Homeசெய்திகள்கட்டுரைஐ.சி.சி உலகக் கோப்பை 2023 - நரேந்திர மோடிக்கு கற்று கொடுத்த பாடம்

ஐ.சி.சி உலகக் கோப்பை 2023 – நரேந்திர மோடிக்கு கற்று கொடுத்த பாடம்

-

 

ஜ.சிசி உலக போப்பை 2023 - நரேந்திர மோடிக்கு கற்று கொடுத்த பாடம்

ஒரு விளையாட்டு போட்டியை விளையாட்டாக பார்க்கும்போது வெற்றி தோல்வி என்பது மிகவும் சாதாரணமானது. விளையாடுகிற இரண்டு அணிகளில் ஒரு அணிதான் வெற்றிப் பெற முடியும். ஒரு அணி நிச்சயமாக தோல்வியை தழுவும். ஆனால் இந்த தொடரில் அதிக வெற்றிகளை ருசித்த இந்திய அணியை பாராட்ட வேண்டும்.

நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி என்ற பெயரில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது

இந்தியாவில் இதுவரை நடந்த உலக கோப்பை இறுதி போட்டி கொல்கத்தா, மும்பை, சென்னை போன்ற அதிக ரசிகர்கள் உள்ள பெரு நகரங்கள்  ஏதாவது ஒன்றில் நடைபெறுவது வழக்கம். ஆனால்  இந்த இறுதி போட்டி முதல்முறையாக நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி என்ற  பெயரில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அந்த மைதானத்தின் இருக்கைகள்  அனைத்திலும் காவி கலர் அடிப்பதும், உள்ளே வரும் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி சீருடைகள் அணிவித்து அமர வைத்து “ஜெய் ஸ்ரீ ராம் ! ஜெய் ஸ்ரீ ராம் !” என்ற கோஷங்கள் எழுப்பியது.

மைதானத்தில் இந்திய விமானப்படை சாகசங்கள் நிகழ்த்தியது
Pic credit: CNBC TV

மைதானத்தில் இந்திய விமானப்படை சாகசங்கள் நிகழ்த்தியது போன்ற ஏராளமான நெருக்கடிகள் இந்திய அணி வீரர்களுக்கு கொடுக்கப்பட்டது. போதாத குறைக்கு பிரதமர்,உள்துறை அமைச்சர், பாஜாகவின் அகில இந்திய தலைவர் ஜெ.பி.நட்டா போன்ற அதிகார மையங்கள் நேரடியாக பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்து கொண்டு, நீங்கள் வெற்றிப் பெற்றே தீர வேண்டும் என்ற மன அழுத்தத்தை இந்திய வீரர்களுக்கு கொடுத்தனர்.

பிரதமர்,உள்துறை அமைச்சர், பாஜாகவின் அகில இந்திய தலைவர் ஜெ.பி.நட்டா
Pic Credit : ANI

இந்த ”ஐ.சி.சி கிரிக்கெட் உலக கோப்பை 2023” தொடரில் எவ்வித நெருக்கடியும் இல்லாமல் தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்கள் இறுதி போட்டியில் நெருக்கடிகளுக்கும், மன அழுத்தங்களுக்கும் உள்ளான நமது வீரர்கள் சுதந்திரமாக விளையாட முடியாமல் தவித்தனர். அதனால் முக்கியமான இறுதி போட்டியில் மோசமான தோல்வியை தழுவினார்கள்.

ஒரு வேளை இந்த உலக கோப்பையை இந்திய வீரர்கள் கைப்பற்றி இருந்தால் அந்த மைதானத்தில் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் வான்வெளியை கிழித்து உலகம் முழுவதும் கேட்டிருக்கலாம். இந்திய ராணுவ வாகனத்தில் வீரர்களை ஏற்றிக் கொண்டு விளையாட்டு மூலம் கிடைத்த வெற்றியை போர் மூலம் அடைந்த வெற்றியை போல் கொண்டாடி தீர்த்திருக்கலாம். ராமர் கோயிலுக்குள் கோப்பையை வைத்து அபிஷேகம் செய்திருக்கலாம்.

உலக கோப்பையை இந்திய வீரர்கள் கைப்பற்றி இருந்தால்

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில்  ஒவ்வொரு மாநிலத்திற்கும் கோப்பையை அனுப்பி சிறப்பு அபிஷேகம் செய்ய நிர்பந்தப் படுத்திருக்கலாம். இந்த வெற்றி நரேந்திர மோடி என்ற தனிமனிதர் பெற்ற வெற்றியாக  நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யப் பட்டிருக்கலாம். இந்த தோல்வியால் அது போன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை.

அகமதாபாத் மைதானத்தில் ரசிகர்கள் என்ற போர்வையில் 1,30,000 பாஜக தொண்டர்களை சீருடையில் அமர வைத்திருந்தது. அவர்களை இந்திய அணி வீரர்களுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்ப வைப்பது போன்ற இந்திய அரசு செய்திருந்த ஏற்பாடுகள் அனைத்தையும் அமைதியாக கவனித்திருந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், இந்திய ரசிகர்களின் ஆர்ப்பரிப்புகளை எங்கள் விளையாட்டு மூலம் அமைதி படுத்துவோம் என்று கூறியிருந்தார். அவருடைய அந்த பேச்சு மிகவும் ஆழமானது, அற்புதமானது. அவர் சொன்னதை ஆஸ்திரேலிய வீரர்கள் செய்து காட்டினார்கள். ரசிகர்கள் போர்வையில் அமர்ந்திருந்த பாஜக தொண்டர்களை தங்களுடைய ஆட்டத்தின் மூலம் அமைதி படுத்தினார்கள். அவர்களின் அடக்கத்தையும், ஆட்டத்தையும் இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களும் பாராட்டினார்கள்.

ஜ.சி.சி உலக போப்பை 2023 - நரேந்திர மோடிக்கு கற்று கொடுத்த பாடம்
Pic Credit : Twitter

கோப்பையை  வென்றதும், அந்த கோப்பையின் மீது ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ்  கால் போட்டு அமர்ந்துவிளையாட்டை விளையாட்டாக பாருங்கள், அதில் அரசியல் விளையாட்டு வேண்டாம் என்று இந்தியர்களுக்கு பாடம் நடத்தியிருக்கிறார்.

MUST READ