Homeசெய்திகள்கட்டுரைஆட்டத்தை தொடங்கிய ராமதாஸ்! அமித்ஷாவை சந்திக்கும் அன்புமணி!

ஆட்டத்தை தொடங்கிய ராமதாஸ்! அமித்ஷாவை சந்திக்கும் அன்புமணி!

-

- Advertisement -

அன்புமணி ராமதாஸ் பாஜகவுக்கு முழுமையாக சரண்டர் ஆகியது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டதாகவும், அதன் காரணமாகவே ராமதாஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

senthilvel new
senthilvel new

பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டிருப்பதன் பின்னணி குறித்து பத்திரிகையாளர் செந்தில்வேல் யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:- தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகும். பாமகவை விட மிக குறைவான வாக்கு சதவீதத்தை பாஜக கொண்டிருக்கிறது. ஆனால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஒரே காரணத்திற்காக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தங்களை தலைவர் போல காட்டிக்கொண்டு அதிமுகவிடம் பேசும்போது தேஜ கூட்டணி உடன் அதிமுக கூட்டணி என்கிற தோற்றத்தை அவர்கள் காட்ட முயற்சிக்கிறார்கள். இதன் மூலம் பாஜக வளர்ந்து விட்டது என்பதை போன்று அவர்கள் காட்ட முயற்சிக்கிறார்கள். அன்புமணி ராமதாசுக்கு, அது புரியாமல் இருக்கலாம். ஆனால் மூத்த அரசியல்வாதியான ராமதாசுக்கு, பாஜக என்ன செய்கிறார்கள் என்று அவருக்கு நன்றாக தெரியும். அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இல்லை என்று சொன்னாலே அந்த கூட்டணி பூஜியமாகிவிடும்.

ராமதாஸ் ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக உள்ளார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்தால் அது பாமகவுக்கு பெரிய அளவில் கை கொடுக்காது. அதனால் அவர் அதிமுக கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறார். அதிமுக – பாஜக ஓரணியில் வந்தாலும் கூட, பாமக தனக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளை தனியாக நடத்த விரும்புகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தமாகா, கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்றவர்களுக்கு பெரிய அளவில் வாக்கு சதவீதம் இல்லை. வாக்கு சதவீதம் என்று பார்த்தால் பாமகதான் அதிகம் உள்ளது. நியாயமாக தேசிய ஜனநாயக கூட்டணியை பாமக தான் வழிநடத்த வேண்டும். ஆனால் அன்புமணி அந்த இடத்தை இழந்துவிட்டார். அப்போது ராமதாசுக்கு கோபம் வருகிறது. அவர்களுக்கு அரசியல் எதிரியாக களத்தில் உள்ளது விசிக. விசிக கட்சி அங்கீகாரத்தை பெற்றுவிட்டது. ஆனால் பாமக கட்சி அங்கிகாரத்தை இழக்கும் நிலையில் உள்ளது. அன்புமணி பெரிய சிக்கலில் கட்சியை கொண்டுபோய் நிறுத்திவிட்டார் என்று ராமதாசுக்கு தெரிகிறது. அன்புமணி முற்றிலும் பாஜகவுக்கு முழுமையாக சரண்டர் ஆகியது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது அன்புமணி அதை புகழ்ந்து பேசினார். ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ் அதை விமர்சித்தார். ஆளுநர் விவகாரத்தில் அன்புமணி எந்த கருத்தும் சொல்லவில்லை. ஆனால் ராமதாஸ் ஆளுநருக்கு எதிராக கடுமையான அறிக்கையை வெளியிட்டார். இன்றைக்கு செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், நீட் தேர்வுக்கு எதிராக எந்த கட்சி போராடினாலும் அந்த கட்சிக்கு பாமகவின் ஆதரவு உண்டு, அந்த போராட்டத்தில் பாமக பங்கேற்கும் என்று சொல்கிறார். மறைமுகமாக திமுகவையும் அவர் ஆதரிக்கிறார். வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்திற்கு பாமக ஆதரித்தது. ஆனால் நாடாளுமன்றத்தில் அன்புமணி நடுநிலை வகித்தார். அவரது நிலைப்பாட்டில் ராமதாசுக்கு உடன்பாடு கிடையாது. அதனால் இது தொடர்பான கேள்விக்கு அன்புமணியிடமே பதில் கேட்குமாறு செய்தியாளர்களிடம் சொல்லிவிட்டார். தனது பேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டனர். ஆனால் எம்பி ஆக இருக்கும் அன்புமணி கேட்கவில்லை. அதனால் அன்புமணியை கட்சி பொறுப்பில்ல இருந்து ராமதாஸ் நீக்கியுள்ளார்.

Ramadoss

பாமக, அதிமுக கூட்டணிக்கு தான் செல்கிறது. ஆனால் கூட்டணியில் மேஜர் பாட்னராக பாமக இருக்க வேண்டும் என்பதுதான் ராமதாசின் நிலைப்பாடு. 2016ல் அன்புமணி முதலமைச்சர் வேட்பாளராக இறங்கும்போதே ராமதாசுக்கு அது நடக்காது என்று தெரியும். இதனை தொடர்ந்து, 2021ல் அதிமுக உடன் ராமதாஸ் போராடி கூட்டணி வைத்தார். அதனால் 4 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். 2024 நாடாளுமன்ற் தேர்தலில் பாமக – பாஜக கூட்டணிக்கு சென்றது. இதனால் ஒரு இடம் கூட அந்த கட்சிக்கு கிடைக்கவில்லை. இதனால் ராமதாஸ் என்ன நினைக்கிறார் என்றால்?  திமுக கூட்டணி இல்லாவிட்டால் அதிமுக கூட்டணியில் தான் இருக்க வேண்டும். இன்னைக்கு பாஜக, தங்களை  விட பெரிய கட்சி என்ற பிம்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று ராமதாஸ் நினைக்கிறார். விஜய் அரசியலுக்கு வருகிறபோது வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் ஈர்க்கப்படுவார்கள். இதேபோல், பாஜகவின் வளர்ச்சியை கண்டு வன்னிய இளைஞர்கள் அதில் ஈர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பாமகவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டு விடும். இதனால் வடமாவட்டங்களில் பாஜகவை வளரக் கூடாது. அதிமுகவின் மேஜர் பாட்னராக பாமகதான் இருக்க வேண்டும் என்பது தான் ராமதாசின் விருப்பமாகும்.

இந்த விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ்க்கு இரண்டு வாய்ப்புகள் தான் உள்ளன. ஒன்று கட்சியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு செயல் தலைவராக தொடரலாம். அல்லது செயல் செயல் தலைவர் பதவி தனக்கு வேண்டாம். கட்சியின் அடிமட்ட தொண்டனாக தொடர்வதாக அவர் சொல்லாம். அவர் ராமதாசுடன் முரண்பட்டு தனி இயக்கமாகவோ அல்லது வேறு இடத்திற்கு நகர்வது என்பதோ வாய்ப்பில்லை. ஒருவேளை அதையும் தாண்டி பாமகவில் இருந்து பிரிந்து தனி இயக்கம் தொடங்குவார் என்றால் அது அவரை பலவீனப்படுத்தும். அவரால் அகிலேஷ் போன்று வெற்றி கரமாக இருக்க முடியாது. அரசியல் களத்தில் மருத்துவர் ராமதாஸ் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவர் ஆவார். அவர் அளவுக்கு அன்புணியால் அரசியல் களத்தில் வெற்றி பெற முடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ