பசித்தால் எடுத்துக்கொள் காசு வேண்டாம்
“பசி எடுக்க மருந்தை கண்டு பிடித்த மனிதன் ஏனோ,
சில ஏழையின் பசியை போக்க, மருந்தை கண்டுபிடிக்க மறந்து விட்டான்”.
நம்மிடம் பசியென்று யாராவது கையேந்தி வருபவர்களுக்கு உணவு அல்லது காசை கொடுக்கிறோம் / ஆனால் இங்கே ஒரு இளைஞர் தினமும் 80 பேருக்கு உணவு வழங்கி வருகிறார்.
நாள்தோறும் 80 பேருக்கு உணவு அளிக்கிறார் என்றால் அவர் யார்? அவர் தொழிலதிபரா? பணக்காரரா? என்று நீங்கள் நினைக்கலாம். நம்முடைய அனைத்து கேள்விகளுக்கும் அவரே பதில் தருகிறார்.
நான் ஒரு பி.எஸ்.சி பட்டதாரி, ஆவடி இரயில் நிலையம் அருகே ஒரு கையேந்தி உணவகம் வைத்துள்ளேன். படித்து முடித்து வேலை கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் கையேந்தி உணவகத்தை தொடங்கவில்லை.
சிறு வயதில் இருந்தே உண்ணும் உணவை இலவசமாக கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன்.
அதை நீங்கள் வேலை பார்த்து கொண்டே இதை செய்யலாமே என்று நாம் எழுப்பிய கேள்விக்கு..
நான் படித்து முடித்தவுடன் தொழில் நுட்பத்துறையில் அதிக வருமானத்தில் வேலைகிடைத்தது.
அந்த வேலைக்கு சென்றிருந்தால் சம்பளம் வாங்கிய மறுநாள் மட்டுமே அனைவருக்கும் உணவு வழங்கி இருக்க முடியும். இல்லை என்றால் என்னிடம் பணம் உள்ளவரை மட்டுமே சிலருடைய பசியை போக்கியிருக்க முடியும்.
நான் சொந்தமாக சுய தொழில் தொடங்கியதனால் மட்டுமே இன்று வரை தினமும் 80 பேருக்கு உணவு அளிக்க முடிகிறது என்றார்.
தினமும் 80 பேருக்கு இலவச உணவு என்றால்? உங்களுக்கு உதவுபவர்கள் எத்தனைப் பேர் ? உங்கள் வருமானம் தான் என்ன?
இதை நான் மட்டும் தனியாக செய்யவில்லை என் நண்பர்கள் உதவியுடன் தான் செய்கிறேன். எனக்கு பெரிதும் வருமானம் கிடையாது, தினமும் கிடைக்கும் வருமானத்தின் பாதியை, உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவளிக்க எடுத்து வைப்பேன்.
“பசித்தால் எடுத்துக்கொள் காசு வேண்டாம்” என்று புதிதாக ஒரு Concept தொடக்கியுள்ளோம் அதுவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
உங்கள் இலக்கு தான் என்ன?
இப்பொழுது சென்னை மற்றும் கும்பகோணத்தில் மட்டும் தான் இந்த உதவியை நாங்கள் செய்து கொண்டு வருகிறோம். இந்தியா முழுவதும் பசி என்று தவிப்பவர்களுக்கு உணவு தர வேண்டும்.
நான் You Tube சேனல் வைத்துள்ளேன் இன்னும் 1000 Subscribers வர வில்லை, அதை எட்டிய பின் அதில் வரும் பணத்தை வைத்து இந்திய முழுவதும்
“பசி என்றால் எடுத்துக்கொள், காசு வேண்டாம்” என்ற திட்டத்தை பரப்ப திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
தமிழ்நாட்டிலேயே எத்தனையோ அனாதை இல்லங்கள் இருக்கின்றது, அதற்கும் நீங்கள் உதவலாமே?
அவர்களுக்கு உதவ நிறைய உதவும்கரங்கள் உள்ளது, ஆனால் சாலையோரம் உள்ளவர்களை பலரும் கண்டுக்கொள்வதில்லை, எனவே இவர்களுக்கு இலவச உணவு அளிக்க நாங்கள் முன்வந்தோம்.
அனாதை இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் நான் உதவ மாட்டேன் என்று சொல்ல மாட்டேன். கட்டாயம் ஒரு நாள் அவர்களுக்கும் நான் உதவுவேன் என்று கூறி மகிழ்ச்சியுடன் சென்றார்.
இவரிடம் பேசிய பின், இவரை போல நாமும் பலருக்கு உதவ வேண்டும் என்ற மனமாற்றதுடன், அவர் செய்து கொண்டிருக்கும் உதவிக்கு வாழ்த்துக்கூறி விடைப்பெற்றோம்.