Homeசெய்திகள்கட்டுரைபட்டாபிராம் டைடல் பார்க்: 5000 பேருக்கு வேலை வாய்ப்பு- முதல்வர் ஸ்டாலின் நாளை திறப்பு

பட்டாபிராம் டைடல் பார்க்: 5000 பேருக்கு வேலை வாய்ப்பு- முதல்வர் ஸ்டாலின் நாளை திறப்பு

-

தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய தகவல் தொழில் நுட்ப பூங்காவாக உருவாகியிருக்கும் பட்டாபிராம் டைடல் பார்க் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.

பட்டாபிராம் டைடல் பார்க்: 5000 பேருக்கு வேலை வாய்ப்பு- முதல்வர் ஸ்டாலின் நாளை திறப்பு

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராமில் உள்ள அரசுக்கு சொந்தமான 48 ஏக்கர் நிலத்தில் ஐ.டி நிறுவனங்கள் செயல்படும் வகையில் தொழில்நுட்ப பூங்காவை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையம் எனும் அமைப்பு முயற்சி மேற்கொண்டது. ஆர்.டி.ஐ மூலம் பெற்ற தரவுகளின் அடிப்படையில் அந்த 48 ஏக்கர் நிலத்தில் சரக்கு இரயில் பெட்டி தயாரிக்கும் சதர்ன் ஸ்ட்ரக்சுரல்ஸ் லிமிடெட் [SSL] எனும் தொழிற்சாலை இயங்கி வந்ததும், 30 ஆண்டுகளுக்கு முன் அந்நிறுவனம் மூடப்பட்டதும் தெரியவந்தது. இந்த ஆவணங்களை பெற்று கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் உதவியுடன் ‘டைடல் பார்க்’-ஐ அரசு அமைத்திட வேண்டும் என்ற திட்டத்தினை கடந்த ஆட்சியளர்களிடம் வழங்கினர்.

பட்டாபிராம் டைடல் பார்க்: 5000 பேருக்கு வேலை வாய்ப்பு- முதல்வர் ஸ்டாலின் நாளை திறப்பு முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜனின் தொடர் மற்றும் விடாமுயற்சியினால், கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் “பட்டாபிராமில் டைட்டில் பார்க் அமைக்கப்படும்” என்று அறிவித்தார். தொடர்ந்து அதற்கான அரசாணையையும் 2018ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி வெளியிடப்பட்டது.

இவையெல்லாம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க தமிழ்நாடு அரசின் டிட்கோ பொது நிறுவனத்தின் இணை நிறுவனமான டைடல் நிறுவனம் மூலம் டெண்டர்கள் அறிவிக்கப்பட்டு, அங்கு கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைப்பெற்றது.

48 ஏக்கர் நிலத்தில்  11.41 ஏக்கர் பரப்பளவில் டைடல் பார்க் அமைக்க ஒதுக்கப்பட்டது. ரூ. 230 கோடி திட்ட மதிப்பீட்டில் 5.57 லட்சம் சதுர அடியில் கட்டிடத்திற்கு ப்ளான் செய்யப்பட்டு பணி தொடங்கியது. 2018ம் ஆண்டு மும்முரமாக தொடங்கிய கட்டுமான பணி 2020 – 2021 கொரோனா காலக்கட்டத்தில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அத்துடன் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தினால் திட்ட மதிப்பீட்டுத் தொகையும் 278.84 கோடி ரூபாயாக அதிகரித்தது.

பட்டாபிராம் டைடல் பார்க்: 5000 பேருக்கு வேலை வாய்ப்பு- முதல்வர் ஸ்டாலின் நாளை திறப்பு

2023ம் ஆண்டு மே-க்குள் பணி நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல இடர்பாடுகளினால் அது தள்ளிப்போனது. பின்னர் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் 2024 ஜனவரி மாதம் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்பட்டது. இந்த நிலையில் கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்து தற்போது 21 மாடிக் கட்டிடமாக உயர்ந்து நிற்கும் தொழில்நுட்ப பூங்கா நாளை திறப்பு விழா காண்கிறது.

21 மாடிக் கட்டிடத்தில் அதிநவீன ஸ்கைகார்டன், இணைதள மையம் மற்றும் வணிக மையங்கள் உள்ளிட்ட உலகத்தரத்தில் தொழில்நுட்ப பூங்கா தயாராகியுள்ளது. தமிழகத்தின் 3வது மிகப்பெரிய மற்றும் சென்னை வடமேற்கு பகுதியில் உருவாகியுள்ள இத்தொழில்நுட்பப் பூங்கா ஸ்டார்ட் – அப்கள் மற்றும் IT / ITES நிறுவனங்களின் முகவரியாக திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்தியாவிலேயே முதன் முறையாக ஸ்மார்ட் டைடல் பார்க் பட்டாபிராம்-ல் பயன்பட்டிற்கு வரவிருப்பது பெருமைக்குரியது. இப்பூங்காவில் 13 வது மாடியில் இருந்து 17 வது மாடி வரையில் நவீன தொங்கும் தோட்டமும், 44 ஆயிரம் சதுர அடியில் ஃபுட்கோர்ட் எனக்கூறப்படும் அதி நவீன 5 ஸ்டார் தர உணவகம் மற்றும் மின்சாரத் தேவைக்காக சோளர் பேனல் அமைக்கப்பட்டுள்ளது.

பட்டாபிராம் டைடல் பார்க்: 5000 பேருக்கு வேலை வாய்ப்பு- முதல்வர் ஸ்டாலின் நாளை திறப்பு

இந்த பட்டாபிராம் ஸ்மார்ட் டைடல் பார்க் விரைவில் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என காத்துக்கிடந்த ஆவடி தொகுதி மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, நாளை (நவ.22) அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார்.
இதன் மூலம், 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க பெரும் வாய்பாய் அமைந்துள்ளது. மேலும் இப்பகுதி குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடையும். இதுகுறித்து பட்டாபிராம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் T. சடகோபன் கூறுகையில், இதில் ஏறத்தாழ 5000 முதல் 6000 ஐ.டி தொழில் வல்லுநர்கள், பிற துறை சார்நத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்புள்ளது. தொழில்நுட்ப பூங்காவிற்கு இன்னும் சில அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் தேவை என்று கூறினார்.

இந்திய அதிகாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி லஞ்சம்: அதானிக்கு அமெரிக்காவில் பிடிவரண்ட்!

MUST READ