Homeசெய்திகள்கட்டுரைஆழ்மனதிற்கு கட்டளையிடுவோம் - மாற்றம் முன்னேற்றம் - 10

ஆழ்மனதிற்கு கட்டளையிடுவோம் – மாற்றம் முன்னேற்றம் – 10

-

- Advertisement -

10.ஆழ்மனதிற்கு கட்டளையிடுவோம் – என்.கே.மூர்த்தி 

மனிதனின் மூளை பிறப்பின் போது 350 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது. முதிர்ச்சி அடைந்த மனிதனின் மூளை 1450 கிராம் எடை கொண்டது. அதாவது நம்முடைய மூளை உடல் விகிதம் ஒன்றுக்கு ஐம்பதாக இருக்கிறது. (1:50) இது சிலருக்கு மாறுபடலாம்.

ஆழ்மனதிற்கு கட்டளையிடுவோம் - மாற்றம் முன்னேற்றம் - 10
ஆழ்மனம்

ஒரு மூளை 1000 கிராமுக்கு குறைவாக இருந்தால் நுண்ணறிவு கொஞ்சம் குறைவாக இருக்கும். மூளையில் பிரச்சினை என்று கூறுவார்கள். நமது மூளையை பிரச்சினை இல்லாமல்  இயக்கிக்கொண்டிருப்பது நமது ஆழ்மனம் என்பதை மீண்டும் கவனத்தில் கொள்வோம்.

ஆழ்மனம் எழுச்சி – மாற்றம் முன்னேற்றம் – 9

நமது ஆழ்மனம் கோடிக்கணக்கான செல்களை உற்பத்தி செய்யவும், தீயவற்றை அழிக்கவும் செய்கிற வலிமை கொண்டது. ஆழ்மனதிற்கு தேவையான சக்தி மிக்க லட்சியங்களை மனத்திரையாக கொடுத்துக் கொண்டே இருந்தால் மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு.

திரும்ப திரும்ப ஆழ்மனதிற்கு கட்டளையிடும் போது மூளை சுறுசுறுப்பாக கட்டளையை நிறைவேற்றும். இது தான் நடைமுறை விதி, இது தான் வெற்றிக்கு முதன்மையான வழி.

கட்டளை என்பது சுருக்கமானதாக இருக்க வேண்டும். நான்கு ஐந்து வார்த்தைகள் தாண்டாமல் இருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு நான் லட்சாதிபதியாக வேண்டும். தேர்வில் முதல் மதிப்பெண் பெற வேண்டும். மக்கள் போற்றும் மாமனிதராக வேண்டும்.  இப்படி தனது சுருக்கமான கட்டளைகளை ஆழ்மனதிற்கு செலுத்த வேண்டும்.

ஆழ்மனதிற்கு கட்டளையிடுவோம் - மாற்றம் முன்னேற்றம் - 10
ஆழ்மனதிற்கு செலுத்த வேண்டும்

இந்த இரண்டு நொடி கட்டளைகளை எப்படி ஆழ்மனத்தில் பதிவு செய்வது?

நமது வேலைக்கு இடையே கிடைக்கும் சிறிய ஓய்வு நேரத்தில் மனதிற்கு கட்டளையிட வேண்டும். உடற் பயிற்சியின் போது கட்டளையிட வேண்டும். அமைதியான தியானத்தின் போது கட்டளையிட வேண்டும்.

நம் வாழ்க்கையே ஒரு அனுபவம் தான் – மாற்றம் முன்னேற்றம் – 6

ஒரு நாளைக்கு இருபது நிமிடம் தியானம் என்றால் அது கட்டளையாகவே இருக்கட்டும். குளிக்கும் போது, உடையணியும் போது என்று எப்பொழுதெல்லாம் மனது வேறு திசையில் செல்கிறதோ அப்பொழுதெல்லாம் கட்டளையிட்டு பழகுவோம்.

நமது ஆழ்மனதிற்கு செலுத்துகின்ற கட்டளைகளை பொறுத்து நமது மூளை வாய்ப்புகளை ஏற்படுத்தும். அதுவே வெற்றியை சுலபமாக்கும்.  இதை செய்தால் வாழ்க்கையில் அற்புதங்களும், ஆச்சரியங்களும் ஏற்படுவதை காணலாம்.

                                                                                      தொடரும்…

MUST READ