Homeசெய்திகள்கட்டுரைஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் –...

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

-

- Advertisement -

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேகமாக செயல் படுகிறது. இந்த மசோதாவை  எதிர் கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு பின்னரும் நடைமுறைக்கு கொண்டுவர முயற்சி செய்து வருகிறது. இது சாத்தியமா? சாத்தியமில்லையா என்று பெரும் விவாதம் எழுந்துள்ளது.ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

தற்போது இந்தியாவில் சட்ட பேரவை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் , உள்ளாட்சி தோ்தல்  என மூன்று அமைப்பாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் 1951 – 1967 வரை  நடந்த தேர்தல்கள் ஒரே கட்டமாக நடத்தப்பட்டன. பிற் காலங்களில் ஆட்சிகள் மாறியதால் மாநிலங்களிலும் மத்தியிலும் பதவி காலங்கள் மாறி மாறி வந்ததால் தேர்தல் முறையும் மாறியது. இந்த நிலையில் ஒன்றியத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு மீண்டும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதற்கு மாநில அரசுகள், எதிர் கட்சிகள் எதிப்புகள் தெரிவித்துவருகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. மக்களாட்சிக்கு எதிரானது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்துள்ளாா். இதே போன்று எதிர் கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்த மசோதாவிற்கு கண்டனம் தெரிவித்து வந்தனா். இந்த எதிர்பபை கண்டுகொள்ளாத ஒன்றிய பாஜாக அரசு கடந்த 2018 ஆண்டு தேசிய சட்ட ஆணையம் மூலம் அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்க துவங்கியது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

இப்படி பட்ட சூழ்நிலையில் ஒன்றிய பாஜக முன்னால் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்ட குழுவை கடந்த ஆண்டு அமைத்தது. இக்குழு 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வழங்கினா். அதில் 2029ம் ஆண்டு  ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற அரசியல் அமைப்பு சட்டத்தில் சட்டபேரைவையில் பதவி காலத்தை படிபடியாக குறைக்கவும், சட்டத்தில் 18 திருத்தங்கள் மற்றும் உட்பிரிவுகளை கொண்டு வர வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தனா்.

இதில் ஒன்றிய அரசு 3 சட்ட மசோதாக்களை கொண்டு வர திட்டமிட்டது. இதில் 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி சட்டப்பிரிவு 82 ல் திருத்தம் செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த திருத்த மசோதாவிற்கு 50 சதவிகிதம் மாநிலங்களின் ஒப்புதல் அவசியம் இல்லை.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

யூனியன் பிரதேசங்களுக்குகான மசோதா அரசியலமைப்பு சட்ட திருத்தமாக இல்லாமல் சாதாரன சட்ட திருத்த மசோதாவாக ஒப்புதல் அளிக்கபட்டுள்ளது. எதிர் கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கும் இடையே இந்த இரண்டு மசோதாக்களையும் அடுத்த வாரம் நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிடுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மசோதாவிற்கு அதிமுக உள்ளிட்ட 32 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

ஒன்றிய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கொண்டுவர அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றால்  நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு பலம் பொருந்தியதாக இருக்கவேண்டும். அத்தகைய பலம் மத்திய அரசிடம் இல்லை. மக்களவையில் மொத்தம் 543 எம்பிக்களில்  ஒரு இடம் காலியாக உள்ளது. இதில் 3ல் 2 பங்கு என்பது 361 எம்பிக்களின் ஆதரவு வேண்டும். பாஜாக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்  293 எம்பிக்கள் உள்ளனா். இந்திய கூட்டணியில் 235 எம்பிக்கள் ஆதரவு உள்ளது. மாநிலங்களவையில் மொத்தம் 243 எம்பிக்களில் பாஜா கூட்டணியில் 122 எம்பிக்கள் உள்ளனா். பாஜாகவிற்கு மசோதாவை நிறைவேற்ற இரு கூட்டணியில் அல்லாத பிற கட்சிகளின் ஆதரவு தேவை. அகையால் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்றுவதில் இப்போது பாஜாக விற்கு சவாலாகவே இருக்கும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

தமிழகத்தில் இந்த மசோதா சாத்தியபடாது. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு ஒவ்வாத, மக்களாட்சிக்கு எதிரான இந்த நடவடிக்கை ” மாநிலங்களின் குரலை அழித்துவிடும்”   கூட்டாச்சி இயலை சிதைத்துவிடும் , அரசின் ஆட்சி நிர்வாகத்தை பாதிக்கும், ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை நாம் அனைவரும் ஒன்றுகூடி எதிர்ப்போம் என்று தனது   எக்ஸ் தல பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அதிகாரத்தை மையப்படுத்தவதாகும். ஜனநாயகத்தை நசுக்க செய்கின்ற முயற்ச்சி. டெல்லியின் சர்வாதிகார செய்ல்களுக்கு மேற்கு வங்கம் ஒருபோதும் அடிபணியாது. இந்த கொடூரமான சட்டத்தை நாடாளுமன்றத்தில் எங்கள் எம்பிக்கள் கடுமையாக எதிர்பார்கள். எதேச்சதிகாரத்தின் பிடியில் இருந்து ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்று தங்களது எக்ஸ் தல பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

காங்கரஸ் கட்சியின் மக்களவை துனைத்தலைவர் கவுரவ் கோகோய் அவர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது  இந்த மசோதா மூலம் நாட்டின் கூட்டாச்சியில் ஏற்படும் பாதிப்பு குறித்து இந்திய கூட்டணி பெரும் கவலை கொண்டுள்ளது. பிரதமர் மோடி ஒரே நாடு ஒரே தேர்தல்  என்கிறாா், ஆனால் அரியானா, மகாராஷ்ரா, ஜம்மு காஷ்மிர் தேர்தல்களை ஏன் ஒரே நேரத்தில் நடத்த முடியவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில்  நாடு முழுவதும் எப்படி இது சாத்தியமாகும். இது மக்களை திசை திருப்பும் முயற்ச்சி என்கிறாா்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

திமுக  அளித்த பேட்டியில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். எதிர் கட்சிகளிடம் நிறைய கேள்விகள் உள்ளது.  அவைகளுக்கு அவர்கள் விரிவான முறையில் பதிலளிக்க வேண்டும். மக்களவை முன்கூட்டியே கலைக்கப்பட்டடால், அவர்கள் அனைத்து மாநில சட்டப்பேரவைகளையும் கலைத்துவிட்டு தேர்தலை நடத்துவார்களா?  என்று  கேள்வி எழுப்பியுள்ளாா்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய்  சிங் அவர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது எங்களுக்கு  ஒரே நாடு ஒரே அதானி என்ற முழுக்கம் தான் மோடி அரசின் முழக்கம் என்பதுபோல் கேட்கிறது என்று கூறியள்ளாா்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் – தமிழகத்தில் மட்டும் அனைத்து தொகுதியிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் வட மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநிலத்திலாவது ஓரே நேரத்தில் ஒரே தேதியில் தேர்தல் நடந்ததா என்றால் அவர்களிடம் பதில் இல்லை. ஒருவேளை நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் வெளியேரி ஆட்சி கலைந்தால் மீண்டும் நாடளுமன்றத்ததை கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவீர்களா. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது யானைக்கு டவுசர் தைத்த கதை தான் என்று மதுரையில் செய்தியாளா் சந்திப்பில் கூறியுள்ளாா்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பாா்வையில் – ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை மேலோட்டமாக பாா்க்கின்ற போது அவர்கள் முன் வைக்கும் கருத்து , அரசு ஊழியர்களின்  நேர விரையம் மற்றும் பொருளாதார விரையம் என்பது போல் தான் உள்ளது. பல் வேறு மாநிலங்களிலும் , மாவட்டங்களிலும் வெவ்வேறு நேரங்களில் நடத்தபடுவதால் அரசாங்கத்தின் வளர்ச்சி  திட்டங்கள் செயல் படுத்தமுடியாமல் பாதிக்கபடுகின்றது என்று கூறுகிறாா்கள். ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயக நாட்டில்  மக்களின் உரிமையை பாதிக்கப்படுவது போல் உள்ளது. மக்கள் ஜனநாயக பாா்வையில் அவர்கள் சுதந்திரமாக முடிவெடுக்க முடியாமல் தடைப்படும். அதை எதிர்கட்சிகளும் ஒப்புக்கொள்ளாது. தற்போது தேர்தல் நடந்துள்ள மாநிலங்களின் பதவி காலத்தை எப்படி இவர்கள் கணக்கிடுவாா்கள். அரசாங்க சட்டத்தில் நிறைய மாற்றங்களை கொண்டுவரவேண்டும். இவை எல்லாம் சாத்தியமாகுமா பாராளுமன்ற உயர் மட்ட கூட்டுக் குழுக்களுக்கு அனுப்புவாா்களா என்பதெல்லாம் கேள்விக்குறியே என்று கூறியிருக்கிறாா்.

முதல் உரையிலேயே முத்திரை… பாஜகவின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட ப்ரியங்கா காந்தி..!

MUST READ