Homeசெய்திகள்கட்டுரைநயினாருக்கு எதிராக ரிப்போர்ட்! ராமேஸ்வரம் மீட்டிங்! உடையும் சீக்ரெட்!

நயினாருக்கு எதிராக ரிப்போர்ட்! ராமேஸ்வரம் மீட்டிங்! உடையும் சீக்ரெட்!

-

- Advertisement -

வன்னியர் உள் இடஒதுக்கீடு விவகாரம் முக்குலத்தோர் சமுதாயத்தினரிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதனால் அவர்கள் எடப்பாடிக்கு எதிரான மனநிலையில் உள்ளதாகவும் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜகவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்படும் நபர் குறித்தும், அதிமுக – பாஜக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு குறித்தும் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- தமிழக பாஜக தலைவர் பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் பெயர் தொடர்ச்சியாக அடிபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் அவரது பெயர் சொல்லப்பட்டது. நயினார் நாகேந்திரனை தேர்வு செய்வதற்கு ஒரு காரணம் அவர் சார்ந்துள்ள சமுதாய வாக்குகளாக இருக்கலாம். பாஜகவில் மேற்கு மாவட்டங்களில் உள்ள கவுண்டர் சமுதாயத்தினரே தலைமை பொறுப்புகளில் உள்ளனர் என்றும், அதிமுகவிலும் அவர்கள் தான் உள்ளனர் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. எதிர்வரும் தேர்தலில் மேற்கு மண்டலத்திலேயே அவர்களது பலம் குறைந்துவிட்டது. அதற்கு காரணம் செந்தில்பாலாஜி. அதனால்தான் செந்தில் பாலாஜிக்கு எதிராக மீண்டும் டாஸ்மாக் வழக்குகள் எல்லாம் வந்தது. கோவை மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் வரை செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகள் வந்து கொண்டுதான் இருக்கும். திமுகவும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளது.

nainar nagendran

பாஜகவுக்கு தெற்கில் ஒபிஎஸ், தினகரன் இருந்தால் தேவர் சமுதாய வாக்குகள் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தேவர் சமுதாய வாக்குகளை ஜெயலலிதா மறைக்கு பின்னர் எப்போதோ அதிமுக இழந்துவிட்டது. ஒரு வேளை தினரனுக்காகவோ, ஓபிஎஸ்க்காகவோ வாக்களிப்பார்கள் என்றால் 2024 மக்களவை தேர்தலில் தினகரனுக்கும், ஓபிஎஸ்க்கும் பெரிய அளவில் வாக்களித்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. என்னை பொருத்தவரை இந்த தேர்தலில் ஒபிஎஸ், தினகரன் பாஜக உடன் இருந்தாலும் அவர்களுக்கு பெரிய அளவில் வாக்குகள் கிடைக்காது. அதிமுக மீது இருக்கக்கூடிய  பெரிய அதிருப்தி என்ன என்றால், 2021 சட்டமன்ற தேர்தல் வருகிறபோது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதுதான். அப்போது மற்றொரு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை புறக்கணிப்பதாக தான் அர்த்தமாகும். அதுதான் எடப்பாடி பழனிசாமி மீது இருக்கும் கோபமாகும். அந்த கோபம் இன்னும் அந்த பகுதி மக்களிடம் ஆறவில்லை. அந்த பகுதியில் உள்ள சிறிய சிறிய சமுதாய அமைப்புகள் எல்லாம் திமுகவுடன் தான் உள்ளனர். மீண்டும் பாஜக, அதிமுகவை ஒருங்கிணைத்து ஒரே கூட்டணியில் போட்டியிட்டாலும் வெற்றிக்கான வாய்ப்பு குறைவாக தான் உள்ளது. ஏனென்றால் எஞ்சி இருக்கும் வாக்குகளை விஜயும், சீமானும் பிரித்து விடுவார்கள்.
பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு ஜூன் 27க்கு ஒத்திவைப்பு

தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில் வானதி சீனிவாசனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. வானதி எம்எல்ஏவாக வெற்றி பெற்றிருக்கிறார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மிகவும் நெருக்கமான நபர் ஆவார். நயினார் நாகேந்திரன் தரப்பை பொறுத்தவரை தலைவர் பதவி கிடைக்கும் என்பதில் முழுமையாக நம்பவில்லை. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் அவர் பெயர் சொல்லப்படும் ஆனால் பதவி வழங்கப்படாது. அதனால் அவருக்கே நம்பிக்கை இல்லை. நயினாருக்கு எதிரான அறிக்கையும பாஜக தலைமையிடம் தரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பெரிய அளவில் வாக்குகளோ, சட்டமன்ற உறுப்பினர்களோ கிடையாது. ஆனால் அங்கு உட்கட்சி பூசல்கள் அதிகமாக உள்ளது. ஒவ்வொருவரும் தனிப்பட்ட தலைவராக நினைக்கிறார்கள். தங்களுக்கு கீழே கட்சி உள்ளதாக கருதுகிறார்கள். நிறைய பேர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மத்தியில் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது.

vanathi s

என்னை பொருத்தவரை அண்ணாமலைக்கு, தேசிய அளவில் கட்சியில் பொறுப்பு கொடுப்பார்கள். ராஜ்யசபாவில் சீட் கொடுத்து அவரை மத்திய இணை அமைச்சராக்க வாய்ப்பு இல்லை என்றுதான் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் இருக்க இருக்க அவருக்கு வளர்ச்சி என்று அண்ணாமலை நினைத்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் இன்னும் அதிகமாக பேச பேச அதிமுகவுக்கான இடம் கரைகிறது. அதை திமுக கைப்பற்றி கொள்கிறது. இதனை பாஜகவினர் உணர்ந்துள்ளதா என்று தெரியவில்லை. டெல்லிக்கு எதிராக திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கோ, அல்லது தமிழ்நாட்டு பிரச்சினைகளுக்கோ அதிமுக எங்கே பேச வேண்டுமோ? அவற்றை எல்லாம் அண்ணாமலை பேசி விடுகிறார். அதனால் அண்ணாமலை தனிப்பட்ட முறையில் தன்னுடைய சுயத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தமிழ்நாடு அரசியல் களத்திற்கு பொருந்தாத நபராக தான் அண்ணாமலை உள்ளார்.

"குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு....."- அண்ணாமலை ட்வீட்!
Photo: Annamalai

2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை பாஜக நிச்சயமாக பயன்படுத்தும். ஏனென்றால் அண்ணாமலை இல்லாமல் பாஜகவுக்கு தளம் இல்லை. பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும் அண்ணாமலை தமிழக பாஜகவில் ஒரு முக்கிய நபராக தான் இருப்பார். எந்த விதத்திலும் அவருடைய பொறுப்புகள் மாறப் போவது இல்லை. தலைவர் பொறுப்புக்கு மாற்றாக கமிட்டி அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் அதற்கான வாய்ப்புகள் கிடையாது. அப்படி என்றால் அவர் லண்டன் போனபோது அமைக்கப்பட்ட கமிட்டி அப்படியே தொடர்ந்திருக்கலாம். ஆனால் பாஜகவை பொறுத்தவரை அதிமுக கூட்டணிக்காக அண்ணாமலையை நீக்கினால், கடைசி நேரத்தில் எடப்பாடி பழனிசாமி விஜயுடன் கூட்டணி என்று சென்னால் பாஜக நிலை என்னவாகும் என்று தெரியவில்லை. ஏனென்றால் தற்போது வரை பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்யவில்லை. பிரதமர் வருகையின்போது எடப்பாடி அவரை சந்திப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் மோடியின் அஜெண்டாவில் இந்த சந்திப்புகள் எதுவும் கிடையாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ