Homeசெய்திகள்கட்டுரைதிமுக கூட்டணியை விட்டு யாரும் வர மாட்டார்கள்... 200 இடங்களில் வெற்றி என்பது  எதார்த்தம்... பேராசிரியர்...

திமுக கூட்டணியை விட்டு யாரும் வர மாட்டார்கள்… 200 இடங்களில் வெற்றி என்பது  எதார்த்தம்… பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை! 

-

- Advertisement -

திமுகவை எதிர்த்தவர்கள் அனைவரும் காலஓட்டத்தில் காணாமல் போய்விட்டனர் என்றும், தமிழ்நாட்டில் 75 ஆண்டுகளை கடந்து நிற்கும் ஒரே அரசியல் இயக்கம் திமுக தான் என்றும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பேசியவர்கள் தான் பிரபாகரனின் வாரிசுகளா? - சுப. வீரப்பாண்டியன்

சென்னை காரப்பாக்கத்தில் திமுக சார்பில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை அமைப்பின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- சிலர்  47 வயதில் இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கலாமா என்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று தெரியாது 45 வயதில் முதலமைச்சர் ஆகிவிட்ட கலைஞரின் பேரன் அவர் என்று. கலைஞர் தமிழ்நாட்டில் தொடங்கினார், ஆனால் இந்தியா முழுவதும் அறியப்பட்ட தலைவராக திகழ்ந்தார். ஆனாலும் கலைஞர் டெல்லியில் போய் அமர வேண்டும் என்று கருதவில்லை. அவருக்கு தப்பாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்துள்ளார். இந்தியா கூட்டணியில் ராகுல் காந்திக்கு, அடுத்த இடத்தில் மதிக்கப்படும் தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.

மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாம் எப்படி 75 ஆண்டுகளாக இந்த மண்ணில் காலுன்றி நிற்கிறோம். எத்தனை கட்சிகள் வந்தாலும் அதனை எதிர்த்து நிற்கிறோம். என்றைக்கும் திரையில் இருந்து எத்தனை பேர் வந்தாலும் திமுக தான் நிற்கும். எம்.ஜி.ஆர். என்பது வேறு. எம்ஜிஆருக்கு வந்த செல்வாக்குக்கு பின்னால் இருந்த அரசியல் பின்புலத்தை நாம் உணர வேண்டும். 19 ஆண்டுகள் திமுகவில் இருந்து அண்ணாவிடம் பயிற்சி பெற்றவர் எம்.ஜி.ஆர். ஆனால் யார் வென்றார்கள். திமுக 13 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லை என்பது மட்டுமல்ல, எத்தனை கொடுமையான நெருக்கடிகளை திமுக எதிர்கொண்டது. இன்று தமிழ்நாட்டில் 75 ஆண்டுகளை கடந்த ஒரே கட்சி திமுகதான்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

திமுகவை அழித்து விடுவேன் என்று சிலர் கையை உயர்த்தி உயர்த்தி பேசிக் கொண்டிருக்கின்றனர். பாவம் இன்று அந்த கூடாரம் களைந்து கரைந்து கொண்டிருக்கிறது. சிலம்புசெல்வர் மா.பொ.சியின் தமிழரசு கட்சி என்ன ஆனது. சி.பா. ஆதித்தனாரின் அந்த நாம் தமிழர் கட்சி என்ன ஆனது. திமுகவையும், திராவிட இயக்கத்தையும் அழித்துவிடுவேன் என்று கூறிதான் இருவரும் கட்சி தொடங்கினர். பின்னர் அவர்கள் திமுகவுக்குள் வந்துதான் கரைந்தார்கள். தோழர் கல்யாண சுந்தரம் கட்சி தொடங்கினார், நம்மிடத்தில் இருந்து பிரிந்த இ.வி.கே சம்பத் கட்சி காணாமல் போனது. ஆனால் அன்றும் பறந்தது இரு வண்ணக்கொடி, இன்றும் பறக்கிறது இருவண்ணக் கொடி.

கலைஞர் திமுக என்பது நெருப்பாற்றில் நீந்துகிற கட்சி அல்ல. நெருப்பாற்றில் மெழுகு படகில் பயணம் செய்து வந்தவர்கள் என்பார். நெருக்கடியை கடந்தோம். அண்ணா இறந்தபோது இனிமேல் கட்சி இருக்காது என்றார்கள். அண்ணாவுக்கு பிறகு 50 ஆண்டுகள் கலைஞரின் தலைமையில் இந்த கட்சி பயணித்தது. கலைஞரோடு முடிந்துவிட்டது என்று சொன்னார்கள். சிலர் ஸ்டாலினுக்கு முதலமைச்சராக கட்டம் சரியில்லை என்றார்கள். இன்று அவர்கள் சிறைக்கட்டத்தில் நிற்கிறார்கள். இன்று அவர்கள் கருணாநிதியை விட ஆபத்தானவர் ஸ்டாலின் என்கின்றனர். அவர் அண்ணாவின் பாதையை அல்ல, பெரியாரின் பாதையை பின்பற்றுகிறார். திமுகவின் எதிரிகளுக்கு இன்னொரு செய்தி போய் சேர்ந்திருக்கிறது. இப்போதுள்ள தலைவர் ஸ்டாலினை விட உதயநிதி ஆபத்தானவர் என்று. இன்றைக்கு பதறி போய் இருக்கிறார்கள்.

2024 மக்களவை தேர்தலில் 40 இடங்களிலும் நின்றதும், வென்றதும் நாம் தான். எனவே 2026 தேர்தலில் 200 இடங்களில் வெல்வோம் எகத்தாளமாக பேசுவதாக சிலர் சொல்கிறார்கள். எகத்தாளமாக அல்ல எதார்த்தமாகத்தான் சொல்கிறோம் 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று. 200 தாண்டும் என்பது தான் என் நம்பிக்கை. நான் பார்க்கும், போகும் இடங்களில் எல்லாம் பெண்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். பெண்கள் மகிழ்ச்சியாக இருந்தால் வாக்குகள் நமக்குதான். சிலர் சொல்கின்றனர் ஆயிரம் ரூபாய் போதுமா என்று. ரு.2.5 லட்சம் வாடகை வீட்டில் இருந்தால் 5 லட்சம் தந்தாலும் போதாது தான்.

திமுக கூட்டணியில் இருந்து யாராவது வந்து விடுவார்களா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி யாரும் வர மாட்டார்கள்.  அப்படி யார் வந்தாலும் அழைத்துக் கொள்ளுங்கள் திமுகவுக்கு ஒன்றும் ஆகாது. யாரை நம்பியும் திமுக இல்லை, மக்களை நம்பித்தான் திமுக உள்ளது. கூட்டணியில் சில சலசலப்புகள் உள்ளது. அரசியலில் ஒன்றரை வருடம் என்பது மிகவும் தொலைவு, அரசியலில் ஒரு வாரத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டு விடும். நாம் எல்லா கூட்டணி கட்சிகளையும் மதிக்கிறோம். எல்லோரும் நம்முடன் இருக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் இந்த கட்சி முழுக்க முழுக்க தன்னை நம்பியும், மக்களை நம்பியும் உள்ளது. கட்சிகளை வரவேற்போருக்கு ஒன்று தெரிய வேண்டும். நீங்கள் யாரை வரவழைத்தாலும் அதனால் கட்சியை ஆட்டம்காண செய்துவிட முடியாது. நாங்கள் கட்சியின் திட்டங்களால், கொள்கைகளால் நிலைத்து நிற்கிறோம்.

edappadi palanisamy

எடப்பாடி அவர் கட்சி கூட்டத்தையே நடத்த முடியாமல் தடுக்கிறார்கள். அம்பேத்கர் குறித்து கருத்து கேட்டபோது, எங்கள் கட்சியின் ஜெயக்குமார் சொன்னதை தான் வழிமொழிகிறேன் என்று சொல்கிறார். தலைவர் சொல்வதை வழிமொழியத்தான் தொண்டர்கள் இருக்கின்றனர். மு.க.ஸ்டாலின் சொல்வதை நாம் கேட்போம். இன்றைக்கு அதிமுக என்ற ஒரு கட்சி இல்லை. அதிமுக என்ற 5 பிரிவுகள்தான் உள்ளன. இபிஎஸ் ஒரு பிரிவு, ஒபிஎஸ் ஒரு பிரிவு, சசிகலா ஒன்று, தினகரன் ஒன்று.

இன்றைக்கு நாம் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் எனக்கு ஒரு வருத்தம் உள்ளது. பெரியார், ராஜாஜியையும், அண்ணா – காமராஜரையும், கலைஞர், எம்ஜிஆர் – ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர்களை எதிர்த்தனர். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடியை தான் எதிர்க்க வேண்டியுள்ளது. அவருக்கு பின்னால் அடுத்தடுத்து சிலர் திடீர் திடீர் என வருகிறன்றர். புயல் அடித்தபோது வீட்டிற்கு வரவழைத்து பரிசு கொடுக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுடன் நாம் களத்தில் நின்றோம். மக்கள் பாதிக்கப்படுகிறபோது அவர்களிடம் செல்வது நாம். பாதிக்கப்பட்ட மக்களை தன்னுடைய வீட்டிற்கு வரச் சொல்பவர்கள் புதிதாக புறப்பட்டுள்ள தாரகைகள். எந்த கட்சி இந்த நாட்டுக்கு தேவை என்பதை மக்கள் நேரடியாக சொல்லாவிட்டாலும், 2026 சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியை கொடுப்பார்கள். அன்றைக்கு எதிரிகள் அதனை புரிந்து கொள்வார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ