நாட்டை நரகமாக்கிக் கொண்டிருப்பவர்கள் சொர்கத்தை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது . நாடாளுமன்றத்தில் அமித்ஷா சொன்ன அம்பேத்கா் அம்பேத்கா் என்பது இப்பொதெல்லாம் பேஷன் ஆகிவிட்டது. அதற்கு பதில் கடவுள் பெயரை சொன்னால் சொர்கத்திற்கு செல்லலாம் என்ற வார்த்தை இன்று நாடளுமன்றத்திலும் ,வெளியிலும் பெரும் சர்சையையும் ,போராட்டத்தையும், ஏற்படித்தியுள்ளது. என பிரபல யூடி யூப் செனல் ஒன்றில் நாகை சட்டப் பேரவை உறுப்பினறும் விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச்செயளாருமான ஆளூர் ஷாநவாஸ் கூறியுள்ளாா்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில் இந்த நாட்டை சொர்கமாக மாற்றாவிட்டாலும், அனைவரும் ஜனநாயக அடிப்படையில் அனைவருக்குமான சட்டத்தை தந்தவர் நம் சட்டமேதை, புரட்சியாளா், அம்பேத்கா் . இந்த நாட்டு மக்கள் அனைவரும் சமம், அடித்தட்டு மக்களும் அவர்களின் அடிப்படை வாய்ப்புகளான கல்வி, வேலைவாய்ப்பு, சுயமாரியாதை கிடைக்கபெற்று அனைவரும் சமம் என்ற சிந்தனையை உருவாக்கியவர். அனைவரும் உயர் பதவிகளில் அமர வேண்டும் என்ற கொள்கை சிந்தனையோடு சட்டத்தை இயற்றியவர் அம்பேத்கா்.
பாஜக ஆட்சியாளா்கள் ஜனநாயத்திற்கு எதிரானவர்கள், சமத்துவத்திற்கு எதிரானவா்கள். அவர்கள் சனாதனவாதிகள், சர்வாதிகாரிகள், அம்பேத்கர் எப்போதுமே இவர்களின் கொள்கைக்கு எதிரானவா். பாஜகவினரால் என்றுமே அம்பேத்கரை ஏற்றுக்கொள்ள முடியாது. அம்பேத்கரை அடையாள ரீதியாக பிடித்துக்கொண்டு அம்பேத்கரை விரும்பும் மக்களின் வாக்குகளை பெற மட்டுமே பயன்படுத்தி வருகிறாா்கள் என்று ஷானாவாஸ் குற்றம் சாட்டினாா்.
பிற்படுத்தப்பட்டோர் இனத்தில் பிறந்த பிரதமர் மோடி, பட்டியலினத்திலிருந்து ராம்நாத் கோவிந், பழங்குடியிலிருந்து திரௌபதி முர்முர் போன்றவர்களை உயர்ந்த பதவிகளில் அமர்திவிட்டு அந்த சமூகத்தையே உயர்தி விட்டதாக, அந்த சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு அதிகாரத்தை கொடுத்து விட்டதைப் போல் தாங்கள் அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றுகிறோம் என்று காட்டிக் கொள்கிறாா்கள். அவர்கள் உன்மையாகவே ஜனநாயகதை பின்பற்ற கூடியவர்கள் அல்ல. விவசாய போராட்டத்திலும், மணிப்பூர் போராட்டத்திலும் மௌனம் காப்பது ஏன். இந்தியாவை முன்னேற்ற பல நாடுகளுக்கு சுற்றுபயணம் செய்யும் பிரதமர் மோடி, இந்தியாவுக்குள்ளேயே இருக்கும் மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை என்பதில் கேள்வி எழுகிறது.
அன்றைக்கு சட்ட அமைச்சர் பதவியில் இருந்த அம்பேத்கர், தாழ்த்தபட்ட மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ,பிற்படுத்த பட்ட மக்களுக்கும் அடிப்படை வாய்புகளை ஏற்படுத்தி தர முடியாத அமைச்சர் பதவி எதற்கு என்று ராஜனாமா செய்தவர். அவருக்கு பதவி ஆசை யில்லை. இன்று மணிப்பூர் பற்றி எரிகிறது. இன்று பதவியில் இருக்கும் திரௌபதி முர்முர், பிரதமர் மோடி ஆகியோா் பிற்படுத்த பட்ட மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஜனநாயகம் மறுக்கபடுகின்றது எனறு தங்களுடைய பதிவைியை ராஜனாமா செய்வாா்களா?
சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்தவர்கள், காந்திக்கும், நேருவுக்கும் ஏன் சிலை வைக்கவில்லை, பிஜேபி என்பது 40 வருட கட்சி. அரசியல் நிா்ணய சபை உறுவாக்கும் போதோ, சட்டம் உருவாக்கும் போதோ,நாடு சுதந்திரம் பெற்ற போதோ, முதல் அரசியல் கட்சி உருவான போதோ, அமைச்சரவையின் போதோ பிஜெபி என்கிற கட்சி அப்போது கிடையாது. அன்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மட்டுமே இருந்தது.
இன்று ராகுல், கார்கே வழிநடத்த கூடிய பொதுசிந்தனை உடைய காங்கிரஸ் போல் அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள் பெரும்பான்மையினா் ஆர்.எஸ்.எஸ், பிஜெபியின் சிந்தனை உள்ளவர்களாக இருந்தாா்கள். காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே ஆர்,எஸ்.எஸ் சிந்தனைகளை செயல்படுத்தியவர்கள்.
நாடு சுதந்திரம் அடைந்த பின்பு, அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கும் போது கூட அந்த குழுவில் இருந்த வலது சாரிகள் பெரும் போராட்த்தை நிகழ்த்தினாா்கள். பெறும் போராட்டத்திற்கு பிறகே முடிந்த வரை ஏழை எளியவர்களுகான முற்போக்கு சட்டங்களை அம்பேத்கா் அமைத்தாா். இன்றும் பிற்போக்கான சட்டங்கள் இருப்பதற்க்கு அன்று காங்கரஸ் கட்சியில் இருந்த ஆர்,எஸ்.எஸ். சிந்தனையாளா்கள் தான் காரணம். அப்படிப்பட்ட பொராட்டங்களை எல்லாம் எதிர்கொண்டு சமூகநீதியை நிலைநாட்ட அம்பேத்கர் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கினாா்.
அம்பேத்கா் உருவாக்கிய இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை நடைமுறைபடுத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கியதும் காங்கிரஸில் இருந்த வலது சாரிகளான ஆர்,எஸ்.எஸ் கொள்கையுடவா்கள் தான். அன்றைக்கு ஆட்சியில் இருந்த பிரதமா் நேரு ஒரு சோசலிச சிந்தனை கொண்ட தலைவா், சனாதனவாதி கிடையாது, அன்றைக்கு காங்கிரஸ் என்பது ஒரே கட்சி தான். அதுவும் ஆர்,எஸ்.எஸ் சிந்தைனைவாதிகளின் ஆதிகத்தில் இருந்தது, இன்று பிஜேபி அனைத்திற்கும் காரணம் காங்கிரஸ் தான் என்று சொல்லி தங்களை நல்லவர்கள் பொல் காட்டிக்கொள்கிறாா்கள்.
அம்பேத்கரும், பெரியாரும் ஏன் காங்கிரஸிடம் முரண் பட்டாா்கள், காந்தியிடம் அம்பேத்கா் முரண்பட்டாா், பெரியாா் முரண் பட்டு காங்கிரஸிடம் இருந்து வெளியயேரி 1925 ல் சுய மரியாதை இயக்கத்தை உருவாக்கினாா். அவர்கள் சமத்துவ கொள்கைக்கும், ஜனநாயக கொள்கைகும் எதிரான சிந்தனையுள்ளவர்கள் என்பதால், தாழ்த்தப்ட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பதவியில் இருந்தும் பயன் இல்லை என்று வெளியேறினாா்கள்.
இன்று பிஜெபியிடம் மோடி சரண் அடைந்தது போல், எல்.முருகன் சரண் அடைந்தது போல் அன்று தன்னுடைய சமூகத்தை பலிகொடுத்து விட்டு தன் உயரத்திற்காகவும், அதிகாரத்திற்காவும் மட்டும் அம்பேத்காரும், பெரியாரும் போராடவில்லை, அவர்கள் அவர்களுடைய சமூகத்திற்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடியவர்கள்.
பிஜேபி தாழ்த்பட்ட சமூகத்தில் இருந்து இருவரை மட்டும் பதவியில் அமர்த்திவிட்டு ஒட்டுமொத்த சமூகத்தையே தூக்கிநிருத்திவிட்டதை போல் நாடகம் நடத்துகிறது. அம்பேத்கர் உடல் தகனம் செய்யப்பட்ட சைக்கியபூர்ணியில் இருந்த நிலப்பிரச்சனையை நாங்கள் தான் தீர்த்து வைத்தோம், கடைசி காலத்தில் வாழ்ந்த டில்லி அலிபூர் சாலை வீட்டை புனரமைத்தோம், லன்டனில் அவர் வாழ்ந்த வீட்டை மத்திய அரசு கையகப்படித்தியுள்ளது. அம்பேத்காருக்கு எப்போதுமே இந்த அரசு மதிப்பும் மரியாதையம் கொடுத்துவருகிறோம் என்று பாஜக சொல்வது நாடகம்.
அம்பேத்கர் ஒரு தனி மனிதா் கிடையாது. அவருக்கு ஒரு நினைவகம் வைத்து கொண்டாடி விட்டு அவரை மதிக்கிறோம் என்று கடந்து விடமுடியாது. அம்பேத்கர் என்பது ஒரு தத்துவம், ஒரு கோட்பாடு, அம்பேத்கர் என்பவர் அடையாளம் கிடையாது, அவர் அதிகாரம், வாய்பு மறுக்கபட்டவர்களுக்கும், எளிய மக்களுக்கும் , சட்டத்தின் அடிப்படையில் பாராபட்சம் காட்டாமல் அனைவரும் சமம் என்ற கொள்கை உடையவர், பாராபட்சம் காட்டினால் அது குற்றம் என்று சொன்னவர் அம்பேத்கா்.
பாஜக பாராபட்ச அடிப்படையில் சட்டத்தில் திருத்தும் செய்தவர்கள், இன்னும் திருத்தம் செய்ய முயற்சி செய்து வருகிறாா்கள். மதத்தின் அடிப்படையில் குடியரிமை சட்டம் கொண்டுவருகிறார்கள், சட்ட திருத்தம் கொண்டு வருவது தவறு என்று அம்பேத்கர் சொல்லவில்லை, மக்கள் நலனில் ஏற்படுத்த கூடிய சட்ட திருத்தங்கள் அவசியம், அரசியல் அமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவந்ததே தமிழ் நாடு தான், வாய்பு மறுக்கப்பட்டவர்களுக்காக இடஒதிக்கிடு கிடைக்க வேண்டும் என்று முற்போக்கான சட்டத்தை கொண்டுவந்தார்கள் அது அவசியமான ஒன்று. இன்று சாதிவாரிய கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறுகிறாா், விசிகவும் கூறுகிறது.
சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு மாநிலத்தை கலைத்துவிட்டு ஆளுனரை வைத்துகாண்டு மக்களின் கருத்தை கேட்காமலே காஷ்மீரில் 370 பிரிவை நீக்கியது எப்படி முற்போக்கான திருத்த சட்டமாகும், ஒரு மாநிலத்தின் கருத்தை கேட்டு சட்ட மன்றத்தின் முடிவை கேட்டு எடுக்கவேண்டும் என்பதற்காக தான் சட்டம் இயற்றப்பட்டது. மதத்தின் அடிப்படையில் சிறுபான்மையினரின் உரிமைகளை பரிக்கும் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றியவர்கள் எப்படி அம்போத்கரின் கொள்கையாளா்கள் என்று சொல்கிறாா்கள்.
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் எம்பிகளை வெளியேற்றிவிட்டு நாடாளமன்றத்தை நடத்துங்கள் என்று அம்பேத்கா் சொல்லவில்லை, எதிலுமே ஜனநாயகத்தை பின்பற்றாத பாஜக ஆட்சி முழுக்க முழுக்க அம்பேத்காரின் கொள்கைக்கு எதிரானது.
அம்பேத்காரை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என்று கூறும் அமித்ஷா, பிரதமா் மோடி பத்து ஆண்டுகாளமாக ஆட்சி செய்துவருகிறாா். இன்றும் ஆட்சியில் இருக்கிறாா். இந்த பத்தாண்டு ஆட்சிக்காலத்தில் ஏதாவது ஒரு சமூகத்திற்கு இடஒதுக்கீடு கொடுத்தாா்கள் என்ற சாட்சிகள் உள்ளதா, அவர்கள் பொருளாதார ரீதியாக மட்டுமே இடஒதுக்கீட்டை கொடுக்கிறாா்கள்.
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள பிஜேபி கட்சிக்கு துணிவில்லை, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை, அதனால் அம்பேத்கா் ,அம்பத்கா் என்று சொல்லும் நீங்கள் கடவுளின் பெயரை சொன்னால் சொர்கத்திற்கு செல்லலாம் என்று அமிதிஷா சொல்வதில் இருந்த ஒப்பீடு அம்பேத்கர் குறித்த அவரது தவறான பார்வையை முன்வைகின்றது.
அம்பேத்காரை கொண்டாடவில்லை என்று காங்கிரஸை குறிகூறும் பாஜக பாரத ரத்னா விருதை கொடுத்தது வி.பி சிங், அம்பேத்கர் foundation அமைத்து அவரின், எழுத்து, பேச்சு, சிந்தனைகளை புத்தகங்களாக்கி நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் வி.பி.சிங். 90 களில் அம்பேத்கரின் ஏழுச்சிக்கு வழிவகுத்தவர் விபிசிங் ஆட்சி, அந்த ஆட்சியை கவிழ்தது ஏன். அம்பேத்கரை போற்ற கூடியவர்கள் அம்பேத்காருக்கு சிறப்பு செய்த விபிசிங் ஆட்சியை ஏன் களைக்க வேண்டும்.
விடுதலைக்குமுன் சுதந்திர போராட்ட இயக்கத்திலும் பிஜெபி பங்கேற்கவில்லை, விடுதலைப் பெற்ற பின் சமூகநீதி போராட்டம் நடைப்பெற்றது அதிலும் பிஜேபிக்கு பங்கு இல்லை, அவர்களாகவும் சமூகத்தில் நடக்கும் அவலங்களை எதிர்த்து போராடவில்லை,ஆனால் பிஜேபி தான் தேசபக்தி இயக்கம் என்று சொல்லிக்கொள்வாா்கள்.
காங்கிரஸ் விடுதலைகாக போராட்டம் நடத்தினாா்கள்,விடுதலை போராட்ட கட்சி என்று சொல்கிறாா்கள், திராவிட இயக்கம் சமூகநீதிக்காக போராடினாா்கள், திமுக ,திராவிட இயக்க கட்சி என்கிறாா்கள், அம்பேத்தகரிய இயக்கமாக சாதிய ஒழிப்பு கொள்கையை முன்னிறுத்தி போராட்டம் நடத்துகிறோம் விசிக சாதி ஒழிப்பு கட்சி என்கிறோம், மார்க்ஸிஸ்ட் கட்சி பாட்டாளிகளான தொழிளாலர்களின் நலனை கருத்தில் வைத்து போராடுபவர்கள் என்பதால் அவர்கள் தொழிளாலா் இயக்கம் என்கிறாா்கள், தமிழ் நாட்டில் முன் வைக்கும் மொழி போராட்டத்திலும் பங்கு கொள்ளவில்லை, இது வரை மக்களின் எந்த நலனுக்காகவும் பிஜேபி போராட்டங்கள் நடத்தவில்லை, அப்படி இருக்க எந்த போராட்டத்திலும் பங்கு கொள்ளாத பாஜக மக்களுக்கான நல்ஆட்சியை கொடுக்க முடியம்.
எளிய மக்களிடம் உணர்வுபூர்வமாக கலந்திருக்கும் ஒரு தலைவர் அம்பேத்கா், சாதி, மதம், இனம், பாகுபாடு இன்றி அனைவரும் எல்லா உரிமையும் கிடைக்க வேண்டும் என் போராடியவர், அவருக்கு எதிரான அமித்ஷாவின் வார்ததை மக்களிடையே மிகப் பெரிய கிளர்சியை உருவாக்கியிருக்கிறது என கூறியுள்ளாா்.