Homeசெய்திகள்கட்டுரைகாதல்  உன்னதமானது – என்.கே. மூர்த்தி

காதல்  உன்னதமானது – என்.கே. மூர்த்தி

-

காதல்  உன்னதமானது – என்.கே. மூர்த்தி

காதல்…. என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதெல்லாம் உடம்பில் ஒரு விதமான சிலிர்ப்பை ஏற்படுத்தும். காதல்… என்ற வார்த்தை காதுகளில் விழும்போது வரண்டு போன பூமிக்கு உயிர் கொடுத்த மழை நீரை போன்று மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது.

காதல் என்ற கண்ணிற்கு தெரியாத உணர்வுகளில் தான் மனித இனம் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது.

காதல்  உன்னதமானது – என்.கே. மூர்த்தி

காதல்…ஒருவருக்கு வாலிபப் பருவத்திலும் வரலாம், வயதானப் பின்னரும் வரலாம். ஆனால் காதலிக்காத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். “சுப்ரமணியப் புரம்” திரைப்படத்தில் வரும் கதாநாயகி சுவாதியின் பார்வையைப் போல் ஒரு கடைக்கண் பார்வை பரிமாற்றமே போதும், அப்படியே குற்றாலச் சாரல் உடல் முழுவதும் தெளித்த  சிலிர்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.

அவன் மீது அவள் சின்னச் சிரிப்பை மட்டும் சிந்தினால் போதும்; உறங்கிக் கிடந்த அவனுடைய உள்ளம் தீப்பிடித்து எழுந்துக் கொள்ளும்.

காதல் உன்னதமானது – என்.கே. மூர்த்தி

மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகிறது. ஆனால் காதல் மட்டும் இன்றும் இளமையாகவே இருக்கிறது.

காதலுக்காக காத்திருப்பதில் மட்டும் தனி சுகம் இருக்கிறது. நொடிகள் நிமிடங்கள் ஆகின்றன. அவளோடு சேர்ந்திருக்கும் போது மணிகள் நொடிகள் ஆகின்றன. காதல் என்பது தனி உணர்வு.

உலகில் உள்ள அத்தனை சித்தாந்தங்களும், காதல் என்ற ஒற்றை சொல்லில் அடிப்பட்டு போகிறது.

காதல்  உன்னதமானது – என்.கே. மூர்த்தி

பகுத்தறிவு சிந்தனையை கூட மழுங்க செய்யும் ஆற்றல் காதலுக்கு இருக்கிறது.

மனிதன் பிறக்கும் போது பாதி மனிதனாகத் தான் பிறக்கிறான். காதலிக்கும் போது தான் முழு மனிதனாக வளர்ச்சி அடைகிறான்.

காதலிப்பவர்கள் சோர்வு அடைவதில்லை. உடல்வழியாக மனமும் மனம் வழியாக உடலும் மூழ்கி இன்பத்தை அனுபவிக்கின்ற உறவு. அதனால் அது சோர்வு அடைவதில்லை.

காதல்  உன்னதமானது – என்.கே. மூர்த்திஅவனுக்காக அவளும், அவளுக்காக அவனும் விட்டு கொடுத்து தோற்றுப் போன காதல் ஏராளம். அந்த காதல் எப்பொழுதும் உயிரோட்டத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் மேன்மையான காதல்.

தவறான புரிதலே காதலில் பலர் கால் தடுக்கி விழக் காரணம். மனம் பாதித்து, சிந்தனை சிதறி மனநோயாளியாக அறியப்படும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் காதலை தவறாக புரிந்தவர்களாக இருக்கிறார்கள்.

இழந்த காதல், மறுக்கப்பட்ட காதல், வஞ்சிக்கப்பட்ட காதல், நெறிமுறை தவறிய காதல் என்று காதலை தவறாக புரிந்து பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்.

கவர்ச்சி வேறு; காதல் வேறு.

கவர்ச்சியை காதலாக எடுத்துக் கொள்பவர்கள் அதிகம்.

அவர்களே மனநிலை பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

கவர்ச்சி கண்களோடு நின்றுவிடும்

காதல் உள்ளத்துக்குள் ஊடுருவும்.

காதல் உன்னதமானது – என்.கே. மூர்த்தி

விருப்பம் இல்லாதவர்களை வீண் வம்புக்கு இழுத்து ஆளுமை செய்ய மனித இனம் மன்றாடுகிறது.

ஒருவர் மனதில் இருக்கும் விருப்பத்தை இன்னொருவர் மனதிற்கு கடத்தும் போராட்டம் பெரும் சித்ரவதை.

காதல் என்றால் என்ன என்பதை தனது குழந்தையிடம் தோராயமாக சொல்ல தெரிந்த பெற்றோர்களே நேர்மையானவர்கள்.

காதல் உணரக்கூடியது. உரைக்கவோ, விளக்கவோ கூடியது அல்ல.

காதலுக்குப் பொருள் சொல்ல முயன்ற எல்லோரும் தோற்றுப் போனவர்கள் தான்.

மாறன் பொறையினார் என்ற புலவர் வரண்ட பாலை நிலத்தில் பயணம் செய்கிறார்.

அவருடைய கண்களுக்கு இரண்டு மான்கள் தென்படுகிறது.

ஒன்று பெண் மான்; இன்னொன்று அதன் காதலன்.

காதல்  உன்னதமானது – என்.கே. மூர்த்தி

இரண்டிற்கும் தாகம் அதிகமாக இருந்தது. தண்ணீரை தேடி அலைந்தது. நெடுந் தூரத்தில் கண்ணில் பட்டது ஒரு நீர் குட்டை. அதிலும் சிறிதளவு மட்டுமே தண்ணீர் இருந்தது. அது ஒரு மானுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. தாகம் தாங்க முடியாமல் இரண்டு மான்களும் நீரில் வாயை வைக்கின்றன.

நீண்ட நேரம் கடந்தும் குட்டையில் இருந்த நீர் குறையவில்லை.

இரண்டு மானும் நீரை குடிக்க வில்லை; குடிப்பதைப் போல் பாசாங்கு செய்கிறது.

பெண் மான் குடிக்கட்டும் என்று ஆண் மானும்; ஆண் மான் குடிக்கட்டும் என்று பெண் மானும் விட்டு கொடுத்து காத்திருக்கிறது.

கடைசிவரை குட்டையில் இருந்த நீர் குறையவே இல்லை.

இதுவே காதலர் உள்ளம் என்கிறார் மாறன் பொறையினார்.

MUST READ