொருளாதாரம், குடும்பம், இளமைக்காலம் என, எண்ணற்ற இழப்புகளை சந்தித்துள்ளதாக அவர் கூறினார்.

சீமானால் தமிழ்தேசியத்தை வெல்வதற்கு முடியாது என தெரிவித்த வெற்றிக் குமரன், அதற்கான வேலைகளை சீமான் செய்யவில்லை என்றார். அதனால் நாம் தமிழர் கட்சியில் சீமானால் புறக்கணிக்கப்பட்ட பலர் ஒன்றிணைந்து “தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம்” என்கிற பெயரில் தொடங்கி உள்ளதாகவும் நவம்பர் 27-ஆம் தேதி வீரவணக்க நாளை நடத்த இருப்பதாகுவும் வெற்றிக்குமரன் குறிப்பிட்டார்.

தமிழர்களுக்கான உரிமை, வேலைவாய்ப்பு, வளங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி செயல்பட உள்ள தங்களுடன் நாம் தமிழர் கட்சியினர் பலர் பயணிக்க இருப்பதாகவும் அவர் கூறினார். 2026-ஆம் ஆண்டு சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்றும் அதன் பின்னர் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி காணாமல் போகும் என்றும் குற்றஞ்சாட்டினார். நாம் தமிழர் கட்சி வெளியில் இருந்து பார்த்தால் பெரிய அளவிலான கட்சியாக தெரியும் என்றும் உள்ளே இருந்து பார்த்தால் நாம் தமிழர் கட்சி ஒன்றுமில்லாத கட்சியாகவே இருக்கும் என்றும் வெற்றிக் குமரன் விமர்சித்தார்.

தமது சொத்துக்களை பாதுகாப்புக்காகவே நாம் தமிழர் கட்சியின் அலுவலகம், தனி நபரின் பெயரில் பதிவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார், வெளியூரில் நடைபெறும் மாநாட்டிற்கு வருகை தரும்போது, அப்பகுதியில் இருக்கக்கூடிய கட்சி தம்பிகள் 500, 1000 என்று நிதி திரட்டினால் அந்த நிதியில் நட்சத்திர விடுதியில் தான் அறை ஒதுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்துவார் என்று அக்காட்சியில் இருந்து விலகியுள்ள முன்னாள் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

நடிகர் விஜய்யைப் பார்த்து, சீமான் பயங்கரமாக பயப்படுகிறார் என்றும் ஆனால், அதனை அவர் வெளிகாட்டிக் கொள்ளமாட்டார் என்றும் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறியுள்ள முன்னாள் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

MUST READ