Homeசெய்திகள்கட்டுரைரொம்ப கவனமாக இருக்கனும்..!! இனிமேல் தான் இருக்கு விஜய்க்கு..!! எச்சரிக்கும் மூத்த பத்திரிக்கையாளர்....

ரொம்ப கவனமாக இருக்கனும்..!! இனிமேல் தான் இருக்கு விஜய்க்கு..!! எச்சரிக்கும் மூத்த பத்திரிக்கையாளர்….

-

- Advertisement -
விஜய்
தவெக தலைவர் விஜய் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், மக்கள் அனைத்து நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன், “தமிழக அரசியல் களம் 200 தொகுதிகளை மையமாக நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. 2016 தேர்தலில் ஜெயலலிதா அவ்வாறு தான் வெற்றி பெற்றார். ஆனால் தவெக 118 இடங்களை வெல்வோம் என்பது மிகவும் நகைச்சுவையான ஒன்று. 234 தொகுதிகளை வெல்வோம்; எனக்கு எதிரிகளே இல்லை என்று சொல்வதெல்லாம் திமிரு கலந்த தன்னம்பிக்கை; திமிரு என்றும் சொல்லிவிட முடியாது. அதேநேரம் ‘கூட்டணிக் கட்சிகளை நம்பி இறுமாப்புடன் 200’ என திமுகவை கூறுவது பொருத்தமற்ற வார்த்தை மற்றும் தவறான விமர்சனமாகும்.
மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன்

ஏனென்றால் விஜய்க்கு எந்த அளவிற்கு ஆதரவு உள்ளது; என்ன சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது; வேட்பாளர்கள் யார்? யாரை எந்த தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பது என எதுவுமே தெரியாது. நாங்கள் ஆட்சி அமைப்போம்; அதுவும் ஆட்சி தனித்தே அமைப்போம் என்கிறார். அதேநேரம் எங்களை நம்பி வருவோருக்கு ஆதரவு கொடுப்போம் என்கிறார்கள். ஏன் எந்த நேரத்திலும் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம்; வெற்றியோ, தோல்வியோ தனித்தே காண்போம் என்று விஜய்யால் சொல்ல முடியுமா? அவ்வாறு சொல்ல தயங்குகிறார். அதேபோல் மற்ற கட்சிகளை பற்றி சொல்ல விஜய்க்கு எந்த தகுதியும் இல்லை. அனைத்துக் கட்சிகளும் தனித்து நின்று உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் தனித்தே வெற்றி பெறுவோம் என கூற முடியுமா? ஆகையால் திமுகவை பற்றி விமர்சிப்பது மிகவும் தவறானது.” என்றார்.

மேலும், “பாமக, தவெக, நாதக ஆகிய மூன்று கட்சிகள் இணைந்தால் மட்டுமே வலுவான கூட்டணி கட்சி அமையும் என்று கூறும் எஸ்.பி.லட்சுமணன், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் கூட்டணிக்கு ஒரு வாய்ப்பாக அமைவது சந்தேகம் தான் என்கிறார். ஏனென்றால், இந்த ஆட்சிக்காலம் முடிய இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் சில கட்சிகள் தேர்தலை புறக்கணிக்கலாம்; இன்னும் சில கட்சிகள் போட்டியிடுவதை தவிர்க்கலாம் என்பது உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. ஆனாலும் அதிமுக இந்தத் தேர்தலை புறக்கணித்தால் மிகப்பெரிய பலவீனம் ஆகிவிடும். விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணித்தது போல் இந்த தேர்தலையும் புறக்கணித்தால் கட்சியின் நிலைமை மிகவும் மோசமாக மாற வாய்ப்புள்ளது என்கிறார்.
விஜய் - ஆதவ் அர்ஜுனாவிடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை, ஆதவ் அர்ஜுனா பெரிய பதவி வகிக்க பணம் மற்றும் முழு உழைப்பை செலவழித்து இருக்கலாம். ஆனால் அவர் அரசியல் தன்மையற்றவர். வன்னிய அரசுக்கு தனி கட்டுப்பாட்டு உள்ளது. அவர்கள் தன் எல்லையை தாண்டி பேசுவதில்லை. ஏனெனில் திமுக மீது அனைத்து கட்சியினருக்கும் கோபம் உள்ளது. வன்னிய அரசுக்கும் தனி கட்டுப்பாடு உள்ளது; ஆனால் அவர்கள் தங்கள் எல்லையை தாண்டி பேசுவதில்லை. ஆனால் ஆதவ் அர்ஜுனாவுக்கு எவ்வாறு பேசுவது, எங்கு பேசுவது, எந்த இடத்தில் பேச வேண்டும் என்கிற அரசியல் தன்மையை கொண்டுள்ளனர். ஆனால் ஆதவ் அர்ஜுனாவிடம் அந்த தன்மை இல்லை. அதேநேரம் விசிக – திமுக கூட்டணியை தக்க வைக்க வேண்டும் என திருமாவளவன் நினைக்கிறார். ஆகையால் தான் ஆதவ் அர்ஜுனா செய்த தவறை சுட்டிக்காட்டி அவரை பதவியில் இருந்தும் நீக்கி, திமுகவை விமர்சிக்கும் யாருக்கும் தனது கட்சியில் இடமில்லை என தெரிவித்திருக்கிறார்.

விஜய் - கீர்த்தி சுரேஷ் திருமணம்
விஜய்யின் ஒவ்வொரு செயல்களும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. அவர் இனி கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். புத்தக வெளியிட்டின் போது விஜய்யின் பேச்சுக்கள் 2 நாட்கள் மட்டுமே பேசப்பட்டது. அந்த 2 நாட்கள் பேச்சும் எந்த அரசியல் கருத்துக்களையும் கூறவில்லை. ஆனால் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்காக திரிஷாவுடன் தனி விமானத்தில் லண்டன் சென்ரது மட்டும் பெரும் பேசுபொருளான ஆனது. ஏனென்றால் நம்மை ஆளுகின்ற அரசு, ஆளப்போகும் அரசு என்ன செய்கிறது என அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் அனைவரும் கூர்ந்து கவனிக்கிறார்கள்.


விஜய் முதலில் சினிமா என்ற நாடக மேடையை விட்டு அரசியலுக்கு வரவேண்டும். தன்னுடைய வாக்கு சதவீதம் என்ன என்று நிருபிக்க வேண்டும். உதாரணத்திற்கு
அமமுக கட்சியின் தலைவர் TTV.தினகரனுக்கு 5% வாக்குகள் உள்ளது. நதக கட்சியின் தலைவர் சீமானுக்கு 16% வாக்குகள் உள்ளது. ஆனால் விஜய் இதுவரை எந்த தேர்தலிலும் நிற்கவில்லை. ஒவ்வொரு குடும்பங்களிலும் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் விஜய் ரசிகராக மட்டுமே உள்ளாரே தவிர, அவர்கள் இவருக்கு ஓட்டு போடுவார்களா? போட மாட்டார்களா? என்பது எப்படி சாத்தியமாகும். அதனால் முதலில் அவர் அரசியலில் நின்று தனது வாக்குகளை என்ன என்று நிரூபிக்க வேண்டும்.” என எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்திருக்கிறார்.

MUST READ