Homeசெய்திகள்கட்டுரைடாஸ்மாக் ரெய்டில் உண்மையை உடைத்த நிர்மலா! ஆடிப்போனது ED! 

டாஸ்மாக் ரெய்டில் உண்மையை உடைத்த நிர்மலா! ஆடிப்போனது ED! 

-

- Advertisement -

டாஸ்மாக் விவகாரத்தில் செந்தில்பாலாஜி வளைந்து கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும், ஆனால் அவர் அமைச்சராக தொடர்வது திமுக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

shyam
மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம்

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றதாக அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டின் பின்னணி மற்றும் இந்த விவகாரத்தில் பாஜக செய்யும் அரசியல் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- டாஸ்மாக் ஊழல் என்றால் பொதுமக்கள் மத்தியில் உள்ள அபிப்ராயம் என்ன என்றால்? மதுபான கடைகளில் பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வாங்குகிறார்கள் என்று குற்றச்சாட்டு உள்ளது. டாஸ்மாக் அருகில் உள்ள பார்களில் தண்ணீர் பாட்டில்களுக்கு, ஸ்னாக்ஸ்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முன்னதாக நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வந்தது. முதலமைச்சராக இருந்த கலைஞர், தமிழகத்திற்கான மானியத்தை வழங்கக் கோரியபோது ஏற்கனவே மதுவிலக்கு அமலில் இருக்கும் மாநிலங்களுக்கு மானியம் கிடையாது, புதிதாக அமல்படுத்தும் மாநிலங்களுக்குதான் மானியம் என்று வினோதமான கருத்தை சொல்லிவிட்டார்கள். எனது கல்லூரி காலத்தில் முதன் முதலாக மதுவிலக்கு கொள்கை தளர்த்தப்பட்டது. பிறகு ராஜாஜி என்று கலைஞரிடம் பேசினார். அப்போது, கலைஞர் மதுவிலக்கு தற்காலிகமாக ஒத்திப்போடப்படுகிறது என்று சொன்னார்.

நாட்டுச் சாராயம், இயற்கை பானம் எனப்படும் கள், இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் என்று அனைத்து வகையான மதுபானங்களும் கிடைத்ததால் ஏழை மக்கள், நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்குமானதாக அது இருந்தது. பின்னர் அதில் பல்வேறு மாற்றங்கள் செய்தார். தற்போதுள்ள பிரச்சினை என்ன என்றால்? தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் மட்டும்தான் கிடைக்கிறது. இதே நீங்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்றால் கள் உள்பட அனைத்து மதுவகைகளும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாகத்தான் தென்னங்கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் நல்லசாமி போன்றோர் என கோரிக்கை விடுக்கிறார்கள். விலை பெரிய அளவுக்கு எட்டாத கனியாக இருக்கும்போது நமக்கு இருக்கும் பிரச்சினை என்பது கள்ளச்சாராய மரணங்களாகும். கள்ளச்சாராயம் என்றாலும் அது மீத்தேல் ஆல்கஹால், விஷச்சாராயமாக மாறிவிடும்.இப்படி பட்ட சூலில் நமது மதுவிலக்கு கொள்கை இருக்கிறது.

Tasmac tamilnadu

டெல்லியில் புதிய மதுக்கொள்கை விவகாரம். அதில் சவுத் லிக்கர் லாபி பயன்பெற்றது என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதில் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோன்ற குற்றச்சாட்டு சத்தீஸ்கரிலும் எழுந்தது. அதுபோன்ற குற்றச்சாட்டு தமிழ்நாட்டில் உள்ளதா? என்றால் கிடையாது. இங்குள்ள குற்றச்சாட்டு என்பது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வாங்குகிறார். டாஸ்மாக் நிறுவனம் பார்களை ஏலம் விடுவதில் முறைகேடுகள் நடைபெற்றது என்றுதான் புகார்கள் வரும். இதற்கும் டெல்லி விவகாரத்திற்கும் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசமாகும். செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனைகள் குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையை படித்து பார்த்தேன். முறைகேடு நடைபெற்ற காலம் என்று எதையும் குறிப்பிடப்படவில்லை. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தது. இன்றைக்கு 2025ஆம் ஆண்டு. அமலாக்கத்துறை 2021-2025 வரையிலான கால கட்டத்தை சொல்கிறார்களா? அல்லது 2011ஆம் ஆண்டு முதல் சொல்கிறார்களா என்று தெரியவில்லை. பொதுப்படையாக பல ஆண்டுகளாக என்று பதிவு செய்துள்ளார்கள். பல வருடங்களில் 1000 கோடி முறைகேடு என்றால் மிகவும் குறைந்த தொகை ஆகிவிடும். அண்ணாமலை இதை வைத்து, தனது தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்துகிறார். ஊழல் என்றால் மக்களிடம் எளிதில் சென்றடையலாம்.

அண்ணாமலை

இந்த குற்றச்சாட்டை எந்த இடத்தில் தமிழக அரசு உடைக்க வேண்டும் என்றால், இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மதுபான கொள்கையை எந்த அளவுக்கு நாம் மாற்றம் செய்துள்ளோம் என்று சொல்லாம். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வராமல் நாம் தடுக்கலாம். உதாரணமாக டாஸ்மாக் கடைகளில் பில் போடும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் முறையாக அனைத்து பக்கங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படவில்லை.இன்றைய காலகட்டத்தில் பில் போடும் முறை மிகவும் முக்கியமானதாகும். தற்போது அண்ணாமலை வைக்கும் குற்றச்சாட்டு என்பது போலியாக கியூ.ஆர். கோடு தயாரித்து, மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டார்கள் என்பதுதான்.

ஊழல் என்கிறபோது செக் பீரியட் போன்ற கேள்விகள் வருவதை அண்ணாமலை  போலி கியூ.ஆர். கோடு, மத்திய அரசுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வரவில்லை என்று சொல்லி திசை திருப்புகிறார். அப்படி என்றால் ஜி.எஸ்.டி இழப்பு எவ்வளவு? போலி கியூ.ஆர் கோடு எவ்வளவு வந்தது? போலி கியூ. ஆர் கோடிற்கும், உண்மையான கொள்முதலுக்கும் பெரிய வித்தியாசம் வருமல்லவா? 100 கோடிக்கு அரசு கியூ ஆர் கோடு. 200 கோடி ரூபாய்க்கு நீங்கள் பேக்ல சப்ளை பண்ணி இருந்தால், நிச்சயம் 100 கோடிக்கு போலி கியூ ஆர் கோடு வந்திருக்க வேண்டும். அப்படி பதில் இல்லாத கேள்விகள் பல உள்ளன. ஆனால் டாஸ்மாக்கில் ஊழல் என்கிற பொதுத் தலைப்பின் கீழ், பொதுமக்களின் கருத்து என்பது ஆமாம் ஊழல் என்பதுதான். இந்த இடத்தை அரசு முறையாக கையாளவில்லை என்றே கருதுகிறேன். உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டியதுதானே.

செந்தில்பாலாஜியின் உயிருக்கு ஆபத்தா? உச்சநீதிமன்றத்தை எதிர்க்கிறாரா ஸ்டாலின்?
ஸ்டாலின் செந்தில்பாலாஜி

இந்த விவகாரத்தில் உண்மையான பிரச்சினை என்ன என்றால் செந்தில் பாலாஜி. அவர் வளைந்து கொடுத்து விடுவார், அடிபணிந்து சென்றுவிடுவார் என்பது போன்ற வாதங்களை நான் நம்பவில்லை. செந்தில் பாலாஜி ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்தார். அப்போதே அவர் அடிபணிந்து போகவில்லை. அதற்கெல்லாம் வாய்ப்புகள் இல்லை. ஆனால் அவரிடம் இந்த துறை தொடர்வது திமுகவுக்கு அரசியல் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்துகிற இடமாகும். ஏனென்றால் சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் வழக்கு விசாரணைக்கு வரர உள்ளது. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறீர்களா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்படி கேள்வி எழுப்பினால் என்னாவது? அவர் அமைச்சராக தொடரலாமா? இல்லையா? என முடிவெடுக்க வேண்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். இது நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு உட்பட்டது கிடையாது. எனவே இதுபோன்ற சர்ச்சைகளை தவிர்த்திருக்கலாம். அண்ணாமலை வெறும் வாயிலேயே அவல் மெல்லுகிறவர். மேற்கொண்டு அவர் மெல்வதற்கான வாய்ப்பை நாமே ஏற்படுத்தி தந்திருக்கக் கூடாது.

வருமான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு?

வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்றுத் தரும் துறைகளில் மிகவும் மோசமானது என்றால் அது அமலாக்கத்துறை தான். நாடாளுமன்றம் அளித்த புள்ளி விபரங்களே இதனை தெரிவிக்கின்றன. அதாவது அரசியல்வாதிகள் மீது ஆயிரம் வழக்குகளை போட்டோம் என்றால் ஒரு சதவீதம் வழக்குகள் தான் உண்மையான தண்டனையில் சென்று முடிகிறது. ஆனால் அதுவரை அரசியல்வாதிகளுக்கு ஏற்படுகிற நஷ்டம். அவர்களது பொதுவாழ்வில் எவ்வளவு பெரிய களங்கங்கள் ஏற்படுகிறது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் பெரிய அளவில் கடுமையான பிரிவை வைப்பதால், அதனை ரொம்ப எளிதாக எடுத்து எல்லா துறைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். பிக்பாக்கெட் வழக்கில் கூட நாளைக்கு சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தை பயன்படுத்திவிடுவார்கள். அப்போது, பண பரிமாற்ற சட்டத்தை நீதிமன்றம் மறுஆய்வு செய்ய வேண்டும். அதற்கான நோக்கம் என்பது போதை பொருள் கடத்தல், ஆயுதக்கடத்தல்காரர்கள் போன்றவர்களை தடுக்க வேண்டிய பெரிய சட்டம். கடைசியில் வந்து அரசியலுக்கு பயன்படுத்தப்படுகிறது. நம்மூரில் இருக்கும் மதுரைக்கும், நெல்லைக்கும் யார் ஜெயிக்க வேண்டும் என்று பிஎம்எல்ஏவை பயன்படுத்துவது வளர்ந்த ஒரு ஜனநாயகத்திற்கு எப்படி வந்து சரியாக வரும். இப்படியான கேள்விகள் எல்லாம் இந்த ஒரு விஷயத்தில் வருகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ