Homeசெய்திகள்கட்டுரைநம் வாழ்க்கையே ஒரு அனுபவம் தான் - மாற்றம் முன்னேற்றம் - 6

நம் வாழ்க்கையே ஒரு அனுபவம் தான் – மாற்றம் முன்னேற்றம் – 6

-

- Advertisement -
kadalkanni

நம் வாழ்க்கையே ஒரு அனுபவம் தான்

– என்.கே. மூர்த்தி

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்,
ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்.
– டாக்டர்.
A. P. J.  அப்துல் கலாம்

என்னுடைய அனுபவங்கள் மூலமாக கற்றுக் கொண்டதை தான் இந்த நூலில் பகிர்ந்து கொள்கிறேன்.

நம் வாழ்க்கையே ஒரு அனுபவம் தான் - மாற்றம் முன்னேற்றம் - 6

நான் கல்வராயன் மலைக்கு அடிவாரத்தில் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்தவன். சுதந்திரம் அடைந்த நாற்பது ஆண்டுகள் கழித்து தான் எங்கள் ஊருக்கு மின்சாரம் வந்தது. அறுபது ஆண்டுகள் கழித்து பேருந்து வந்தது. இப்படி எந்த வசதியும் இல்லாத கிராமத்தில் பத்தாவது பாஸ் என்ற தகுதியை பெற்ற முதல் நபரும் நான் தான்.

என் வாழ்க்கையில் நிறைய வேலைகளை செய்திருக்கிறேன். விறகு வெட்டி வியாபாரம் செய்திருக்கிறேன். மாட்டு வண்டிக்கு தேவையான பார், நெடும்பார், வட்டை, ஆர்க்கால்,  கதவுப்பலகை போன்ற மரங்களை வெட்டி வியாபாரம் செய்திருக்கிறேன். கிணறு வெட்டும் வேலை, நெல் அறுப்பது, நெல் அடிப்பது, ஆடு, மாடு வாங்கி விற்பது இது போன்ற எண்ணற்ற வேலைகளை செய்திருக்கிறேன்.

முதல் மதிப்பெண் பெற்ற மாணவன்- மாற்றம் முன்னேற்றம் – 4

அதுமட்டுமல்லாமல் டியூஷன் நடத்தியது, சில ஆசிரியர்களை வைத்து டுடோரியல் நடத்தியது, நேரடி மார்கெட்டிங் செய்தது, சோப்பு தயாரித்தது, சோப் ஆயில் தயாரித்து விற்பனை செய்தது, சாலையில் அமர்ந்து படம் வரைவது என்று நிறைய தொழில் செய்திருக்கிறேன். வேலையும் பார்த்திருக்கிறேன்.

நம் வாழ்க்கையே ஒரு அனுபவம் தான் - மாற்றம் முன்னேற்றம் - 6

நான் செய்த அத்தனை தொழில்களிலும் எதை எதையெல்லாம் செய்யக்கூடாதோ, அதை கற்றுக் கொண்டேன். அத்தனையும் குறிப்பு எடுத்தேன். ஒவ்வொரு நபரிடமும் பேசியதை, பழகியதை வைத்து ஆய்வு செய்து உங்களிடம் இப்பொது பகிர்ந்து வருகிறேன்.

என் அனுபவம் எல்லாருக்கும் பயன்படும் என்பதற்காகவே சொல்கிறேன்.

ஒரு மனிதன் எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் நான் செய்தேன். செய்யக்கூடாததை கற்றுக் கொண்டேன். அதனால் எதை, எப்படி செய்ய வேண்டும் என்றும், எப்படி வாழ வேண்டும் என்றும் சொல்கிற தகுதி எனக்கு இருப்பதாக கருதுகிறேன்.

  • நான் பட்ட கஷ்டம் நீங்கள் யாரும் பட வேண்டாம்.
  • நான் செய்த தொழிலை நீங்கள் செய்ய வேண்டாம்.
  • நான் அடைந்த தோல்வியை நீங்கள் அனுபவிக்க வேண்டாம்.

என் 35 ஆண்டு கால அனுபவங்களை படித்தாலே போதும் உங்களை தேடி வெற்றி வந்தடையும்.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். இந்த தொடரை முழுமையாக படிக்க வேண்டும். அவ்வளவுதான் வெற்றி தானாக வந்து சேரும்.

இப்பொழுது நம்முடைய நிலை எதுவாக இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். நாம் விரும்பிய மனிதனாக மாற முடியும். நாம் வாழ்வின் லட்சியங்களை எளிதாக அடைய முடியும்.

நம் வாழ்க்கையே ஒரு அனுபவம் தான் - மாற்றம் முன்னேற்றம் - 6

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்த 70 முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார். கருப்பினத்தைச் சேர்ந்த லிங்கனின் உத்தரவுகளை வெள்ளைக்கார அதிகாரிகள் சரியாக பின்பற்றவில்லை என்கிற நிலை இருந்தது.

எண்ணங்களை மேம்படுத்துவோம் – மாற்றம் முன்னேற்றம் – 5

அப்போது பேசிய லிங்கன், “உயர் பதவியில் இருக்கும் நீங்கள் எல்லோரும் என்னை கைவிட்டாலும், இப்பொது நான் இருக்கின்ற அதிகாரம் என்னை கைவிட்டாலும் ஒரே ஒருவனுடைய துணையுடன் வெற்றிகரமாக செயல்படுவேன் என்றார். அந்த ஒருவன் எப்பொழுதும் என்னுடன் இருக்கும் தன்னம்பிக்கை தான் என்றார்”.

என் அனுபவங்களை, என் ஆய்வுகளை தொடர்ந்து படியுங்கள். வாழ்க்கையின் தன்மை மாறுவதை உங்களால் உணர முடியும்

தொடரும்….

MUST READ