Homeசெய்திகள்கட்டுரைகர்ப்பமானது சீமானா? நடிகையா? இதுக்கு பேரா ஆம்பள? ஷாலினி சரமாரி கேள்வி!

கர்ப்பமானது சீமானா? நடிகையா? இதுக்கு பேரா ஆம்பள? ஷாலினி சரமாரி கேள்வி!

-

- Advertisement -

நடிகை குறித்து சீமான் தெரிவித்து வரும் அவதூறு கருத்துக்கள் தமிழகத்திற்கு நிகழ்ந்த கலாச்சார ரீதியான மிகவும் மோசமான பின்னடைவு என்று மனநல மருத்துவர் ஷாலினி தெரிவித்துள்ளார்.

dr shalini
dr shalini

தன் மீது பாலியல் புகார் அளித்த நடிகை குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வரும் அவதூறுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக மனநல மருத்துவர் ஷாலினி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- நடிகை பாலியல் புகார் விவகாரத்தில் சீமான், நடிகை குறித்து தெரிவித்த கருத்துக்கள் என்பது தமிழகத்திற்கு நிகழ்ந்த கலாச்சார ரீதியான மிகவும் மோசமான பின்னடைவாக நான் கருதுகிறேன். ஒரு அரசியல் கட்சியின் தலைவர், ஒரு பெண் குறித்து இப்படி பேசுவது தமிழ்நாட்டிற்கு அவமரியாதையாகும். தமிழர் ஒருவர் ஒரு பெண்ணை குறித்து பேசக்கூடாத வார்த்தைகளை பேசுகிறார். சாதாரண நபர் அல்லது தெருக் கோடியில் இருக்கும் நபர் என்றால் அவர் பேசுவதை நாம் புறக்கணிக்கலாம். ஆனால் ஒரு கட்சியின் தலைவரே இப்படி பேசுகிறார் என்கிறபோது இன்னும் கொஞ்சம் கவனம் பெறுகிறது. சீமான் பேசுவதில் என்ன தவறு என்றால்? ஒரு ஆணும் பெண்ணும் உறவு வைத்துக்கொள்வது என்பது இயல்பான ஒன்றுதான். எல்லா ஆண்களும், பெண்களும் உறவு வைத்துக் கொள்ளதான் முயற்சி செய்கிறார்கள். இயற்கையின் உந்துதல் அது. ஆனால் அதற்கான சம்மதம் எப்படி வாங்குகிறோம் என்பது முக்கியம். நீயும், நானும் சேர்ந்து இருப்போம். பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட் ஆக. ஆனால் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். உனக்கும் சந்தோஷம், எனக்கும் சந்தோஷம் என்று சொல்லிவிட்டால் முடிந்துவிட்டது. அதை குறித்து கேட்பதற்கு அந்த பெண்ணிற்கும் உரிமை இல்லை.

ஆனால் திருமணம் செய்து கொள்வேன் என்று ஒருவருக்கு நம்பிக்கை கொடுத்துவிட்ட பிறகு, நான் உன்னைதான் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன் அதனால் உறவில் ஈடுபடலாம் என்று அந்த பெண்ணை ஆசைகாட்டி சம்மதம் வாங்கிவிட்ட பிறகு, அதெல்லாம் கிடையாது நீ பாலியல் தொழிலாளி என்று சொல்லிவிட்டார் என்றால் சீமான் எத்தனை அநியாயங்கள் செய்கிறார் என்று பாருங்கள். முதலில் சம்மதம் பெற்றதே பொய் சொல்லித்தான் பெற்றுள்ளார். அந்த பெண்ணை பயன்படுத்திக் கொள்கிறார். அதன் பின்னர் அந்த பெண்ணையே மோசமான பெண் என்று அவதூறு பரப்பி, உனக்கு எந்த உரிமையும் வழங்க முடியாது என்று சொன்னால், இது கண்ணியமில்லாத ஒரு கயமையை, சிறுமையைதான் குறிக்கிறது.

பிரபல நடிகருக்கு அப்பாவாக நடிக்கும் சீமான்..... வெளியான புதிய தகவல்!

நடிகை பாலியல் விவகாரத்தில் செய்தியாளர்களிடம் பேசும் சீமான் தனக்கு சாதகமான விஷயங்களை மட்டுமே பேசுகிறார். ஒரு ஆண் எப்போதும் கர்ப்பமாக போவது இல்லை. ஆனால் ஒரு பெண் கர்ப்பமாக கூடும். ஒரு ஆண்தான் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முடியும். பெண்ணால் எப்படி ஆணை பாலியல் வன்கொடுமை செய்ய முடியும்? என்னவாக இருந்தாலும் உயிரியல் ரீதியாக பெண்ணும் ஆணும் வேறு தான். சட்டம்தான் சமம். ஆனால் சீமான் அதை சமப்படுத்த முயற்சிக்கிறார். அந்த பெண் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக சமமானவர் என்று சொன்னாலும் பரவாயில்லை. மாறாக சீமான் தனது தரப்பை நியாயப்படுத்த இருவரும் சமம் என்று சொல்கிறார். இது கயமைதான். அவர் எப்போதும் கயமையில் ஊறியவர் தான். இப்போது புதிதாக அவரிடம் என்ன எதிர்பார்ப்பது?

ஒரு பெண்ணை 7 முறை கருக்கலைப்பு செய்ய வைத்த சாதனையாளன் நான்தான் என்று சீமான் சொல்கிறார். ஒரு ஆண் எத்தனை முறை, எத்தனை பெண்களை கருக்கலைக்க வைத்தார் என்பதை வைத்தா, நாம் அவருடைய வீரத்தை நாம் நிர்ணயிக்கிறோம்?. அத்தனை முறை ஒரு பெண்ணை துன்புறுத்தியுள்ளார். அத்தனை முறை ஓரு பெண்ணை ஏமாற்றியுள்ளார். அத்தனை முறை ஒரு பெண்ணை இதை செய்ய வைத்துள்ளார் என்று தான் நாம் யோசிப்போம். இன்னும் ஆன்மீகவாதிகள் என்றால், அந்த கருவினுடைய பாவாத்திற்கு சீமான் ஆளாகிவிட்டார். அவர் எவ்வளவு பெரிய பாவி என்று சொல்வார்கள். அதை ஒருவர் பெருமையாக நினைக்கிறார் என்றால் அதை என்ன என்று சொல்வது? மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும். அவர் கொஞ்சம் சரியில்லாதவர் என்று நாம் எப்போதிலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

வழக்கு மட்டுமின்றி சமூக ரீதியாகவும் சீமான் பெண்களை மோசமாக பேசுவதாக மகளிர் அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். பெண்களுக்கு எந்த அளவிற்கு சமுதாயம் மரியாதை கொடுக்கிறதோ அந்த அளவுக்கு சமுதாயம் நல்லபடியாக இருக்கும். ஒரு ஆண் பெண்ணை தாக்குவதோ, அல்லது மற்றொருவர் தாக்குதல் நடத்த பார்சல் கட்டி அனுப்பவதெல்லாம் மிகவும் ஆபத்தான செயல்கள். அந்த சமுதாயமே அழிந்துவிடும். ஏனென்றால் பெண் இல்லாவிட்டால் எந்த ஜீவராசியும் பிழைக்காது. அதனால்தான் மாடு கன்று போட்டால் ஆண் கன்றை கொடுத்துவிட்டு, பசுங்கன்றைத்தான் வீட்டில் வைத்துக்கொள்வார்கள். ஆணை பாதுகாப்பது முக்கியம். ஆனால் பெண்ணை பணயம் வைத்து ஆணை காப்பாற்றுவது சரிபட்டு வராது

கலாச்சார ரீதியாக நாம் 2000 வருடங்களாக இதைதான் செய்துள்ளோம். பெண்ணை பழிகொடுப்பது என்பது முட்டாள்த்தனமானது என்று  தெரியாத கலாச்சாரம் நம்முடையது. அனைத்து நாடுகளையும் கொள்ளையடித்த கிழக்கு இந்திய கம்பெனியினர், இங்குள்ள பெண்களை எரிப்பதை கண்டு சதி செய்யக்கூடாது என்று சட்டம் கொண்டு வருகின்றனர். நம்மை கொள்ளையடிக்க வந்தவர்களுக்கு கூட நம்முடைய பெண்கள் மீது கரிசனம் இருந்துள்ளது. ஏனென்றால் இவர்கள் எல்லாம் நாம் செய்வது தப்பு என்றே தெரியாமல் குட்டையிலேயே ஊறியதால், இது தேவையில்லாத மட்டை என்று அவர்களுக்கு தெரியவில்லை. அப்படிதான் சீமானும் இருக்கிறார். பெண்களை இழிவுபடுத்துவது, அவர்கள் மீதே பழி சுமத்துவது. இதெல்லாம் ஆண்மையின் பெருக்கு என்று நினைத்துக்கொள்வது வேறு.

என்னை கேள்வி கேட்க யார் யோக்கியர்கள் உள்ளனர் என சீமான் கேட்கிறார். ஏன் யாருமே யோக்கியர்கள் இல்லையா? அவர்கள் கேள்வி கேட்கமாட்டார்களா? எல்லோரும் தன்னைப்போன்றே மோசமானவர்களாக இருப்பார்கள் என்று அவர் நினைத்து க்கொணடார் என்றால் அது அவருடைய நோய். அவர் அப்படிதான் யோசிப்பார். அப்படி நோயுற்ற மனிதரை ஏன் கட்சி தலைவராக வைத்துள்ளீர்கள்? பொதுதளத்தில் கொண்டுவந்து ஏன் எங்களுக்கு காட்டுகிறீர்கள். மனநல மருத்துவத்தில் சூடோலோபியா பெண்டாஸ்டிகா என்ற ஒரு நோய் உள்ளது. அதாவது வாயை திறந்தாலே பொய் பொய்யாக பேசுவார்கள். சீமான் அதற்கு முன் உதாரணமாக உள்ளார். அவருக்கு இதுபோன்ற பிரச்சினை உள்ளது. அவரை நம்பக்கூடாது என்ற சொன்னால், அவர்களை எல்லாம் கொதறுவார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ