Homeசெய்திகள்கட்டுரைபெரியார் சர்ச்சை : எஜமானர்கள் சொல்வதை  அப்படியே பேசும் சீமான்... கொளத்தூர் மணி புகார் 

பெரியார் சர்ச்சை : எஜமானர்கள் சொல்வதை  அப்படியே பேசும் சீமான்… கொளத்தூர் மணி புகார் 

-

- Advertisement -

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எஜமானர்கள் உத்தரவிட்டதன் பேரில் தான் பெரியார் குறித்து அவதூறு பரப்புவதாக திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி குற்றம்சாட்டியுள்ளார்.

பெரியார் குறித்த சீமானின் அவதூறு பேச்சு தொடர்பாக திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:- பெரியார் குறித்து எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சீமான் பேசுகிறார் என்று தெரிய வில்லை. நாங்கள் படித்தவரை இல்லாத விஷயங்களைத் தான் அவர் பேசி கொண்டிருக்கிறார். நாம் தமிழர் கட்சி கரைந்து கொண்டே செல்கிறது. கட்சியில் இருந்து ஒவ்வொருவராக விலகிக்கொண்டு இருக்கையில், தன்னை விளம்பரப்படுத்தி கொள்வதற்காக அவர் இப்படி பேசி இருக்கலாம் என்று தோன்றுகிறது. பெரியார் உள்ளிட்ட எந்த தலைவராக இருந்தாலும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. ஆனால் ஆதாரம் இல்லாமல் அபத்தமாக பேசுவது தவறு. விமர்சிப்பது என்பது வேறு, தூற்றுவது என்பது வேறு. சீமான் பேசுவது எல்லாம் அவதூறுகளாகவும், தூற்றுதலாகவும் தான் உள்ளது. அது ஒரு அறிவுப்பூர்வமான விவாதத்திற்கு முன்வைக்கும் விதமாக இல்லை.

சீமான் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் - புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்

முதலில் திராவிட கொள்கை என்றால் என்ன என்று சீமானுக்கு தெரியுமா? என தெரியவில்லை. சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, தனித்தமிழ்நாடு இதை எல்லாம் சேர்த்தது தான் திராவிடம் என்ற சித்தாந்தம். இது ஒரு மனிதரை இனத்தை குறிப்பதெல்லாம் பிறகுதான். ஆரியர்களிடம் இருந்து தம்மை வேறுபடுத்திக்காட்ட திராவிடர் என்ற சொல்லை பெரியார் பயன்படுத்தினார். இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது மொழி எதிர்ப்பு போராட்டம் அல்ல. தமிழர்களின் வாழ்வியலில் மனுவை திணிக்கும் முயற்சியின் முதற்படி என்று பார்ப்பதாக பெரியார் தெரிவித்தார். அத்தகைய நபர் குறித்து சீமான் பேசுகிறார்.

சீமானுக்கு என்ன அறிவு இருக்கிறது என புரிந்துகொள்ள முடியவில்லை. எதை சொல்கிறார். எந்த அடிப்படையில் சொல்கிறார் என தெரியவில்லை. பெரியாரின் பேச்சுக்களில் எதையாவது ஒரு வரியை எடுத்துக்கொண்டு பெரியார் தான் இப்படி சொன்னார் என சொல்வது. இந்த அறிவு கெட்டவர்கள் எல்லாம் எப்படி ஆதாரம் இல்லாமல் பேசுகிறார்கள் என்றால் இவர்களது எஜமானர்கள் கொடுத்துள்ளார்கள். அவர்கள் பெரியாரை பற்றி பேசு என்று சொல்லியுள்ளனர். நாங்கள் சொன்னோம் கேட்கவில்லை. நீ சொல்லிப்பார் நன்றாக போகும் என சீமானின் எஜமானர்கள் சொல்கிறார்கள். பெரியாரை முழுமையாக பார்க்க வேண்டும். அவ்வாறு தெரியாவிட்டால் அமைதியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரியாரியலை ஏற்றுக் கொண்டவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். பெரியார் குறித்து சீமான் போன்றோர் பேசுவது ஆச்சரியமாக உள்ளது. அரசியல், தமிழ்நாடு எந்த அரசியல் நகர்வை குறித்தும் புரியாமல் அவர் பேசுகிறார்.

மாநிலத்தில் பாதுகாப்பான சூழலை உருவாக்க பாஜகவை அகற்ற வேண்டும் - சஞ்சய் ராவாத்

புதிய கல்வி கொள்கை மூலம் மத்திய அரசு இந்தியை திணிக்கிறது. அப்போது என்ன செய்தீர்கள். ஈழ மக்களுக்கான தடையை நீக்கக்கோரி வைகோ தான் போராடி வருகிறார். விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது என்று கூறி அரசாணையை பெரியார் திடலில் சென்றுதான் நோட்டீஸ் ஒட்டுகிறார்கள். யார் புலிகளுக்கானவர்கள் என்று அவர்களுக்கு தெரிகிறது. நம்முர்காரர்களுக்குத்தான் புரியவில்லை. அதை புரியவைப்பது மிகவும் கடினம். பெரியாரியத்தை அழிப்பேன் என சீமான் கூறுவது என்பது அவரது எஜமானர்கள் சொல்வதை சீமான் செய்கிறார். அல்லது அறிவு மட்டம் குறைவு என்று அர்த்தம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ