Homeசெய்திகள்கட்டுரைபாமகவின் எழுச்சியும் வீழ்ச்சியும் - என்.கே.மூர்த்தி

பாமகவின் எழுச்சியும் வீழ்ச்சியும் – என்.கே.மூர்த்தி

-

ஆரம்பகாலத்தில் வன்னியர் மக்களின் பாதுகாவலராக வாழ்க்கையை தொடங்கி, ஒரு கட்டத்தில் சமூக நீதி காவலராக வளர்ந்து ஒட்டுமொத்த தமிழர்களின் தலைவராக உயர்ந்து, கடைசியில் தொடங்கிய இடத்திற்கே சாதி சங்கத்தில் வந்து நின்றவர் தான் டாக்டர் ராமதாஸ்.

பாமகவின் எழுச்சியும் வீழ்ச்சியும் - என்.கே.மூர்த்தி

1980ல் வன்னியர் சங்கமாகத் தொடங்கப்பட்டு 1988ல் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக பாட்டாளி மக்கள் கட்சி உருமாற்றம் அடைந்தது.

பாமக தொடங்கப்பட்ட காலத்தில் எதற்காகவும் வளைந்து, நொடிந்து போகாத பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வீரியம் மிக்க குரலாக பார்க்கப்பட்டது.

1988 ல் தொடங்கப்பட்ட பாமக 1989ல் நடந்த தேர்தலில் பங்கேற்காமல் பார்வையாளராக இருந்து வேடிக்கை பார்த்தது.

அதே 1989ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறு சிறு அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து 33 தொகுதிகளில் பாமக போட்டியிட்டது. அனைத்து தொகுதிகளிலும் தோல்வி. ஆனாலும் 6% வாக்குகளை பெற்று அரசியல் கட்சிகளை திரும்பிப் பார்க்க வைத்தது.

பாமகவின் எழுச்சியும் வீழ்ச்சியும் - என்.கே.மூர்த்தி

1991ல் நடந்த நாடாளுமன்றத் & சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் லீக், குடியரசு கட்சி போன்ற சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு சட்டமன்ற தேர்தலில் 199 தொகுதிகளிலும், நாடாளுமன்ற தேர்தலில் 31 இடங்களிலும் போட்டியிட்டது.

1991 தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். ஜெயலலிதா தலைமையில் அதிமுக – வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியும், பாமக வேட்பாளராக பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் வெற்றிப் பெற்றார்கள்.

பாமகவின் எழுச்சியும் வீழ்ச்சியும் - என்.கே.மூர்த்தி

1996ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான திவாரி காங்கிரசும் – பாமகவும் கூட்டணி அமைத்தது. அதில் 116 தொகுதிகளில் நின்ற பாமக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

1998 ல் தேவுகவுடா ஆட்சி கவிழ்ந்தது. அப்பொழுது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்து 5 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 4 தொகுதிகளில் வெற்றியும் பெற்றது.

பாமகவின் எழுச்சியும் வீழ்ச்சியும் - என்.கே.மூர்த்தி

1999ல் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. திமுகவுடன் பாமக கூட்டணி அமைத்து 8 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 5 இடங்களில் வெற்றிப் பெற்றது.

அப்பொழுது கலைஞர் கருணாநிதி ஆதரவுடன் மத்தியில் என்.டி. சண்முகம், பொன்னுசாமி ஆகிய இருவர் அமைச்சர்கள் ஆனார்கள்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு – அதிமுக எதிர்காலம் என்ன ஆகும்? – என்.கே.மூர்த்தி (apcnewstamil.com)

2001 ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக – பாமக கூட்டணி முறிந்தது. அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் பாமக வெற்றி.

அதன் பின்னர் சில வாரங்களில் அதிமுக – பாமக கூட்டணி முறிந்தது.

2004 ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் பாமக கூட்டணி அமைத்தது. 6 இடங்களில் வெற்றிப் பெற்றது. அப்பொழுது தேர்தலில் போட்டியிடாமல் ராஜ்யசபா வழியாக டாக்டர் அன்புமணி நாடாளுமன்றத்திற்கு சென்றார். கலைஞரின் ஆதரவில் அமைச்சராகவும் ஆனார்.

பாமகவின் எழுச்சியும் வீழ்ச்சியும் - என்.கே.மூர்த்தி

2006 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் பாமக கூட்டணியில் 34 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது.

2009ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை தழுவியது.

2009 நாடாளுமன்ற தேர்தலில் பாமகவின் சரிவு தொடங்கியது.

2011ல் திமுகவுடன் பாமக கூட்டணியில் 30 இடங்களில் போட்டியிட்டு 3 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் சரிவை சந்தித்தது.

2014ல் திமுக, அதிமுக இரு திராவிட கட்சிகளுடன் இனிமேல் கூட்டணி இல்லை என்கிற நிலைப்பாட்டை டாக்டர் ராமதாஸ் எடுத்தார். பாஜகவுடன் கூட்டணி வைத்து 8 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் பாமக தனித்து போட்டி. 234 தொகுதிகளிலும் பாமக வேட்பாளர்களை நிறுத்தியது. மாற்றம் முன்னேற்றம், அன்புமணி என்ற முழக்கத்தை முன்னெடுத்து மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்தது. ஒரு தொகுதியிலும் வெற்றிப் பெற முடியவில்லை. வெறும் 5% வாக்குகள் மட்டும் கிடைத்தது.

பாமகவின் எழுச்சியும் வீழ்ச்சியும் - என்.கே.மூர்த்தி

2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் பாமக கூட்டணி. அந்த கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

2021 சட்டமன்றத் தேர்தலில் இழு இழு பேச்சு வார்த்தைக்கு பின்னர் அதிமுகவுடன் பாமக கூட்டணி சேர்ந்து 23 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை. அதன் பின்னர் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக படு தோல்வியை தழுவியது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிலும் படுதோல்வி அடைந்தது.

வீதிக்கு வந்த ஆர்.எஸ்.எஸ் – பாஜக சண்டை.. முடிவிற்கு வருமா? தொடருமா? (apcnewstamil.com)

தற்போது விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது.

எப்படியோ தொடங்கப்பட்ட ஒரு கட்சி, மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு இயக்கம், கொஞ்சம் கொஞ்சமாக சரிவை சந்தித்து வருவதற்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டியது காலத்தின் தேவை.

MUST READ