Homeசெய்திகள்கட்டுரைபிரபாகரனே பெரியாரிஸ்டுதான்... தரவுகளுடன் கொளத்தூர் மணி!

பிரபாகரனே பெரியாரிஸ்டுதான்… தரவுகளுடன் கொளத்தூர் மணி!

-

- Advertisement -
kadalkanni

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு பெரியாரியவாதி என்றும், அந்த இயக்கத்தில் பலர் பெரியாரியவாதிகளாக இருந்தனர் என்றும் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

பிரபாகரனுக்கு எதிராக பெரியாரை சீமான் முன்னிறுத்துவது தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு கொளத்தூர் மணி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- சீமான் பிரபாகரனையும், பெரியாரையும் எதிர் எதிர் திசையில் நிறுத்தியுள்ளார். இது அவரது சுயநலம் சார்ந்த அரசியல்தான். தந்தை செல்வா வந்து சந்தித்தபோது, பெரியார் அடிமைகள் எப்படி உதவ முடியும் என்று அவரிடம் கூறியதாக சீமான் சொல்கிறார். இது வரலாற்று புரிதல் இல்லாத மடத்தனமான பேச்சு. 1972ல் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது தனி ஈழ தீர்மானம் கூட நிறைவேற்றப்பட வில்லை. செல்வா சந்தித்தபோது, நாங்களும் உரிமையற்றவர்களாக தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறோம். என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று பெரியார் சொன்னார். இது தொடர்பாக செல்வா உடன் வந்த மாணவர் சத்தியேந்திரன் என்பவர் புத்தகம் எழுதியுள்ளார். பெரியார் சொன்னபோது இருந்த சூழல் என்ன?, எப்போது சொல்லப்பட்டது? என்பது முக்கியம். இது உண்மைக்கு புறம்பானது. 1973ல் பெரியார் தனி ஈழம்தான் தீர்வு என விடுதலை மலரில் எழுதுகிறார். தமது இறப்புக்கு 4 நாட்களுக்கு முன்பு வரை தனித்தமிழ்நாடு பேசியவர் பெரியார்.

தேசிய இன சுயநிர்ணயம் பற்றிக்கூட பேசாதவர்கள் நாம் தமிழர்கட்சியினர். இதற்காக எந்த முன்னெடுப்பும் எடுக்காத இவர்கள், தனித்தமிழ் நாட்டிற்காக போராடிய பெரியாரை விமர்சிக்கிறார். தேசிய பட எரிப்பு போராட்டத்தை நடத்தியவர் பெரியார். சீமான் சொல்லும் அவரது தாத்தா சி.ப.ஆதித்தனாரும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து  வெளியேறினார். இறுதியில் தனது கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்தார். 1951 இடஒதுக்கீட்டிற்கான போராட்டம் மட்டும் அல்ல. வடஎதிர்ப்பு போராட்டமும் சேர்த்தே நடத்தினார். அண்ணாவின் பணத்தோட்டம் என்பது வடவர் எதிர்ப்பு போராட்டத்திற்கான ஒரு ஆவணம். இது போன்று சீமான் என்ன முயற்சி மேற்கொண்டார். திராவிடர் கழகம் சார்பில் கி.வீரமணி தலைமையில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு என்ற பயணம் நடத்தப்பட்டது. அதனை இப்போது மத்திய அரசின் புறக்கணிப்பை தமிழ்நாடு அரசு செய்துகொண்டது. இதனை எல்லாம் பேசாமல் நாங்கள் தமிழ்தேசியம் அமைக்கிறோம் என கூறுகிறார்கள். தமிழன் முதலமைச்சர் ஆக வேண்டும் என்றால் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி போன்றோர் முதலமைச்சர் ஆனபோதே கட்சியை கலைத்துவிட்டு போயிருப்பார். சீமான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதே தமிழ்தேசியம் என அவர்கள் விளக்கம் அளிப்பார்கள்.

பிரபாகரன், பெரியார், திராவிட இயக்க எதிர்ப்பாளர் என்று சீமான் கட்டமைக்க விரும்புகிறார். இறுதிப்போருக்கு பின்னர் 2011ல் தமிழ்தேசிய நாட்காட்டி என்ற ஒன்றை ஈழத்தமிழர்கள் வெளியிட்டனர். புலிகள் இயக்கம் போட்ட அந்த நாட்காட்டியில் தமிழின தலைவர்கள் என்று ஒரு பக்கம் பெரியார், மறுபக்கம் பிரபாகரன் இருந்தார். புலிகளை பொறுத்தவரை பெரியார் குறித்த புரிதலும், அவரை பற்றிய நீண்ட வாசிப்பும் இருந்தது. பெரும்பாலானோர் பெரியாரியத்தை ஏற்றவர்களாக இருந்தனர். அமைதி ஒப்பந்தம் 2002ல் நடைபெற்றபோது, மக்களிடம் சென்று கடவுள் மறுப்பு குறித்து பேச வேண்டும் என பிரபாகரன் அறிவுறுத்தினார். 2006க்கு முன்பாக ராவணனை தலைவனாகவும், ராமரை எதிரியாகவும் வைத்து இலங்கை மண் என்ற நாடகத்தை நடத்தினார்கள். அதற்கு யாழ்ப்பாண தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அறிந்த பிரபாகரன் மீண்டும் அந்த நாடகத்தை ஒலிபரப்ப சொன்னார். என்ன கருத்தியலோடு இருந்தால் அவர் இதனை சொல்லியிருப்பார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தினர், அந்த இயக்கத்தில் உள்ள பெண்களை  திருமணம் செய்துகொண்டபோது தாலி தவிர்க்கப்பட்டது. கட்டித்தான் தீர வேண்டும் என்றால், புலிகள் சின்னம் பொறித்த தங்க சங்கிலியை அணிந்து கொண்டனர். சாதிய கொடுமைகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டது. பெண் விடுதலை குறித்தும் பேசினார். ஆனைமுத்து தொகுத்த பெரியார் சிந்தனைகள் 3 தொகுதிகளையும் நான்தான் அனுப்பி வைத்தேன். நாம் வெளியிடும் நூல்களை நூலகங்களுக்கு கொடுப்பதற்காக வாங்கினார். இந்த நாட்டில் உள்ள திராவிட இயக்க சிந்தனைகள் அறிந்தவராக இருந்தார். பிரபாகரனுக்கு, கலைஞரின் பராசக்தி பட வசனம் அவருக்கு மனப்பாடமாக பேசுவார். தமிழ்நாட்டில் நடைபெறும் பண்பாட்டு மாற்றங்களையும் அவர் புரிந்துகொண்டார். பிரபாகரன் சொன்னார், ஒரு ரா அதிகாரி என்னிடம் பேசினார். நீங்கள் ஒருமுறை அவரை பார்த்தால் உங்களுக்கு பார்ப்பன எதிர்ப்பு வந்துவிடும் என்று, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ