பல்கலைக்கழகங்கள் மூலம் மாணவர்களிடம் சனாதனத்தை பரப்புவதற்காகவே ஆர்.என்.ரவி, ஆளுநராக நியமிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் வேந்தர் பொறுப்பில் இருந்து நீககப்பட்டதால் தமிழர்களுக்கு மிகப் பெரிய விடிவு காலம் பிறந்துவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பாக பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், ஆளுநர் ஆர்.என்.ரவி நேர்மையற்றவர் என்று கடுமையான வார்த்தைகளால் கண்டித்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. ஆளுநர் ரவி விவகாரத்தில் இதைதான் செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். உச்சநீதிமன்றம் அதை செய்திருக்கிறது.
இந்த நேர்மைற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிக்கு வந்தபோது சிங்கம் களமிறங்கி விட்டது என்று பாஜகவினர் பெருமிதமாக தெரிவித்தனர். அன்றைக்கே உங்களது சிங்கத்தை தமிழர்கள் எப்படி ஓட ஓட விரட்டுகிறார்கள் என்று பாருங்கள் என சொன்னோம். அது இன்று நடைபெற்றுள்ளது. ஏற்கனவே பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தல் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனத்தை பதிவு செய்திருந்தது. அதுதான் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உச்சநீதிமன்ற கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராஜ்பவனை விட்டு ஓட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். உங்களுடைய வேலை என்பதே மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது தான். ஒவ்வொரு மசோதா வரும் போதும் மற்றவர்களிடம் சென்று விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தால், நீங்கள் எதற்காக ஆளுநராக இருக்கிறீர்கள்?.
இந்த விவகாரத்தில் பெருத்த அவமானம் பாஜக – ஆர்எஸ்எஸ்க்கு தான். அவர்கள் ஒரு சனாதனவாதியை தமிழக ஆளுநராக கொண்டு வந்தார்கள். எதற்காக அவர் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார் என்றால் ஆளுநரின் கட்டுப்பாட்டில்தான் கல்லூரிகள் உள்ளது. அவர் மூலம் மாணவர்கள் மனதில் சனாதனத்தை விதைக்க வேண்டும் என்பது தான் அவர்களது நோக்கம். சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக, ஒரு சனாதனவாதியை நியமித்து, அவர் மூலம் பெரியாருக்கு எதிரான கொள்கைகளை பரப்பினார்கள். மாணவர்கள் மத்தியில் பெரியார் பற்றியும், திருவள்ளுவருக்கு காவி உடைஅணிவித்து அது பற்றி பேசியும், சனாதனத்தை எதிரியான வள்ளலாரை, ஒரு சனதாவாதியாக சித்தரித்து பேசுவது போன்ற நடவடிக்கைகளை ஆர்.என்.ரவி மேற்கொண்டார்.

இந்தியாவில் இதுவரை எத்தனையோ மோசமான ஆளுநர்கள் இருந்துள்ளனர். ஆனால் இவரை போன்று நீதிமன்றத்தால் கடுமையாக கண்டிக்கப்பட்ட ஆளுநர் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். இந்த வழக்கு வரலாற்று சிறப்பு மிக்க வழக்கு ஆகும். தமிழர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் மிகப்பெரிய விடிவு காலம் பிறந்திருக்கிறது. இனி ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக பல்கலைக்கழங்களின் வேந்தர் கிடையாது. அதனால் ஆர்.என்.ரவியால், துணை வேந்தர்களை நியமிக்க முடியாது. ஆனால் ஆர்.என்.ரவி தனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டார்.
உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த தீர்ப்பு என்பது கேரளா, பஞ்சாப், மேற்குவங்கம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். இனி எந்த மாநில சட்டப் பேரவைகளிலும் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களை ஆளுநர்கள் கிடப்பில் போட முடியாது. மாநில அரசு சட்டப் பேரவையில் மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் கை ழுத்து போட வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும். 2 மறை திருப்பி அனுப்பலாம் 3 வது முறை மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்தே ஆக வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.