Homeசெய்திகள்கட்டுரைதமிழர்களின் அரசு வேலைகளை பறிக்கவே இந்தித் திணிப்பு! எச்சரிக்கும் ஆழி செந்தில்நாதன்!

தமிழர்களின் அரசு வேலைகளை பறிக்கவே இந்தித் திணிப்பு! எச்சரிக்கும் ஆழி செந்தில்நாதன்!

-

- Advertisement -

இந்தி திணிப்பின் நோக்கமே தமிழகத்தில் உள்ள அரசு பணிகளை பறித்து வடநாட்டினருக்கு வழங்குவது தான் என்றும், அதற்காகதான் அமித்ஷ முதல் தர்மேந்திர பிரதான் வரை முயற்சித்து கொண்டிருக்கிறார்கள் என்றும் பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை திணிக்கப்படுவதன் பின்னணி குறித்து பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன், அண்ணாதான் ஆளுகிறார் கருத்தரங்கில் பேசியதாவது:- இந்த பிரச்சினை மொழி பிரச்சினை அல்ல. இது ஒரு மொழியை கற்றுக்கொள்வதா? இல்லையா? என்கிற பிரச்சினை இல்லை. 3-வதாக ஒரு மொழியை கற்றுக் கொள்வதா?, கிடையாதா? என்கிற விஷயமும் கிடையாது. அடிப்படையில் வடஇந்திய ஆதிக்கத்தை ஒட்டு மொத்த இந்தியாவில் நிறுவுவதற்கு தடையாக உள்ள தமிழ்நாட்டில் அதை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் விடாமல் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். இப்படிதான் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசுப்பணிகளில், பொதுத்துறையில் இருந்த பிராந்திய அளவிலான வேலைவாய்ப்பு முறைகளை ஒழித்து விட்டு, ஒட்டுமொத்தமாக வடஇந்தியர்களுக்கு ஆனதாக மாற்றினார்கள். இப்போது, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகள், மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பை பெறுவதுதான் அவர்களது திட்டமாகும். ஏன் என்றால் எங்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது. நீங்கள் வேலைவாய்ப்பை உருவாக்குங்கள் நாங்கள் வந்து எடுத்துக் கொள்கிறோம். ஏனென்றால் நாங்கள்தான் இந்தியாவை ஆளுகிறோம். இந்த திட்டம் தான் இந்திக்கு பின்னால் உள்ளது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். அதனால் தான் தமிழ்நாட்டில் அவர்களின் ஏமாற்று வேலை எடுபடவில்லை.

மறுபடியும் மறுபடியும் ஒரே கேள்வியை வைத்து நம்மை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். மூன்றாவது ஒரு மொழியை படித்தால் என்ன தப்பு? ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மொழிப் பிரச்சினை பற்றி நாம் பேசும் போது, மொழி அதிகாரத்தை பற்றி பேசுகிறோம். இந்தியாவில் சட்டத்திற்கு முன்னால் எல்லோரும் சமம் என்றால், எல்லா மொழிகளும் சமம்தான். நாம் மொழிச் சமத்துவத்தை பேசும்போது, சமூகநீதியை பேசுகிறோம். அனைத்து இனங்களுக்கான அதிகாரத்தை பேசுகிறோம். அவர்கள் இந்த விவாதத்திற்கு உள்ளேயே வரக்கூடாது. ரொம்ப சிம்பிளா பதில் சொல்லு… இன்னொரு மொழி படித்தால் என்ன குறைந்து போய்விட்டது என்பார்கள். நம்ம ஆள் குழம்பி விடுவார்கள். விவாதங்களில் சங்கிகளும், அவர்களால் மூளை சலவை செய்யப்பட்ட தம்பிகளும் எல்லோரும் இதைதான் பேசுகிறார்கள்.

திராவிட இயக்கம் அதன் அடித்தளமே சமூகநீதிக்கு கல்விதான் என்றுதான் பேசுகிறது. அந்த கல்விக்காக பல தியாகங்களைக்கூட அவர்கள் செய்திருக்கிறார்கள். சமூக நீதிக்காக திராவிட இயக்கங்கள் செய்துகொண்ட சமரசங்கள் நிறைய. இந்தியாவுக்குள் இல்லாமல் தனிநாடாக போக வேண்டும் என்று சொன்னவர்கள். அந்த கொள்கையை விட்டுவிட்டு ஒரு மாநிலமாக இருக்க சம்மதித்தார்கள். மத்திய அரசில் பங்கெடுத்தார்கள். அனைத்திந்திய கூட்டணிகளை உருவாக்கினார்கள் அல்லது அதில் பங்கெடுத்தார்கள். ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்தின் ஒரு பகுதிதான் தமிழ்நாடு. நமது தேர்தல் முறைகள், ஆட்சி முறைகள் என அனைத்தும் ஒன்றுதான். ஆனால் மொழி என்று வரும்போது ஏன் தமிழ்நாடு தனித்து நிற்கிறது. இவ்வளவு யோசித்த நமது தலைவர்கள் ஏன் போனால் போகிறது என்று இந்தியை ஏற்றுக்கொள்ளவில்லை?. ஏன் இந்தி மொழிக்கு மட்டும் இந்த எதிர்ப்பு இருக்கிறது என்று யோசித்து பார்க்க வேண்டாமா?.

கலைஞர் - அண்ணாதுரை

இந்தி மொழி என்பது வறும் மொழியாக இங்கே வரவில்லை. அதோட ஜாதகமே வேறு. அது வடஇந்தியாவில் போஜ்புரி, அவதி, கோசலி, ராஜஸதானி, கோண்டி போன்ற 50 மொழிகளை சுதந்திரத்திற்கு முன்பே கொன்றுவிட்டது. இது இல்லாமல் தேசபக்தியின் பேரில் இந்தியை ஏற்றுக்கொண்ட மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஒடிசா, மேற்கு வங்காளத்தில் அந்த மொழிகளின் இடத்தை இந்தி கைப்பற்றுகிறது என போராட்டம் நடக்கிறதா இல்லையா?. கர்நாடகாவில் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் தலைவர்களே இன்று இருமொழி கொள்கைகள் வேண்டும் என்கிறார்கள். ராஜஸ்தான், ஒடிசா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் பாஜகவினரே இந்தி மொழி ஆதிக்கத்திற்கு எதிராக குரல் எழுப்ப தொடங்கியுள் இந்தி திணிப்பு என்பது இந்தியாவின் ஒரு பகுதி மக்களின் ஒரு சித்தாந்தத்தின், ஒற்றை ஆட்சி முறையின் ஒரு வடிவமாகும். இது தமிழர்களுக்கு 100 வருடமாக தெரிந்து இருக்கிறது. மகாத்மா காந்தி சென்னையில் இந்தி பிரச்சார சபா தொடங்கிய போதே அதனை கேள்வி எழுப்பியவர் அயோத்திதாச பண்டிதர் ஆவார். ஒட்டு மொத்த தமிழ்நாடுமே இந்த விஷயத்தில் உஷாராக இருந்தது. இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால்ல நான் என் திமிரில் திணித்து பார்க்கிறேன். உங்களால் என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறார்கள்.

dharmendra pradhan

ஆனால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் பிரச்சினையே. 2020 வருஷமாக உங்களால் ஒன்றும் செய்யமுடிய வில்லை. தமிழ்நாடடில் தமிழ் ஆட்சி மொழி இல்லாமல் சமஸ்கிருதமும், பிராகிருதமும் ஆட்சி மொழியாக இருந்துள்ளது. தமிழ் அழிந்து விட்டதா? இடையில் பாரசீகம், மராத்தி, தெலுங்கு மொழிகள் வந்தன. தமிழ் அழிந்துவிட்டதா?. வெள்ளைக்காரன் 300ஆண்டுகள் ஆண்டுவிட்டு போய் விட்டான் தமிழ் அழிந்துவிட்டதா? தமிழை உங்களால் அழிக்க முடியாது. நீங்கள் எங்களை அடிக்க அடிக்க இரும்பு யுகம் உலகத்திலேயே தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்கியது என முதலமைச்சர் அறிக்கை விடுவார். சீரிளமைத்திறம் வாய்ந்த தமிழை உங்களால் எதுவும் செய்ய முடியாது.

மத்தியில் மோடி அரசு வந்த பின்னர் செய்த நல்ல காரியம் என்ன என்றால்?  தமிழ்நாட்டில் மட்டுமே இருந்த இந்தி எதிர்ப்பை நாடு முழுவதும் பரப்பியதுதான். உ.பி., பீகார் மாநிலங்கள் ஏன் வளரவில்லை என்றால் அங்கே பெரியாரும், அண்ணாவும் இல்லை. அதனால் தான் அந்த மாநிலங்கள் வளரவில்லை. பாஜகவுக்கு இப்போது என்ன பிரச்சினை என்றால் இந்து – முஸ்லீம் பெயரை வச்சி 30 ஆண்டுகளாக நாட்டை பிளவுபடுத்தி எல்லாவற்றையும் அடைந்துவிட்டார்கள். அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதுடன் அந்த கதை முடிந்துவிட்டது. இப்போது, அடுத்து இந்தி – இந்தி அல்லாதோர் விவகாரம். நாடு முழுவதும் உள்ள வேலை வாய்ப்புகளை நாங்கள் தான் பெற்றுத் தருகிறோம். நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். அதற்காகதான் வேண்டும் என்றே திட்டமிட்டு அமித்ஷா முதல் தர்மேந்திர பிரதான் வரை எல்லோரும் இந்தி திணிப்பை பற்றி பேசுவது, அங்கே வாக்குகளை வாங்குவதுதான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ