பெரியார் விவகாரத்தில் சீமான் ஒரு பொய்யர் என அம்பலப்பட்டு போய்விட்டார் என்றும், விடுதலைப்புலிகள் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டதால் இனி அவருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் தருவதை நிறுத்திவிடுவார்கள் என்றும் மனநல ஆற்றுப்படுத்துனர் வில்லவன் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பெரியார் விவகாரத்தில் சீமானின் அவதூறுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக விடுதலைப்புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழ விடுதலையை சொல்லி அவருக்கு வெளி நாடுகளில் இருந்து நிதி வழங்குவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த அறிக்கையின் பின்னணி குறித்து பிரபல யூடியுப் சேனலுக்கு வில்லவன் ராமதாஸ் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது :- சீமான் ஒவ்வொன்றாக இழந்துக் கொண்டிருக்கிறார். இனி புலம்பெயர் தமிழர்கள் சீமானுக்கு பணம் வழங்க மாட்டார்கள். இப்போது சீமானை பார்த்துக்கொள்ள ஹெச்.ராஜா, பாஜக போன்ற அமைப்புகள் வந்துவிட்டது. சீமான் ஒரு பொய்யர் என்று மறைமுகமாக நாம் தமிழர் கட்சியினரே ஒப்புக்கொண்டுவிட்டனர். பிரபாகரனை பார்க்காவிட்டால் என்ன, 35 லட்சம் வாக்குகள் வாங்கி விட்டோம் என்கின்றனர். நான் எங்க அண்ணனை பார்க்கவே இல்லை என்று சீமானும் ஒப்புக்கொண்டுள்ளார். விவாதத்திற்கு வருகிறோம் என நாதக-வே சொல்லிவிட்டு, இப்போது கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் இருந்து பேச வேண்டும். அதுவும் கி.வீரமணி, மு.க.ஸ்டாலின்தான் வர வேண்டும் என சொல்கின்றனர். அப்போது இதை முதலில் சொல்ல வேண்டும் அல்லவா. எதோ ஒன்று சமாளித்தால் போதும் என நாதகவினர் நினைக்கின்றனர்.
ஈரோடு இடைத்தேர்தலில் பெரியாரா? பிரிபாகரனா? என்று சண்டை இழுக்கவும், நீங்கள் வெங்காயம் வீசினால் நான் வெடிகுண்டை வீசுவேன் என்று பேச தேவை என்ன உள்ளது? இடைத்தேர்தலை உங்களுக்காக அதிமுக, பாஜக விட்டுக் கொடுத்திருக்கிறது. சண்டைக்கு இழுத்து சிறைக்கு சென்றால் மீண்டும் தனக்கு மார்க்கெட் வந்துவிடும் என சீமான் நினைக்கிறார். அதற்காக அவர் வேலை செய்துபோல தோன்றுகிறது. ஓரு 2 நாள் சிறையில் இருந்தால், ஈழத் தமிழர்களுக்காக சிறைசென்ற சீமான் என படம் ஓட்டலாம். கடந்த முறை சிறை சென்று வந்தபோது தான் சீமானுக்கு மார்க்கெட் வந்தது. அப்படி சீமான் கைதாகினால் பாஜக சுப்ரிம் கோர்ட் சென்றாவது சீமானை வெளியே கொண்டுவந்து விடுவார்கள். இடும்பவனம் கார்த்தி போன்ற ஒருவரை கொண்டு வந்து இவர்தான் கரும்புலி என்று சொல்லி ரு.10 லட்சம் வசூலிக்க முடிந்ததால், அதன் முக்கியத்துவத்தை சீமான் உணர்ந்து கொண்டார். அந்த காலத்தில் நீங்கள் பிரபாகரனுக்கு ஆதரவு கொடுங்கள், அவர் ஈழத்தை பார்த்துக் கொள்வார் என்றுதான் கட்டியமைக்கப்பட்டது. இதுதான் பெரும்பாலான ஈழத்தமிழர் கூட்டங்களில் சொல்லப்படும் வரிகள். இதை ஒன்றை வைத்துக் கட்டிஅமைக்கப்பட்டதால் அவர்கள் உயிருடன் இருப்பதை மக்கள் நம்ப விரும்பினார்கள். சீமான், பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதை ஒவ்வொருவரிடமும் கேட்டு தெரிந்து கொண்டுதான் அவர் குறித்த கதைகளை பேச தொடங்கினார்.
இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் வருவதற்கு முன்பே, இது பொது விவாதம் ஆன பிறகு சீமான் ஈழ கதைகளை சொல்வதை நிறுத்த தொடங்கிவிட்டார். அதன் பின்னர் புதிய கதைகளை நிறுத்திவிட்டார். எப்போது எல்லோரும் சேர்ந்து சீமானை அடித்தார்களோ. அப்போதே அவர் பழைய கதைகளை காப்பாற்றத்தான் போராடினார்கள். மிகவும் கவனமாக பாதுகாப்பான இடங்களில் மட்டும் பேசினார். சீமான் வேலுர் சிறைலிருந்தபோது, அவரை பாலாறு போராட்டக் குழுவினர் பார்க்க சென்றுள்ளனர். அப்போது சீமான் என்ன 50 பேரை வைத்துக்கொண்டு கட்சி என்று சொல்கிறீர்கள். என் கட்சியுடன் வந்து இணைத்து விடுங்கள் என்று சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். புதிதாக 2 போராளிகளை ரெடி பண்ணி இறக்கிப் பார்த்தார். அவர்களில் ஒருவர் டபுள் ஏஜெண்ட் என சொல்லிவிட்டார்கள். பெரியார் குறித்த அவதூறு பரப்பிர விவகாரத்தில் இவர்கள் டிபன்ஸ் கொண்டுவர வர இன்னும் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தரம் தாழ்ந்து திருமுருகன் காந்தியை விமர்சிக்கின்றனர். இதுவரை நாகரீகமாக பேசி கொண்டிருந்த இடும்பவனம் கார்த்தியும் தற்போது அவதுறாக பேச தொடங்கி விட்டார். அவர்களுக்குள் உள்ள சீமான் வெளிப்பட தொடங்கிவிட்டனர். சீமான் பிறர் சொல்லும் கதைகளை தனக்கு நடந்ததை போன்று மாற்றி கதைகளை பேசி வருகிறார். இதற்கு சீமான் மட்டும் காரணம் அல்ல. அவரை சுற்றியுள்ளவர்களும்தான் காரணம். அவர் அரசியலில் இருந்து ஒய்வுபெற்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.
சீமான், இதுவரை பிரபாகரன் என்ற பழத்தை பிழிந்து கடைசி அதன் துளி வரை எடுத்துவிட்டார். 2 கே கிட்ஸ்களுக்கு பிரபாகரன் என்றால் யார் என்று தெரியாமல் அழித்துவிட்டு, அந்த இடத்தில் சீமான் சென்று உட்கார்த்து கொண்டார். அடுத்த படியாக பெரியார் என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளார். ஆனால் விஷயம் என்ன என்றால் பிரபாகரனை காலி செய்ய அவருக்கு காலம் இருந்தது. அவரிடம் ஏமாற பல காரணங்கள் இருந்தன. ஆனால் பெரியார் விஷயத்தில் அந்த மாதிரி அவ்வளவு எளிதாக செய்துவிட முடியாது. பாஜக ஆதரவுடன் ஓரளவு செய்யலாம். முன்பு அவர் தனியாக இருந்தார். இப்போது, எந்த கட்டுப்பாடும் கிடையாது. பெரியார் குறித்த சீமானின் அவதூறுகளை பாஜக தனது இணையதள பக்கங்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் பரப்புகிறது. நாம் அதை எதிர்மறையாக பார்க்க வேண்டாம். நாம் அதை வைத்து இளம் தலைமுறையினரிடம் பெரியாரை கொண்டு சேர்ப்போம். அதற்கு நாம் தயாராக இருப்போம். சீமான் ஒரு பிறவி பொய்யர் என்பது உறுதியாகிவிட்டது.
நாம் தமிழர் கட்சியில் இருந்து ஒரே நாளில் 3 ஆயிரம் பேர் சென்றனர். அதற்கு நம்பும் படியாக சில கதைகளை சொன்னார்கள். அன்றிரவே பிரபாகரனின் அண்ணன் மகன் பேட்டி அளித்தார். அது சீமானின் சர்வதேச கலெக்ஷனை பாதித்தது. அதற்கு அடுத்த நாள் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் வந்தார். அவரது பேட்டி என்பது சவப்பெட்டியில் அறைந்த கடைசி ஆணி போன்றது ஆகும். அதற்கு மேல் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். சீமான் ஒரு பொய்யர் இல்லை என்று நிரூபிக்க மிகவும் சிரமப்பட்டனர். கெட்டவன் பட இயக்குநர் நந்தகுமார் ஜீ தமிழில் அளித்துள்ள பேட்டியில், சீமான்தான் பிரபாகரனை உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார் என்று சொல்கிறார். இவர்கள் 2, 3 பத்திரிகைகளை படித்தால் உண்மை தெரிந்து விடும். சீமானுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஈழப் போராட்டங்கள் எவ்வளவு எழுச்சியோடு நடைபெற்றது. 1980களிலேயே இங்கு ஈழ மக்களுக்காக நிவாரண பொருட்கள் சேகரித்து அனுப்பினோம். விடுதலைப்புலிகள் அமைப்பினர் தஞ்சையில் சர்வசாதாரணமாக நடமாடுவார்கள்.
நாம் தமிழர் தொண்டர்கள் எப்படியாவது திருந்திவிடுவார்கள். சீமானின் நாடகத்திற்கு மயங்குவதை விட்டு விட்டு, இன அழிப்புக்கு காரணமாக சர்வதேச சதி, ராஜபட்சே எல்லாரையும் குறை சொல்லலாம். இன்றும் ஈழத்தில் உணவு இன்றி, வீடு இன்றி தவிக்க காரணம் நாம்தான். சீமானுக்கு நிதி வழங்குவதை விடுத்து, அவர்களுக்கு வழங்க வேண்டும். அதிகாரப்பூர்வமாக விடுதலைப்புலிகளும் தெரிவித்துவிட்டனர். மற்றவர்களும் பணத்தை தர வேண்டாம் என சொல்கிறார்கள். அதை நிறுத்திவிட்டாலே சீமானின் ஆட்டம் அடங்கிவிடும். பாஜகவின் ஒரு கிளையை எதிர்கொள்வது சிக்கல் இல்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.