Homeசெய்திகள்கட்டுரைஹெச்.ராஜா முகத்தில் சீமான் பாரு! பாண்டேவுக்கு கிடைத்த கலாய்! விளாசும் சுப.வீரபாண்டியன்!

ஹெச்.ராஜா முகத்தில் சீமான் பாரு! பாண்டேவுக்கு கிடைத்த கலாய்! விளாசும் சுப.வீரபாண்டியன்!

-

- Advertisement -

தந்தை பெரியாரை இழிவு படுத்தி பேச ஒருவர் கிடைத்திருக்கிறார் என்று பாண்டே தரப்பினர் மகிழ்ச்சி அடைவதாக திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பேசியவர்கள் தான் பிரபாகரனின் வாரிசுகளா? - சுப. வீரப்பாண்டியன்

சாணக்யா ஆண்டுவிழாவில் ரங்கராஜ் பாண்டே, சீமான் ஆகியோர் பேசியதன் அரசியல் குறித்து பேராசிரியர் சுப.வீரபாண்டியன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியதாவது:- சாணக்யா நிறுவன ஆண்டுவிழாவில் பேசிய ரங்கராஜ் பாண்டே, ஒரு காலத்தில் ஹெச்.ராஜா, சீமான் பேசுவது போலத்தான் பேசினார். ஆனால் அவர் சார்ந்திருந்த சாதியின் காரணமாகவே அவர் ஒதுக்கப்பட்டார். அந்த கருத்துக்கள் ஏற்கபடவில்லை. இன்று சீமான் பேசுவது பெரியளவில் விவாதிக்கப்படுவதாக சொல்கிறார். பாண்டே தன்னை நடுநிலையான ஊடகவியலாளர் என்பார். ஆனால் அவரே அதை நம்புவது இல்லை. சீமான் தன்னை தமிழ் தேசியர் என்று சொல்வார். ஆனால் இரண்டுமே உண்மை கிடையாது. அவர் இருவரும் ஆர்எஸ்எஸ்-காரர்கள் ஆவார்கள். ஆனாலும் ஒரு வேறுபாடு உள்ளது. பாண்டே ஒரு குறிப்பிட்ட சாதியின் ஆதிக்கம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அதுதான் சனாதனமாகும். சீமான், அப்படி ஆர்எஸ்எஸ் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டவர் கிடையாது. கூலிக்காக அவர் பேசுகிறார். சீமானின் கருத்து நாளைக்கே மாறலாம். வேறு இடத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டார் என்பது அதன் பொருளாகும். ஏனென்றால் சீமான் எந்த இடத்திலும் எந்த கருத்தையும் நிலையாக பேசியவரும் இல்லை. எந்த கருத்தையும் அறிந்து கொண்டு பேசியவரும் இல்லை.

நான் படம் பார்த்து பேசுபவன் அல்ல. படித்துவிட்டு பேசுபவன் என்று சீமான் சொல்கிறார். பெரியாரை படித்துவிட்டு, யாரோ சொல்லி பேசுறேன் என்று நினைக்கிறார்கள் என சீமான் கூறுகிறார். அதுவே உங்களுடைய தரத்திற்கு குறைவாகும். நீங்கள் அந்த இடத்தில்தான் இருக்கிறீர்கள் என்று பொருளாகும். சீமான் நான் பெரியாரை படித்துவிட்டு பேசுகிறேன் என்கிறார். அப்படி பெரியாரை படித்திருந்தால் இவர் திருந்தி இருப்பாரே. பெரியாரை உண்மையாக படித்திருந்தால் இத்தனை இழி குணமும், சுய நலமும் வந்திருக்காதே. என்னை பொருத்தவரை சீமான் எதையுமே சரியாக படித்ததாக தெரியவில்லை. எந்த ஒன்றையும். தமிழ் தேசியத்தை பற்றியே அவரால் பேச முடியாது. எந்த ஒன்றையும் யாரிடத்தில் இருந்தோ கடன் வாங்கிக்கொண்டு பேசுகிறார். இங்கே சங்கிகள் சொல்வதை கேட்டு பேசுவது. அதற்கு ஏற்ற வகையில் கூடுதலாக, குறைவாக பேசுகிறார் என்றால், அவருக்கான வருமானங்கள் கூடுதல் குறைவாக இருக்கலாம். எனவே சீமானை எந்த கொள்கை சார்ந்தும் என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் பாண்டே முழுக்க முழுக்க கொள்கை சார்ந்தவர். அவரது ஒவ்வொரு சொல்லிலும் ஒரு நச்சுத்தன்மை, ஒரு விஷம் இருக்கிறது. எப்படி என்னை பார்த்து அப்படி சொல்லலாம் என்கிறார். ஆனால் அதுதான் உண்மையாகும்.

அவர் தாம் பெரியார்!

இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டையன் வந்ததையும் சாதாரணமாக பார்க்க முடியாது. அவர் எம்.ஜி.ஆர் பற்றியும், ஜெயலலிதா பற்றியும் பேசினார். மறந்தும் எடப்பாடி பற்றி பேசவில்லை. கட்சி பற்றி பேசவில்லை. கொள்கை பற்றி பேசவில்லை. தனிப்பட்ட 2 தலைவர்கள் பற்றி பேசினார். அவர்களை தாண்டி மோடியையும் பாராட்டி பேசினார். தன்னுடைய பாதை தெளிவானது என்கிறார். ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகத்தான் அவர்கள் 3 பேரும் என்றனர். விமர்சனங்களை தவிர்க்க தான், பாண்டே திமுக மேடைக்கு போய்விட்டு வந்தார் என்று சொல்கிறார்கள். இதனை நான் நேரடியாகவே சொல்லிவிட்டேன் திமுக மேடைக்கு பாண்டே சென்று வந்தது, அவருக்கு சில நன்மைகளை பயக்கும். எங்கே கூப்பிட்டாலும் அவர்கள் செல்வார்கள். அங்கு சென்று அதே விஷத்தை பதிப்பார்கள். அவரது பேச்சின் ஒவ்வொரு வரியிலும் திமுகவுக்கு எதிராகத்தான் மறைமுகமாக அமைந்திருக்கிறது. இது ஒருவிதமாக கூட்டணிதான். நாம் கவனிக்க வேண்டிய இடம் ஒன்றுதான் பாண்டே பேசும்போது சொல்கிறார், தேன் கூட்டில் கைவைக்கிறோம் என்று தெரிந்துதான் சீமான் பெரியார் மீது கை வைத்தார். அபரிமிதமான துணிச்சல். அந்த பாராட்டை கவனியுங்கள். இவர்களுக்கான பெரிய மகிழ்ச்சி பெரியாரை இழிவுபடுத்தி பேச ஒருவர் கிடைத்திருக்கிறார் என்பதுதான். அன்றைய கூட்டத்தில் சீமானின் பேச்சு என்பது முழுக்க திமுகவுக்கு எதிரானது. வேறு எதுவும் இல்லை.

அதிமுகவில் இருப்பவர்கள் பெரியார் குறித்து படித்திருந்தால் தான் ஏற்பதா? எதிர்ப்பதா? என்று அவர்களுக்கு தெரியும். எடப்பாடியை பெரியார் பற்றி பேச சொன்னால் ஒரு மணி நேரம் பேசுவாரா? கொள்கைக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பு இல்லை. அது ஒரு கட்சியாக வைத்துக்கொண்டு தேர்தல், அரசியல் என்று இருக்கிறார்கள். செங்கோட்டையனுக்கு, குறைந்தபட்சம் திராவிட இயக்கத்தை இவர்கள் எதிர்த்து பேசும் போதாவது கோபம் வந்திருக்க வேண்டும். அவர் திராவிட இயக்கத்தில் உண்மையாக இருந்தால் வரும். ஆனால் அவரே இப்போது எங்கே போய்விட்டார் அல்லவா? இவர்கள் பெரியாரை தாக்குவதற்கு ஒரு அடியாளை தயார் செய்துள்ளார்கள். அவ்வளவுதான் சீமான். வரலாற்றில் சீமான் ஒருநாளும் நிற்க முடியாது. ஆனால் நூற்றாண்டுகளுக்கு பெரியார் நிற்பார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ