சென்னைக்கு புதுசு – இன்று நான் தொழிலின் வாரிசு
ஒரு மனிதன் முன்னேறுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருக்கிறது. முதல் காரணம் உழைப்பு, இரண்டாவது காரணம் உழைப்பு, மூன்றாவது காரணம் உழைப்பு என்பார்கள்.
அப்படி உழைப்பால் உயர வேண்டும் அதற்கு மனதில் உறுதி வேண்டும் என்ற கோணத்தில் இன்று நாம் சந்திந்த ஒரு தொழிலதிபர் தான் திரு.குட்டி மணி பால துறை.
யார் இந்த குட்டி மணி பால துறை, அப்படி என்ன அவர் தொழில் செய்துக் கொண்டிருக்கிறார்? என்று நீங்கள் கேட்க்கலாம். நம் அனைத்து கேள்விகளுக்கும் அவரிடமே பதிலை கேட்டோம்.
அவரைப்பற்றி : என் பெயர் குட்டி மணி பால துறை. நான் வேலூர் ஆரணியில் பிறந்தேன், கல்லூரிப் படிப்பை முடித்து இரண்டு ஆண்டுக்கு பின்னரே சென்னையில் கால் பதித்தேன் என்று பேசத் தொடங்கினார்.
அப்போது சென்னை என்ற பெயர் மட்டும் தான் தெரியும், நண்பர்களோ உறவினரோ யாரும் கிடையாது. என்னோடு துணை நின்றது எல்லாம் என் தன்னம்பிக்கை மட்டுமே.
சென்னையும் நானும்: சென்னை வந்து சேர்ந்த பின் வேலை தேட தொடங்கினேன், எனக்கு தகவல் தொழில்நுட்பத்தில் சேர வேண்டும் என்று ஆசை, ஆனால் எனக்கு இன்சூரன்ஸ் ஏஜென்ட் வேலை கிடைத்தது.
மாதம் 1200 ரூபாய் சம்பளம், ஒரு மேன்ஷனில் மாதம் 300 ரூபாய் வாடகையில் தங்கியிருந்தேன். அந்த சம்பளம் போதவில்லை.
டாட்டா பைனான்ஸ் கம்பெனி -ல் (Tata Finance Company) ஒரு ஆண்டு வேலை செய்தேன். அந்த இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் எனக்கு இரண்டு நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் உதவியோடு Standard Charted Bank-ல் Probationary Officer வேலைக்கு சேர்ந்தேன்.
அப்பொழுது தான், என் வாழ்க்கை தொடங்கியது என்று கூறலாம். 10-ஆண்டுகள் அந்த துறையில் அனுபவம். என்னுடைய கடும் உழைப்பால் அந்த பத்து ஆண்டில் மட்டும் எனக்கு 20 முறை சம்பளம் உயர்வு கிடைத்தது.
பின்னர் Tamil Matrimony –யில் Vice President ஆக பணி புரிந்தேன்.
14 ஆண்டு உழைப்பிற்க்கு பின் சொந்தமாக தொழில் செய்ய முன்வந்தேன் என்றார்.
என் தொழிலில் நான்: தொழில் தொடங்குவதற்கு பல துறைகள் இருந்தாலும் sales, marketing தேர்ந்தெடுபதற்க்கான நோக்கம் என்ன? என்று நாம் கேள்வி எழுப்பினோம்.
அதற்க்கு அவர்: எனக்கு தெரிந்த தொழிலைத்தான் செய்ய வேண்டும், Standard Charted Bank-ல் வேலை பார்த்தபொழுது பல சேனல்களை நான் பார்த்து உள்ளேன். அதனால் எனக்கு மிகவும் பிடித்த தொழில் மார்க்கெட்டிங் ஒன்று. முதலில் தொழிலாலியாக வேலைப்பார்த்தேன்.
இப்பொழுது பலருக்கும் வேலைகொடுக்கிறேன். இதை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்று, பல முயற்சிகள் செய்துக்கொண்டிருக்கிறேன் என்றார்.
“நாம் எதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்று நம் மனம் சொல்லும் பொழுது நமக்கு தெரிந்ததை செய்தால் மாற்றம் மட்டுமல்ல வெற்றியும் கிடைக்கும்” என்றார்.
இப்பொழுது தமிழ்நாடு முழுவதும் எனக்கு பல கிளைகள் உள்ளது. வேலூர், ஆரணி, திருவண்ணாமலை, புரசைவாக்கம், பட்டாபிராம், ஆவடி, பொன்னேரி, கிண்டி, மற்றும் பல இடங்களில் Remote மூலம் வேலைப்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை 750 ஊழியர்கள் என்னிடம் பணியாற்றுகிறார்கள், மேலும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு நான் வேலை வாய்ப்பும் கொடுத்து வருகிறேன்.
இந்த கால இளைஞர்கள், வெளியூரில் இருந்து வேலை தேடி வருபர்கள், வெளி நாட்டிற்கு வேலை தேடி செல்பவர்கள் ஆகியோருக்கு நீங்கள் சொல்ல நினைப்பது என்ன? என்று நாம் கேட்டோம்.
நான் சொல்ல நினைப்பது, தன்னம்பிக்கை மற்றும், வெற்றி அடைய வேண்டும், என்ற நம்பிக்கையோடு உழைத்தால் போதும்.
நான் சென்னை வந்த பொழுது எனக்கு யாரையும் தெரியாது, நான் யாரையாவது சந்தித்து பேசினால் கூட, என்னை ஏளனமாக பார்ப்பார்கள். அதை நினைத்து நான் வருத்தப்பட வில்லை.
என்னை பார்க்காதவர்களை நான் திரும்பி பார்க்கவைக்க வேண்டும் என்று நினைத்தேன். இன்று அனைவரும் என்னை தேடிவந்து பேசும் பொழுது, சில விருதுகளை பெற்றது போல் ஒரு சந்தோசமாக இருக்கிறது. என்று பெருமையுடன் தெரிவித்தார்
புதிய தொழிலில் நான்: கொரோனா காலத்தில் சிறிது நட்டம் ஏற்பட்டது, எனக்கு வர வேண்டிய out standing Amount எதுவும் வரவில்லை. இருந்தும் என் தொழிலாளர்களுக்கு அவர்களுக்கான சம்பளத்தை கொடுத்துவிட்டோம்.
அதன் பின் தொடங்கியது தான் Direct Nutri (Organic Oils & Nuts) மரசெக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், நெய், பாதம், முந்திரி, போன்றவற்றையும். ஏலேக்ட்ரோனிக் பேட்டரி (Electronic Battery) போன்றவற்றை விற்பனை செய்ய தொடங்கினோம். இதை என் மனைவி, பார்த்துக் கொள்கிறார்.
ஆண்ககளுக்கு பெண்கள் உறுதுணையா…? இல்லையா உங்களின் கருத்து என்ன?
கட்டாயமாக ஆண்களுக்கு பெண்கள் உறுதுணையாக தான் இருகிறாகள், இப்பொழுது என் வெற்றிக்கு காரணம் என் மனைவியும், அவர் கொடுக்கும் தன்னபிக்கையும், ஆதரவும் தான்.
எங்கள் திருமணத்திருக்கு முன் என் மனைவியிடன் நான் கூறினேன். நான் வங்கியில் வேலை செய்பவன் என்ற காரணத்திற்க்காக என்னை திருமணம் செய்துக்கொள்ளாதே, ஏனென்றால் எப்பொழுது வேண்டுமானாலும் நான் அதை விட்டுவிடுவேன் என்று சொன்னேன்.
சம்மதித்து என்னை திருமணம் செய்துக் கொண்டார், அவரும் ஒரு பட்டதாரி, வேலைக்கு சென்று கொண்டிருந்தார். தொழில் தொடங்கிய பொழுது எங்கள் இருவரில் யாராவது ஒருவர் வேலை விட வேண்டிய சூழ்நிலை.
என் மனைவி அவளது வேலையை விட்டு விட்டு எங்கள் தொழிலை கவனித்துக் கொண்டார். அன்று முதல் இன்று வரை எனக்கு தொழிலில் துணையாக இருப்பது என் மனைவி மட்டுமே என்றார்.
பெண்களுக்கு இதுவரை தான் எல்லை என்று மற்றவர்கள் சொல்வதை பற்றி உங்கள் கருத்து?
பெண்களுக்கு இதுவரை தான் எல்லை என்று எதுவும் இல்லை, இன்று அவர்கள் பணி செய்யாத துறைகளே இல்லை என்றும் கூறலாம். அவர்களுக்கான சுதந்திரம் எப்பொழுதோ கிடைத்துவிட்டது.
நூற்றில் ஒரு ஆண்கள் அதை தர மறுக்கிறார்கள், நூற்றில் ஒரு சில பெண்கள் அவர்களை அப்படி புரிந்துகொள்கிறார்கள்.
என் மனைவி என்னிடம் அனைத்தையும் பகிர்ந்துகொள்வார், அவருக்கு ஏதேனும் தேவை இருந்தால் என்னிடம் கேட்பார், என்னால் முடிந்த உதவியை செய்வேன்.
வெளியே செல்ல ஆசைபட்டாள் சென்று வருவார். அது அவருடைய சுதந்திரம் அவரை அங்கே செல்லக்கூடாது என்று எல்லாம் நான் சொல்ல மாட்டேன்.
கடைசியாக என் கருத்து: இந்த காலத்து இளைஞர்கள் மற்றும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு நான் சொல்ல நினைப்பது. வேலை கிடைக்கவில்லை என்று புலம்புவதோ அல்லது அரசாங்கம் உதவவில்லை என்று சொல்லவதை விட உங்களுக்கான வேலையை நீங்கள் தான் தேட வேண்டும்.
கிடைத்த வேலையை கூட செய்யலாம், “உங்களுக்கான வாய்ப்பை யாரும் தர வில்லையென்றால் உங்களுக்கான வாய்ப்பை நீங்களே உருவாக்கிகொள்ளுங்கள்”. எந்த வேலையை செய்தாலும் அதை முழு மனதோடு செய்யுங்கள். அப்படி செய்தால் கட்டாயம் ஒரு நாள் உயரலாம். என்று சொல்லி முடித்தார். அவரிடம் இருந்து விடைபெறும் போது நமக்கும் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது.