Homeசெய்திகள்கட்டுரைஆர்.எஸ்.எஸ். - பாஜக அஜெண்டாவுக்காக தான் ஆதவ் வேலை செய்தார்... விசிக வன்னியரசு அதிரடி!

ஆர்.எஸ்.எஸ். – பாஜக அஜெண்டாவுக்காக தான் ஆதவ் வேலை செய்தார்… விசிக வன்னியரசு அதிரடி!

-

ஆதவ் அர்ஜுனாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தாமாக முன்வந்து பொருப்பு வழங்கியதாக கூறுவது முழுமையான பொய் என்றும், அவர் கட்சியில் எந்த பொறுப்பை கேட்டார் என்று அவரே விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வன்னியரசு வலியுறுத்தியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா, அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது பதவி விலகல் தொடர்பான அறிக்கையில் திமுக அழுத்தம் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தன் மீது நடவடிக்கை எடுத்ததாகவும், விசிகாவில் உள்ள திமுக ஆதரவாளர்கள் தன்னை விமர்சிப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டுகளை அக்கட்சியின் துணை  பொதுச்செயலாளர் வன்னியரசு திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக வன்னியரசு பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணலில் கூறியிருப்பதாவது:-

ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  கொள்கை மற்றும் செயல்திட்டங்களை ஏற்றுக்கொண்டு அவற்றை செயல்படுத்தப்போவதாக கூறி கட்சியில் இணைந்தார். ஆனால் அவர் ஒரு செயல்திட்டத்துடன் கட்சிக்குள் வந்து அதற்கான வேலைகளை செயல்படுத்த முயற்சி செய்திருக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொடருவோம் என திருமாவளவன் அறிவித்துள்ளார். ஆனால் இதற்கு நேர்மாறாக கூட்டணி தொடர்பாக ஆதவ் அர்ஜுனா பேசுவது, அவர் மீதான குற்றச்சாட்டை உறுதிபடுத்தி உள்ளது.

முழுக்க முழுக்க ஆதவ் டெல்லியுடைய ஆள் - போட்டுடைக்கும் ஜீவசகாப்தன்!

நேற்று தனியார் தொலைக்காட்சி பேட்டியளித்தபோது, இடைநீக்க விவகாரத்தில் திருமாவளவனின் முடிவுக்காக காத்திருப்பதாக கூறியிருந்தார். தற்போது கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சிக்காக அவர் என்ன செய்துள்ளார். எந்தவிதமான செயல் திட்டமாக இருந்தாலும் அதனை கட்சிக்கு கட்டுப்பட்டு கட்சியின் செயல்திட்டமாக அதனை கொண்டுசெல்ல வேண்டும். தமிழக அரசு மீதான கோபத்தில் பேசுவதாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். மதுரை வெளிச்சநத்தம் விவகாரத்தை கண்டித்து வரும் 23ஆம் தேதி மதுரையில் திருமாவளவன் போராட்டம் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மோருரில் கொடிக்கம்பம் விவகாரத்தில் பொதுமக்கள் மீது போலிசார் தடியடி நடத்தினர். இதனை கண்டித்து தலைவர் திருமாவளவன் போராட்டம் நடத்தினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் இருப்பவர்களை திமுகவுக்கு ஆதரவாக உள்ளதாக ஆதவ் அர்ஜுனா கொச்சைப்படுத்துகிறார். திருமாவளவன் 2026ல் திமுக கூட்டணி தொடரும் என்று கூறுகிறார். அதனை நாங்கள் கேட்கிறோம். அவர் வேறு கூட்டணிக்கு மாற வேண்டும் என்று சொன்னால் அதையும் கேட்போம். 2016ல் தனியாக நிற்க வேண்டும் என கூறியதால் மக்கள் நலக்கூட்டணியை ஆதரித்தோம். கட்சியின் நலனுக்காக தான் செயல்படுவதாக ஆதவ் கூறியுள்ளார். அவ்வாறு எனில் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். அதனை வெளியே பேசக்கூடாது. திமுக சொல்லித்தான் தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என கூறுவதன் வாயிலாக அவர் கட்சி தலைவர் திருமாவளவனை கொச்சைப்படுத்தி உள்ளார்.

விஜய் நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்றபோது ஆதவ் அர்ஜுனாவிடம் இதை பற்றி எல்லாம் பேசக்கூடாது என்று தான் சொல்லி அனுப்பியதாகவும், ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவர் அவ்வாறே பேசினார் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமைக்கு மரியாதை கொடுக்காதது, கட்சிக்கு கட்டுப்படாதது என்பன உள்ளிட்ட 6 காரணங்களை திருமாவளவளன் விளக்கமாக தெரிவித்துள்ளார். சிதறடிக்கப்பட்ட தலித் மக்களை ஒரு அரசியல் சக்தியாக  கொண்டுவந்தவர் திருமாவளவன். கால்நூற்றாண்டுகளுக்கு மேலாக அவர் உழைத்த உழைப்பு, பாஜக, ஆர்எஸ்எஸ்  கிட்டயே நெருங்க முடியாத இடத்தில் உள்ள தலைவரை இன்னொரு கட்சி சொல்லித்தான் தன்னை நீக்கியதாக கூறுவது அவரை சிறுமைப்படுத்தும் செயலாகும். 2009ல் ஈழத்தில் போர் நடைபெற்றபோது, அதிமுக கூட்டணி கட்சியினர் உடன் நாங்களை இலங்கை சென்றபோது, அதற்கு கலைஞர் எந்தவித அழுத்தமும் தரவில்லை. அமைச்சர் வேலுவை, திருமாவளவன் சந்தித்தது வழக்கமான ஒன்று. நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என திருமாவளவன் முடிவு செய்திருந்தால் அதனை மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் அதில் இருந்த எந்த நிலையையும் சொல்லாமல் திமுக சொன்னதால் திருமாவளவன் செய்ததாக குற்றம்சாட்டுவது தவறு.

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ஐடி ரெய்டு

இவ்வளவு விவகாரங்கள் நடைபெற்றபோதும் இடைநீக்கம் தொடர்பாக அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால் இடைநீக்கம் தொடர்பாக நீங்கள் சொன்ன விளக்கமும் நேர் எதிராக உள்ளது. மதுவிலக்கு மாநாடு நடத்துவது என்பது விசிகவின் செயல்திட்டம். அதனை உங்களுடைய செயல்திட்டம் என கூறி கட்சியை சிறுமைப்படுத்துகிறீர்கள். அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வரும்போது பதவியை விரும்பவில்லை என கூறுவது தவறு. அவர் துணைப் பொதுச்செயலாளர் பதவி கேட்டரா, அல்லது பொதுச்செயலாளர் பதவியை கேட்டரா என ஆதவ் அர்ஜுனாவே விளக்கம் அளிக்க வேண்டும்.

Thiruma MKstalin

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. தேசிய அளவில் பாஜக , ராம்விலாஸ் பாஸ்வான், ராம்தாஸ் அத்வாலே, மாயவதி போன்ற தலித் தலைவர்களை கையப்படுத்திக்கொண்டுவிட்டது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும், சனாதானத்திற்கும்  எதிராக சமரசமன்றி ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது விசிக தான். அதனால் பாஜக – ஆர்.எஸ்.எஸ் அஜெண்டா என்னவென்றால் திமுக கூட்டணியில் முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை பிரிக்க வேண்டும். அல்லது தனிமைப்படுத்த வேண்டும் என்பது தான். ஏன் என்றால் தவெக தலைவர் வேல்முருகன், சாம்சங் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் திமுகவை விமர்சித்தபோதும் அது பேசு பொருளாகவில்லை. 1991ல் தேர்தல் அரசியலுக்கு வந்த இயக்கம். இன்று இவ்வளவு வலிமையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்க முழுக்காரணம் திருமாவளவன் தான். ஆதவ் தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தபோதும் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த பணியும் மேற்கொள்ளவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதி பொறுப்பாளராக பணியாற்றியவன் என் முறையில் அவர் எந்த பணியும் மேற்கொள்ளவில்லை, இவ்வாறு வன்னியரசு தெரிவித்தார்.

 

 

MUST READ