Homeசெய்திகள்கட்டுரை"ISRO தான் எங்கள் இலக்கு"... அறிவியல் கண்டுபிடிப்புகளில் அசத்தும் கள்ளக்குறிச்சி அரசுப்பள்ளி மாணவர்கள்!

“ISRO தான் எங்கள் இலக்கு”… அறிவியல் கண்டுபிடிப்புகளில் அசத்தும் கள்ளக்குறிச்சி அரசுப்பள்ளி மாணவர்கள்!

-

- Advertisement -
kadalkanni

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகராசபுரம் அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக பல்வேறு ரோபோக்களை உருவாக்கி அசத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திற்கு உட்பட்டது தியாகராசபுரம் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தியாகராஜபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், தியாகராசபுரம் கிராமத்தை சேர்ந்த இடதுசாரி சிந்தனையாளரான திருப்பதி என்பவர் அரசுப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில், தான் கடந்த 6ஆம் தேதி அன்று தியாகராசபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோர் நேரில் சென்று மாணவர்களின் கல்வித் திறன் குறித்தும், ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் விதம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தங்கள் பள்ளிக்கு வந்ததால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் புதிய புத்துணர்ச்சியும், கற்றலில் பெரிய அளவில் உத்வேகம் ஏற்பட்டுள்ளதாக இடதுசாரி சிந்தனையாளர் திருப்பதி தெவிரித்துள்ளார்.

ஆட்சியரின் ஆய்விற்கு பின்னர் அவர் பள்ளிக்கு சென்றிருந்தபோது, ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிவசக்தி என்ற மாணவர், “தலைவரே, கலெக்டரை கூட்டி வந்திங்க, ரோபோ செய்வதற்கு எனக்கு ஏதேனும் செய்ங்க” என்று திக்கி திக்கி பேசினான். முதலில் அவருக்கு புரியாத நிலையில், பின்னர் மாணவரின் அருகில் சென்று கேட்டபோது, அதே வகுப்பில் படிக்கும் இன்னொரு மாணவனும் தானும் ராக்கெட் செய்ய வேண்டும் என கூறினார்.  இப்படிபட்ட இளம் விஞ்ஞானிகளை தங்கள் ஊர் இதுநாள் வரை அடையாளம் காணாமல் இருந்ததை எண்ணி வருந்திய திருப்பதி, பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட கற்றல் உபகரணங்களையும், அறிவியலின் அறியப்படாதவைகளை மாணவர்கள் வெளி உலகிற்கு காட்ட வேண்டும் என்பதற்காக வேறு சில பொருட்களையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இதில் மாணவர்கள் பல்வேறு விதமான ரோபோக்களை வடிவமைத்து அசத்தியுள்ளனர். 4  கால்களில் நகரும் காயில் ரோபோ, பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்செல்லும் ரோபோக்கள் என பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி அசத்தியுள்ளனர். மேலும், ஒன்று முதல்  8ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் இலக்கு நிர்ணயித்து கற்றல் விளைவுகளில் முன்னேற்றம் காண்கிறார்கள். அத்துடன் குழந்தைகளும் மகிழ்ச்சியோடும் ஆய்வு நோக்கோடும் கல்வியை கற்க தொடங்கியுள்ளனர்.

இது குறித்து பேசி இடதுசாரி சிந்தனையாளர் திருப்பதி, தங்கள் பள்ளி மாணவர்கள், ஒரு காலத்தில் ISRO போன்ற விண்வெளி ஆராய்ச்சியிலும், DRDO போன்ற ராணுவ, அணு ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், உயிரியியல் ஆராயச்சி போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றுவதோடு தலைமை பொறுப்பையும் ஏற்பார்கள் என்று நம்பிக்கை தெரித்துள்ளார். அப்போது தான் உயிருடன் இல்லாவிட்டாலும், அவர்களது மனதில் நானிருப்பேன் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

MUST READ