Homeசெய்திகள்கட்டுரைஇந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்...மோடி மீடியாவின் சாயம் வெளுக்கும்! என்.கே. மூர்த்தி

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்…மோடி மீடியாவின் சாயம் வெளுக்கும்! என்.கே. மூர்த்தி

-

 

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்...மோடி மீடியாவின் சாயம் வெளுக்கும்! என்.கே. மூர்த்தி

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக பாஜக படுதோல்வி அடையும். தேர்தலுக்கு பின்னர் கருத்து கணிப்பு வெளியிட்ட மோடி மீடியாவின் சாயம் விரைவில் வெளுக்கும்.

கடந்த 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் தனித்து வெற்றிப் பெற்றது. பாஜக- என்டிஏ கூட்டணி 353 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 தேதி வரை 543 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்து விட்டது.

தேர்தல் தேதி அறிவிக்கும் போது அனைத்து மீடியாக்களும் கருத்து கணிப்பு வெளியிட்டது. அப்பொழுது தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களை பிடிக்கும் என்றும், பாஜக தனித்து 350 முதல் 370 வரை பிடிக்கும் என்றும் அந்த கருத்து கணிப்பில் தெரிவித்திருந்தனர்.

தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதில் இருந்து பாஜக கடந்த பத்தாண்டுகளில் செய்த சாதனைகளை எதையும் சொல்லி வாக்கு சேகரிக்க வில்லை. மாறாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை விமர்சனம் செய்வதாகக் கூறி, மோடி மத வெறுப்பு பிரச்சாரங்களை செய்து வந்தார். அவருடைய செல்வாக்கும், பாஜகவின் செல்வாக்கும் நாளுக்கு நாள் சரிந்து வந்ததை நாடே அறிந்தது. மூத்தப் பத்திரிகையாளர்கள் அனைவரும் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்காது என்று எழுதி வந்தனர்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்...மோடி மீடியாவின் சாயம் வெளுக்கும்! என்.கே. மூர்த்தி

சில நடுநிலையான, ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் பாஜக 230 முதல் 250 இடங்களில் வெற்றிப் பெறும் என்று கூறி வந்தார்கள். இந்த நிலையில் ஜூன் 1ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் முடிந்ததும் “எக்சிட் போல்” என்ற பெயரில் வடமாநில மீடியாக்கள் கருத்து கணிப்பை வெளியிட்டனர். அதில் தேர்தல் தேதி அறிவித்தப்போது வெளியிட்ட அதே கருத்து கணிப்புகளை கொஞ்சம் மாற்றி தேர்தல் முடிந்ததும் எக்சிட் போல் என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர்.

வடமாநில மீடியாக்களில் இந்தியா டுடே பிரபலமானது. அந்த ஊடகம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது. பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள லோக் ஜனசக்தி 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால் மோடி மீடியா கணிப்பில் லோக் ஜனசக்தி 6 இடங்களில் வெற்றி பெறும் என்று வெளியிட்டுள்ளது. போட்டியிடுவது 5 இடங்கள், வெற்றிப் பெறுவது 6 இடங்கள். இது என்ன கருத்து கணிப்பு.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உள்ள சிவசேனா 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் 13 தொகுதிகளில் உத்தவ்தாக்கரே தலைமையில் உள்ள சிவசேனாவுடன் நேருக்கு நேர் மோதுகிறது. இதில் ஷிண்டே கட்சிக்கு 10 இடங்களும் உத்தவ்தாக்கரே கட்சிக்கு 11 இடங்களும் கிடைக்கும் என்று வெளியிட்டுள்ளது. இதில் ஏதேனும் ஒரு கட்சி தோல்வி அடைந்தால் தான் இன்னொரு கட்சி அதிக இடங்களை பிடிக்க முடியும்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்...மோடி மீடியாவின் சாயம் வெளுக்கும்! என்.கே. மூர்த்தி

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் போட்டியிடுகிறது. ஆனால் 13-15 இடங்களில் காங்கிரஸ் கைப்பற்றும் என்று ஆஜ் தாக் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது எப்படி சாத்தியம் என்று அறையில் அமர்ந்து எழுதியவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

எக்சிட் போல் என்ற பெயரில் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் ஏகப்பட்ட குழப்பங்களும், முரண்பாடுகளும் உள்ளது.

அக்னி நியூஸ் என்ற ஊடகம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் பாஜக – தேசிய ஜனநாயகக் கூட்டணி 242 இடங்களில் வெற்றிப் பெறும் என்று வெளியிட்டுள்ளது. அதேபோன்று இந்தியா கூட்டணி 264 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் 37 தொகுதிகளை எந்தக் கட்சிகளும் சாராத கட்சிகள் வெற்றிப் பெறும் என்று வெளியிட்டுள்ளது.

2024 நாடாளுமன்றத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று அக்னி நியூஸ் கூறியுள்ளது.

மற்றொரு கணிப்பு பாஜக கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என்றும் இந்தியா கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்றும் டிபி லைவ் நியூஸ் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா கூட்டணி 255-290 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும் பாஜக கூட்டணி 207-241 இடங்களில் வெற்றி பெற்று தோல்வி அடையும் என்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. மற்ற கட்சிகள் 21-51 இடங்கள் வரை வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது. எனவே மோடி மீடியா வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகள் அனைத்தும் மோசடியானவை.140 கோடி மக்களையும் முட்டாளாக்கக் கூடியவை என்பது ஜூன் 4 தேதி தெரிந்துவிடும்.

MUST READ