Homeசெய்திகள்கட்டுரைஆர்எஸ்எஸ் - பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறு

ஆர்எஸ்எஸ் – பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறு

-

என். கே. மூர்த்தி

ஆர்எஸ்எஸ் – பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறு

பாஜகவின் வளர்ச்சிக்கு இனி ஆர்எஸ்எஸ் தேவையில்லை என்று அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். இதன் மூலம் இரு அமைப்புகளுக்கிடையே மோதல் தொடங்கிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

ஆர்எஸ்எஸ் - பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறு

ஆர்எஸ்எஸ் என்பது இந்து தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட தத்துவார்த்தமான, கொள்கை சார்ந்த இயக்கம். அதன் திட்டங்கள், செயல்பாடுகள் அனைத்தும் ரகசியமானவை. பொது தளத்தில் வெளிப்படையாக விவாதத்தில் பங்கேற்க மாட்டாது. அந்த அமைப்பிற்கு நேரடி அரசியலில் பங்கேற்பதற்கும், அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் வெகுஜன அமைப்பு தேவைப்பட்டது.

அதன் பின்னணியில் உருவானதுதான் ஜனசங்கம். 1951 ஆம் ஆண்டு ஷியாமா பிரசாத் முகர்ஜி என்பவர் ஜனசங்கத்தை தோற்றுவித்தார். அப்பொழுது ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்தவர்கள் ஜனசங்கத்திலும் உறுப்பினர்களாக இருந்தனர்.

ஆர்எஸ்எஸ் - பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறு

சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத்தேர்தலில் ஜனசங்கம் போட்டியிட்டு 3 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. 1957 ல் நடந்த இரண்டாவது பொதுத் தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இப்படி படிப்படியாக வளர்ச்சி பாதையில் பயணித்து வந்த ஜனசங்கம் 1980 ஏப்ரல் 6 ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியாக மாறியது. வாஜ்பாய் கட்சியின் நிறுவனராக கொண்டு தொடங்கப்பட்ட பாஜகவில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற தலைவர்கள் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள்.

ஆர்எஸ்எஸ் - பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறு

1984 அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி இந்திரா காந்தி சுட்டுக் கொள்ளப்பட்டார். அதே ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றியைப் பெற்று ராஜீவ்காந்தி பிரதமரானார். அந்த தேர்தலில் பாஜக என்ற கட்சி 2 தொகுதிகளில் வெற்றிப்பெற்று வரலாற்றில் பதிவு செய்து கொண்டது.

1989 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பாஜக முதன்முதலில் அயோத்தி என்றும், பாபர் மசூதி என்றும், ராமஜென்ம பூமி என்றும் அதற்கென்று ஒரு கொள்கையை வகுத்து கொண்டு பேசத் தொடங்கியது. அந்த தேர்தலில் 88 தொகுதிகளில் வெற்றிப் பெற்று ஜனதா தளம் கட்சியை சேர்ந்த வி.பி.சிங்கிற்கு ஆதரவளித்தது.

அப்போதைய பிரதமர் வி.பி.சிங், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க மண்டல் கமிஷனை அமலுக்கு கொண்டு வந்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிதம் இடஒதுக்கீடு கொண்டு வந்ததை பாஜக நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்காமல் மறைமுகமாக எதிர்த்தது.

ஆர்எஸ்எஸ் - பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறு

அதனால் 1990 ஆம் ஆண்டு அத்வானி தலைமையில் ரதயாத்திரையை தொடங்கியது. அந்த யாத்திரை ஓரளவிற்கு வெற்றியும் பெற்றது. அப்பொழுது வி.பி.சிங் ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றுக்கொண்டது.

1991ல் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். அந்தாண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்று நரசிம்மராவ் பிரதமரானார்.

1992ல் பாபர் மசூதி பிரச்சனையை பாஜக தீவிரப்படுத்தியது. விஸ்வ ஹிந்து பரிஷத் தலைமையில் அயோத்தியில் ஒன்றரை லட்சம் பேர் திரண்டனர். பேரணி என்று தொடங்கி வன்முறையாக மாறியது. பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதுவே வட மாநிலங்களில் பாஜக வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. அதன் பின்னர் நடந்த ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்த முறை பாஜக ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் கட்டியே தீருவோம் என்று வாக்குறுதி அளித்து வந்தனர்.

ஆர்எஸ்எஸ் - பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறு

1996ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 187 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வளர்ந்தது. அப்பொழுது வாஜ்பாய் தலைமையில் ஆட்சியில் அமர்ந்த பாஜக பெரும்பான்மையை நிருபிக்க முடியாமல் 13 நாட்களில் கவிழ்ந்தது. அதன் பின்னர் 1998ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று 13 மாதங்கள் ஆட்சியில் இருந்து 2004 வரை நீடித்தது. பத்தாண்டு காலம் இடைவேளைக்கு பிறகு 2014ல் ஆட்சி பிடித்து நரேந்திர மோடி பிரதமரானார். 2019ல் அதிகபட்சமாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதாவது 3 தொகுதிகளில் வெற்றியை தொடங்கி 303 தொகுதிகள் வரை கைப்பற்றி அசூர வளர்ச்சி அடைந்தது.

ஆர்எஸ்எஸ் - பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறு

இதுவரை ஆர்எஸ்எஸ் – பாஜக விற்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் குழப்பங்களும் இல்லாமல் இருந்துவந்தது. ஒவ்வொரு தேர்தலின் போதும் பாஜக வெற்றிப் பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸின் ஆலோசனை பெறுவது வழக்கம். நரேந்திர மோடி பிரதமராக வந்ததில் இருந்து இரு அமைப்புகளுக்கும் இடையே இடைவேளை அதிகரிக்க தொடங்கி விட்டது.

ஆர்எஸ்எஸ் அமைப்பில் தனிமனித வழிப்பாட்டிற்கு இடமே இல்லை. ஆனால் பாஜக கடந்த பத்தாண்டுகளில் தனிமனிதனை சார்ந்து இயங்கத் தொடங்கி விட்டது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்களவை தேர்தலில் மோடி என்கிற தனிமனிதரை நம்பி தான் களத்தில் போட்டியிடுகிறது. அந்த அளவிற்கு மோடி என்ற தனி நபரின் வழிப்பாடு, செல்வாக்கு அதிகரித்துள்ளது.

ஆர்எஸ்எஸ் - பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறு

இந்த தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தால், பெரும்பான்மை பெறுவதற்கு 40, 50 சீட் தேவைப்படும் போது நரேந்திரமோடியை மாற்றிவிட்டு புதிய நபரை கொண்டுவர ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. ஆனால் அதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கிறது. எங்கள் கட்சியை நாங்களே பார்த்துக் கொள்வோம், ஆர்எஸ்எஸின் ஆலோசனை எங்களுக்கு தேவையில்லை என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா சொல்வதற்கு காரணம் இதுதான். தேர்தல் முடிந்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முழு கதையும் வெளியே வருவதற்கு வாய்ப்புள்ளது.

MUST READ