Homeசெய்திகள்கட்டுரை2026 சட்டமன்ற தேர்தலில் எத்தனை முனை போட்டி? அண்ணாமலை 'Decoding'! உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!

2026 சட்டமன்ற தேர்தலில் எத்தனை முனை போட்டி? அண்ணாமலை ‘Decoding’! உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!

-

- Advertisement -

தன்னுடைய எதிர்ப்பாளர்களான ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகிய மூவரில், ஓபிஎஸ்-ஐ மட்டும் தனிமைப்படுத்தி விட வேண்டும் என்கிற திட்டம் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அளித்துள்ள நேர்காணலில் கூறி இருப்பதாவது:- டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக அமித்ஷாவை சந்தித்து பேசியதாக கூறியுள்ளார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்புக்கு பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் சமூக வலைதள பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில்  2026ல் என்.டி.ஏ ஆட்சி என்று குறிப்பிடுகிறார். அப்படி என்றால் அவர்கள் இருவரும் ஏதாவது ஒரு வகையில் தேர்தல் பற்றியோ, கூட்டணி பற்றியோ பேசாமல் அமித்ஷா எப்படி இந்த பதிவை போட்டார்?  என்.டி.ஏ கூட்டணியில் தமிழ்நாட்டில் யாரெல்லாம் உள்ளார்கள் என்றால் பாஜக, அடுத்ததாக பாமக, ஓபிஎஸ் (கட்சி இல்லை), டிடிவி தினகரன் (வாக்கு சதவீதம் மிகவும் குறைவு). இவர்கள் எல்லோரும் சேர்ந்தால் கூட 10 முதல் 12 சதவீத வாக்குகள் வருவதற்கு கூட வாய்ப்பில்லை. இதனை வைத்துக்கொண்டு ஆட்சியை பிடிப்பது என்பது வாய்ப்பில்லை. அதனால் என்.டி.ஏ ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றாலே ஒரு வலுவான கூட்டணி வேண்டும். அதிமுக சேரும்போது, அந்த வலு அமைகிறது. அப்போது அதிமுக கூட்டணி குறித்து பேசாமல், மக்கள் பிரச்சினை மட்டுமே பேசுவதற்காக அமித்ஷாவை சந்தித்தேன் என்கிறார்.

இன்னும் சொல்லப் போனால் அமித்ஷா மக்கள் பிரச்சினையை தீர்க்கும் இடத்தில் இல்லை. அதற்கு நீங்கள் பிரதமர் மோடியையோ, அல்லது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையோ தான் சந்தித்திருக்க வேண்டும். மொழிப்பிரச்சனை நடைபெறுவதால் தர்மேந்திர பிரதானை சந்தித்திருக்கலாம். ஆனால் அமித்ஷாவை மட்டும் சந்தித்தேன் என்றால், அவர் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கும் நபர் அல்லவா? மற்றொன்று அவருடைய பணி என்பது பாஜகவின் தேர்தல் விற்பனர் என்பதாகும். குஜராத் உள்ளிட்ட எத்தனையோ தேர்தல்களில் அமித்ஷா அதை நிரூபித்துள்ளார். இன்றைக்கு இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜக வலிமையுடன் இருப்பதற்கு முக்கிய காரணம் அமித்ஷா தான். அதுபோக பாஜகவில் தற்போது உட்கட்சி தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. கட்சியின் தேசிய தலைவர் மற்றும் பல்வேறு மாநிலங்களில் காலியாக இருக்கும் தலைவர் பதவிகளை நிரப்ப வேண்டி உள்ளது.

அப்படியான சூழலில் அமித்ஷாவை எடப்படி பழனிசாமி சந்தித்துள்ளார் என்றால்? என் கணக்குபடி இரட்டை இலை வழக்கு தற்போது தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கை அவரது அரசியல் போட்டியாளர்களான ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் ஆவணங்களை படித்து பார்த்து முடிவை சொல்ல கால தாமதம் ஆகும். அதனால் சின்னத்தை முடக்குவதாக சொன்னால், அதை எதிர்த்து எடப்பாடியால் நீதிமன்றத்திற்கு கூட செல்ல முடியாது. ஏனென்றால் தேர்தல் ஆணையத்தில் விவகாரம் நிலுவையில் இருக்கும். இது எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும். அதனால் அந்த ஆபத்தை தடுத்த நிறுத்த வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. தற்போது அமித்ஷா உடனான சந்திப்பின் மூலம் அந்த ஒன்று கண்டிப்பாக நடைபெற்றுவிடும். அது எடப்பாடி பழனிசாமிக்கு லாபம்தானே. அரசியலில் நிலைப்பாடு மாற்றம் என்பது இயல்பானது. அது அருவருக்கத்தக்க ஒன்று அல்ல. தற்போது எடப்பாடி பழனிசாமியை, அண்ணாமலை அவதூறாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோக்களை தூசி தட்டி எடுத்துப்போடுகிற காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இதனால் வாக்கு வங்கி பாதிக்கப்படாது.

2026 தேர்தல்! ஆட்சி அமைக்கப் போவது யார்?

திமுக தனது வாக்கு வங்கிகளை கூர்மைப்படுத்தி வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தி வந்திடும், சமஸ்கிருதம் வந்திடும் என்று சொல்கிறார்கள். அப்படி எனில் வேறு வழியின்றி அனைவரும் திமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள். திமுகவின் நிலைப்பாடு இது. அதிமுகவின் சிக்கல் என்ன என்றால் பல இடங்களில் அதிமுகவின் நிலைப்பாடும் இதுதான். ஏனென்றால் இவை எம்ஜிஆரின் நிலைப்பாடு ஆகும். ஜெயலலிதாவின் நிலைப்பாடு ஆகும். அதனை நீங்கள் மாற்ற முடியாது. பாஜகவின் நிலைப்பாடு என்பது, வடநாட்டு பாலிடிக்ஸ் ஆகும். உத்தரபிரதேசத்துக்கு சீட்டை அவர்கள் குறைத்து விடுவார்களா என்ன? திமுக நமக்கு தமிழ்நாடு மிகவும் முக்கியம் என்று நினைக்கிறது. இங்கு வெற்றி பெறாவிட்டால் திமுகவுக்கே எதிர்காலம் கிடையாது. அதனால் அதற்குள்ளாக அவர்கள் கட்டுப்பாட்டிற்கு வருகிறார்கள். அதிமுகவுக்கும் அதுதான் நோக்கம். ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்தால், அந்த நோக்கத்தில் பின்னடைவு ஏற்படும். அதனால் தற்போதைக்கு கூட்டணி இல்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதுதான் அவர்களுக்கு நல்லது. அதுதான் அவர்களது கதையாகும்.

eps ops

அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் என்ன லாபம்? என கேள்வி எழும். லாபம் இல்லாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது. அரசியல்வாதிக்கு லாபம் என்றால் தேர்தல் வெற்றிதான். அப்படி என்றால் அதிமுக தன் வசம் 20 சதவீதம் வாக்குகளை வைத்திருக்கிறது. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் திமுகவுக்கு வாக்குகளை போட மாட்டோம் என்று சொல்லுகிறவர்கள். இந்த 20 சதவீதத்தில், 15 சதவீதத்தை சேர்த்தால்தான் வெற்றியை நோக்கி பயணிக்க முடியும். அது இல்லாமல் கனவு காண்பதே தவறாகும். அண்ணாமலை நேற்று இப்தார் விருந்தில் என்ன சொல்கிறார். தமிழ்நாட்டில் 5 முனை போட்டி நிலவுகிறது. என்.டி.ஏ, திமுக, அதிமுக, சீமான், விஜய் என 5 முனை போட்டி உள்ளது நல்லதல்ல. இது மூன்று முனை போட்டியாக மாற வேண்டும் என்றும் அண்ணாமலை சொல்கிறார்.

"ஜூன் 04- ஆம் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. டிடிவி தினகரன் வசமாகும்"- அண்ணாமலை பேச்சு!

பாஜகவுடன் தற்போது டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர்தான் உள்ளனர். சசிகலாவுக்கு கட்சியே இல்லை. அவரை சேர்த்தால் கோபமுடன் உள்ள முக்குலத்தோர் சமுதாய வாக்கு வங்கி ஒரு சதவீதம் கூடினாலும் நன்மைதான். சசிகலா எதிர்பார்ப்பது கவுரவமான ஒரு பதவி தான். எதிர்ப்பாளர்களில் ஓபிஎஸ்-ஐ தனிமைப்படுத்தி விட்டால், டிடிவிக்கு சீட் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. சசிகலாவை அதிமுகவில் சேர்த்தால் அவருக்கு ஒரு கவுரவ பொறுப்பு வழங்கினால் போதும். சீட்டே கொடுக்க வேண்டாம் என்கிற கணக்கும் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளது. அதை அவர் அமித்ஷா உடனான சந்திப்பின்போது வெளிப்படுத்தி இருக்கலாம். ஆனால் அமித்ஷாவின் கணக்கு என்பது எல்லோரும் சேர்ந்த ஒன்றுபட்ட அதிமுகதான். ஆனால் ஓபிஎஸ் இல்லாத அதிமுக என்று எடப்பாடி சொல்லி இருக்கலாம். இவை உடனடியாக இறுதியாகாது. ஏனென்றால் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ