Homeசெய்திகள்கட்டுரைஅதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? செங்கோட்டையனுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பின் பின்னணி! உடைத்துப் பேசும் உமாபதி!

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? செங்கோட்டையனுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பின் பின்னணி! உடைத்துப் பேசும் உமாபதி!

-

- Advertisement -

அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொண்டு பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார். இதனால் ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக மீண்டும் பொறுப்புக்கு வந்துவிடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் ஆகியோர் அடுத்தடுத்து டெல்லிக்கு சென்றுவரும் நிலையில் அதிமுகவில் அரங்கேற உள்ள அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து  மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லிக்கு சென்றது குறித்து செய்தியாளர்களிடம் கேட்டபோது மவுனம் நன்மைக்கே என்று சொல்கிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது, அதிமுக சட்டவிதிகளின் படி தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று உள்ளது. எடப்பாடி பழனிசாமி அந்த விதிகளில் திருத்தம் மேற்கொண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாவட்ட செயலாளர்கள் கையெழுத்தது போட்டு அவர் பொதுச் செயலாளர் ஆகியுள்ளார். இதனால் கட்சி விதிகளை மீறிவிட்டார் என்பதை அடிப்படையாக வைத்துதான் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு வரும்போது அதிமுக சட்டவிதிகளின் படி தொண்டர்களால் தேர்வு செய்யப்படுபவர்தான் பொதுச் செயலாளர் ஆக முடியும். அதன்படி எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது. இதனை தான் அடுத்த மாதம் தேர்தல் ஆணையம் சொல்லப் போகிறது.

eps ops

மேலும் எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றால் வழக்கு வருவதற்கு முன்பு என்ன நிலை இருந்ததோ, அதே நிலை தொடர உத்தரவிடுவார்கள். அப்படி உத்தரவிடும்பட்சத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற நிலைக்கு சென்றுவிடும். அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ், தாமாகவே கட்சிக்குள் வந்துவிடுகிறார். கட்சியின் தலைவரான ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு, அந்த பொறுப்புக்கு செங்கோட்டையனை நியமிப்பார். இபிஎஸ் நீக்கப்பட்டதால், இணை ஒருங்கிணைப்பாளரான செங்கோட்டையன் முதலமைச்சர் வேட்பாளராகவும் ஆகி விடுவார். முன்பிருந்தபடியே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஆக உள்ள ஒபிஎஸ், துணை முதலமைச்சராக போட்டியிடுவார். இதுதான் பாஜகவின் தற்போதைய திட்டமாகும். எடப்பாடி பழனிசாமி வேறு வழியின்றி துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். அவருக்கு துணை முதலமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட உள்ளது. இதற்காக தான் செங்கோட்டையனுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் சமாதானமாக செல்லும்பட்சத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்படலாம். இல்லாவிட்டால் கட்சியில் இருந்து நீக்கிவிடுவார்கள். அதனை எடப்பாடி பழனிசாமி நிச்சயம் விரும்ப மாட்டார். அதனால் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை கொடுத்து அவரை அதிகாரம் அற்றவராக மாற்றிவிடுவார்கள். இனிமேல் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்துவது ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் தான். இது ஆர்.எஸ்.எஸ். தலைமை மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரது திட்டமாகும். தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படும் அண்ணாமலைக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம். தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுடன் இவ்வளவு நாளாக சண்டை போட்டுள்ளார் என்பதால் அவருக்கு நிச்சயம் ஏதேனும் ஒரு துறை வழங்கப்படும். தமிழ்நாட்டுடன் தொடர்புடைய ஒரு துறை அவருக்கு ஒதுக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ