Homeசெய்திகள்கட்டுரைசதியால் வீழ்ந்த பட்நாயக்! ஸ்டாலினிடம் எடுபடுமா பாஜகவின் தந்திரம்?

சதியால் வீழ்ந்த பட்நாயக்! ஸ்டாலினிடம் எடுபடுமா பாஜகவின் தந்திரம்?

-

- Advertisement -

பாஜகவினர் கட்டமைக்கும் சூப்பர் முதல்வர் என்கிற கதையாடலை திமுக நிர்வாகிகள் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே அந்த கட்சிக்கு சேதம் ஏற்படும் என்று மூத்த பத்திரிகையாளர் சமஸ் தெரிவித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் சமஸ்

தர்மேந்திர பிரதானின் சூப்பர் முதல்வர் கருத்து குறித்து பத்திரிகையாளர் சமஸ் அளித்துள்ள நேர்கணலின் தொடர்ச்சியை இங்கே காணலாம் :- பாஜக மற்றும் தர்மேந்திர பிரதானின் கட்டுக்கதைகள் ஒடிசாவில் எடுபடுவதற்கு காரணம் அங்கே கார்த்திகை பாண்டியன் நேரடியாக அரசின் விஷயங்களில் தலையிட்டார். அதனால் பாஜகவினர் வெளிப்படையாக அவரை விமர்சித்தனர். ஆனால் அதே பாணி அரசியல் தமிழகத்தில் எடுபடுமா? என்றால் ஒற்றை வார்த்தையில் எடுபடாது என்று சொல்லி விடலாம். காரணம் கார்த்திகை பாண்டியன் ஒரு தமிழர், ஒடிசாவில் அவருக்கு நல்ல பெயர் இருந்தபோதும் அவர் ஒடிசாவை சேர்ந்தவர் அல்ல என்பதுதான் பிரதானமான பிரச்சாரமாக இருந்தது. ஆனால் தமிழகத்தில் உதயச்சந்திரன் விவகாரம் அப்படி இல்லை. அவர் தமிழர் என்பதுடன், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தொல்லியல் சார்ந்த தமிழ் பெருமிதத்தை உருவாக்குவதில் அவர் முக்கியமான நபராக உள்ளார். சிறந்த நிர்வாகிகளில் ஒருவராக அறியப்பட்டவர். இந்த ஆட்சியில் ஸ்டாலின் மீது நம்பிக்கை ஏற்படுவதற்கு அவர் தேர்வு செய்த அதிகாரிகளும் காரணம் ஆவர். இறையன்பு, உதயச்சந்திரன் போன்றோர் இருந்ததால் இந்த ஆட்சி நல்ல நிர்வாகத்தை நோக்கி நகர போகிறது என்பதற்கான சமிக்ஞ்சையாக அன்று உணரப்பட்டது.

அதன் காரணமாக இந்த இடத்தில் வெற்றி பெற முடியாது. அதே நேரத்தில் இந்த விவகாரத்தை பேசுவதன் வாயிலாக மு.க.ஸ்டாலின் என்ற பிம்பத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் மரியாதை மீது சேதாரத்தை ஏற்படுத்தலாம். ஏனென்றால் இதுபோன்ற கதையாடல் உருவாக்கத்தின் போது அவரவர்களுடைய சொந்த கட்சியினர் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதுதான் மிகவும் முக்கியமானதாகும். ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் சொந்த கட்சியினரே, பாஜகவின் வியூகத்தில் சிக்கி அவர் மீதும், கார்த்திகை பாண்டியன் மீதும் அதிருப்தியில் இருந்தனர். பாஜக விதைத்த கட்டுக் கதையை அவர்களே நம்பினார்கள். இதுதான் அங்கே நவீன் பட்நாயக்கின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

திமுகவின் வரலாற்றை எடுத்து பார்ப்போமானால், அண்ணா தனது அரசில் இருந்த சிறந்த நிர்வாகிகளுக்கு மரியாதை கொடுத்தார். 1967ல் அவர் ஆட்சி பொறுப்பேற்ற போது காங்கிரஸ் அரசில் தலைமை செயலாளராக இருந்த ராமகிருஷ்ணன் என்பவரே, தலைமை செயலாளராக தொடர்ந்தார். காவல்துறை அதிகாரிகளில் முக்கியமான ஒருவர் ஐ.ஜி அருள். காங்கிரஸ் ஆட்சியின்போது திமுக ஒடுக்குமுறையை சந்தித்தபோதும் அண்ணா அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக காமராஜரால் தேர்வு செய்யப்பட்ட உங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கும், நீங்கள் எல்லாம் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறி அவர்களை அண்ணா அரவணைத்துக்கொண்டார். எனவே அண்ணா காலந்தொட்டே திராவிட கட்சிகளின் 50 ஆண்டு கால தொடர் பயணத்தை பார்த்தோம் என்றால் அதிகார வர்க்கத்திற்கு ஒரு முக்கிய பங்கு இருந்திருக்கிறது. அதனை அரசியலாக்காமல் ஆட்சி நிர்வாகத்தை நடத்துவது என்பதை தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்கள். அதேபோல அனைத்து ஆட்சிகளிலும் சிலர் முக்கியமான பொறுப்புகளில் இருப்பது தொடர்ந்திருக்கிறது. அண்ணா ஆட்சிக்காலத்தில் திறமையான அதிகாரிகளை வைத்துக்கொண்டார். கலைஞருக்கும் அதுபோன்ற அதிகாரிகள் இருந்தார்கள்.

“இது இன்பத் தமிழ்நாடு! இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்திலும் அதிகாரிகள் மிக முக்கியமான பங்கு வகித்திருக்கிறார்கள். ஆனால் அதிமுகவினர் ஜெயலலிதாவை பலகீனமாக பேசியது கிடையாது. பிரதமர் மோடியின் அலுவலகம் என்பது இந்த 10 ஆண்டு காலத்தில் சூப்பர் கேபினட் என்று அழைக்கப்படும். ஆனால் பாஜகவினர் அந்த கதைகளுக்கு இடம்கொடுப்பதில்லை. மாறாக நொறுக்கித் தள்ளிவிடுகின்றனர். பாஜக கட்சி தலைமை பொறுப்பில் நட்டாவிற்கு மேலாக அனைத்து முடிவுகளையும் எடுக்கக்கூடியவராக அமித்ஷா இருப்பதை, அவரை சூப்பர் பொஷிஷன் என்று சொல்வார்கள். ஆனால் பாஜகவினர் அதை நொறுக்கிவிடுவார்கள்.

திமுக என்ன செய்தார்கள் என்று சொன்னால்? உதயசூரியன் ஆட்சியா? உதயச்சந்திரன் ஆட்சியா? என்கிற கதையாடலுக்கு அவர்களேதான் காரணமாக இருந்தார்கள். அதை எழுதத் தொடங்கியவர்கள் யார் என்றால் திமுகவுக்காக ஐ.டி.விங்கில் வேலை பார்த்தவர்கள்தான். துரைமுருகன் போன்ற பல மூத்த அமைச்சர்கள் பேட்டிகளில் தெரிவித்ததையும் பார்க்க முடிந்தது. அந்த கட்சி அதை நம்புவதோ, இதற்கு எதிராக எதிர் கதையாடலை உருவாக்காமல் இருப்பதோ சேதாரத்தை ஏற்படுத்தும்.

ஆடியோ -வீடியோ! சந்தி சிரிக்கும் திமுக கமிஷன் விவகாரம்
அண்ணா அறிவாலயம்

திமுக தனது 75 ஆண்டு கால வரலாற்றில் பிடிமானமாக உள்ள விஷயங்களில் இருமொழி கொள்கையும் ஒன்று. இதனால் மும்மொழி கொள்கையை ஏற்கும் விகாரத்தில் திமுக மாற்றி சிந்தித்தது. முதலமைச்சர் மாற்றி சிந்தித்தார் என்பது பொது வெளியில் இருக்கும் யாரும் நம்புவதற்கு இல்லை. அது ஒரு பிரச்சினையாகவே இருக்காது. இந்த பிரச்சினையில் யாரும் அவரை கேள்வி எழுப்பப் போவது கிடையாது. ஆனால் சூப்பர் முதல்வர் விவகாரம் மட்டும் யார் என்று ஒட்டிக்கொள்ளும். அதை திமுக எப்படி எதிர்கொள்ள போகிறது. இந்த கதையாடலுக்கு என்ன விதமான எதிர் கதையாடலை வைக்கப்போகிறது என்பது தான் முக்கியமானதாகும். அதுதான் திமுக சேதாரம் ஆகுமா? ஆகாதா? என்பதை தீர்மானிக்கும்.

அதேபோல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது செயல்பாடுகளில் 2023ல் சில மாற்றங்களை மேற்கொண்டார். கட்சி நிர்வாகிகள் அனைவரையும் ஆலோசிப்பது, கட்சியில் இருந்த சில இடைவெளிகளை சரிசெய்தார். அதேபோன்று தற்போது மாற்றங்கள் ஏதும் மேற்கொள்கிறாரா? என்பதெல்லாம் பொறுத்துதான் அந்த கதையாடல் அமையும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ