Homeசெய்திகள்கட்டுரைசாட்டை Vs  சீமான்!  என்ன நடக்கிறது நாதக-வில்? உடைத்துப் பேசும் U2Brutus மைனர்!

சாட்டை Vs  சீமான்!  என்ன நடக்கிறது நாதக-வில்? உடைத்துப் பேசும் U2Brutus மைனர்!

-

- Advertisement -

நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் சாட்டை துரைமுருகன், பாஜகவில் இணை உள்ளதாக ஊடகவியலாளர் யூடியூப் புரூட்டஸ் மைனர் வீரமணி தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் சீமான், சாட்டை துரைமுருகன் இடையே நடைபெறும் மோதலின் பின்னணி குறித்து மைனர் வீரமணி அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- நாம் தமிழர் கட்சியில் இருந்து சாட்டை துரைமுருகன் நீக்கப்பட்டது என்பது உண்மைதான். சீமான் தரப்பில் இருந்துதான் அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து ஒரு நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றால், சீமானின் சமூக வலைதள பக்கத்திலோ அல்லது கட்சியின் தலைமை நிர்வாகிகள் சார்பில் அறிக்கை வெளியிடுவார்கள். ஆனால் சாட்டை துரைமுருகன் விவகாரத்தில் யார் மீது நடவடிக்கைக்கு உள்ளான நபரே, அது தொடர்பான அறிக்கையை வெளியிடுகிறார். இது எவ்வளவு கேளிக்கூத்தாக உள்ளது. சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றால் அவர் கட்சியின் தலைமையை தொடர்பு கொண்டு, தனது செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிப்பார். அந்த விளக்கம் ஏற்கபடாதபட்சத்தில் கட்சி தலைமை துரைமுருகன் மீதான நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிடுவார்கள். ஆனால் அங்கே சாட்டை துரைமுருகனே அறிக்கை வெளியிட்டுள்ளார். அப்படி என்றால் அவர் கட்சி தலைமையை மதிக்கவில்லை என்று அர்த்தமாகும். அப்போது சீமானுக்கும், சாட்டை துரைமுருகனுக்கும் இடையே ஏற்கனவே பனிப்போர் நடைபெற்று கொண்டிருப்பதாக தான் அர்த்தமாகும்.

அண்ணாமலை பாஜக மாநில தலைவராக இருந்தபோது, ஒரு நடைபயணம் மேற்கொண்டார். அந்த நடைபயணத்திற்கு, நாதகவை சேர்ந்த ராஜவேல் நாகராஜன் மக்கள் தொடர்பு பணிகளை மேற்கொண்டிருந்தார். அந்த பயணத்தால் பொருளாதாரத்தில் பெரிய அளவில் ராஜவேல் நாகராஜன் உயர்ந்திருந்தார். இதனை கண்ட சாட்டை துரைமுருகன், பாஜகவில் சேர அண்ணாமலையிடம் கோரிக்கை விடுத்தார். இந்த தகவல்களை ராஜவேல் நாகராஜன், தனக்கு போட்டியாக சாட்டை துரைமுருகன் வந்துவிடுவார் என்கிற அச்சத்தில் சீமானிடம் போட்டுக் கொடுத்துள்ளார். அதன் பிறகு சாட்டையை, சீமான் கண்டித்துள்ளார். சாட்டை துரைமுருகன், தமிழ்தேசியம் என்று சொல்வதால் அவர் அதனை முழுமையாக புரிந்துகொண்டவர் என்பது இல்லை. அவருக்கும் தமிழ்தேசியத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. சாட்டை பாஜக உடன் பேச தொடங்கியதுமே, அவர் அந்த கட்சியை விட்டு போய்விடுவார் என்று சீமானுக்கு தெரியும்.

தமிழர்களைத் திருடர்களாக சித்தரிப்பதா ? சீமான் கண்டனம்

சமீபத்தில் தாது மணல் கொள்ளையில் தொடர்புடைய வைகுண்டராஜனுக்கு எதிராக சீமான் உத்தரவின் பேரில் சாட்டை துரைமுருகன் வீடியோ போடுகிறார். தாது மணல் கொள்ளையில் ஒரு லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதால் வைகுண்டராஜன் சிபிஐ வளையத்திற்குள் சிக்கியுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் வீடியோ போடுகிறார். நாம் தமிழர் கட்சி இயற்கையை பாதுகாக்கும் கட்சி என்றால், இத்தனை வருடங்களாக தாது மணல் கொள்ளை குறித்து அவர் வாய் திறக்காதது ஏன்? ஏப்ரல் 5 2025ஆம் ஆண்டு அன்றுதான் முதன் முறையாக அது தொடர்பாக வீடியோ போடுகிறார். தற்போது ஏன் இதனை கையில் எடுத்துள்ளார்கள் என்றால்? தாது மணல் விவகாரம் குறித்து பேசாமல் இருக்கவும், போராடாமல் இருக்கவும் சீமான் மாதந்தோறும் பணம் வாங்குவார். தற்போது அந்த பணம் நிறுத்தப்பட்டு விட்டது. அதற்கு காரணம் நாம் தமிழர் கட்சியில் இருந்து பெரும்பாலானோர் விலகி விட்டதால் அந்த கட்சியில் முக்கிய நபர்கள் யாரும் இல்லை. அதனால்தான் இன்று பாஜக – ஆர்எஸ்எஸ் இடம் சீமான் கட்சியை அடகுவைத்துவிட்டார்.

 

வைகுண்டராஜன் பணம் தருவதை நிறுத்திவிட்டார். அதனால் தாது மணல் குறித்து முதன் முதலாக ஏப்ரல் 5ஆம் தேதி வீடியோ வெளியிடுகிறார்கள். அதன் பிறகு ஒரு வாரம் காத்திருக்கிறார்கள். ஆனால் வைகுண்டராஜன் தரப்பில் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை. இதனால் அடுத்த வீடியோவை சீமான் போட சொல்கிறார். வழக்கமாக துரைமுருகன் எந்த வீடியோ போட்டாலும் அதன் லிங்கையும், கட் வீடியோவையும் தனது பேஸ்புக், எக்ஸ் வலைதள பக்கங்களில் வெளியிடுவார். ஆனால் இந்த வீடியோவின் லிங்கையோ, கட் வீடியோவையோ எந்த தளத்திலும் பகிரவில்லை. காரணம் மிரட்டி பணம் பெற்ற பின்னர் வீடியோவை பிரைவேட் செய்து விடுவார்கள். தற்போதும் அப்படிதான் வைகுண்டராஜனிடம் இருந்து அழைப்பு வந்ததும், கட்சிக்கு சாட்டை யூடியுப் சேனலுக்கும் தொடர்பு இல்லை என்று அறிக்கை  வெளியிடுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த துரைமுருகன், சமூக வலைதள பக்கத்தில் இருந்த தகவல்களை மாற்றியுள்ளார்.

nainar nagendran

தற்போது நயினார் நாகேந்திரன் மூலமாக பாஜகவில் சேர்வதற்கு டீல் பேசி கொண்டிருக்கிறார்கள். நேரடியாக அமித்ஷா அல்லது மோடியின் முன்னிலையில் பாஜகவில் போய் சேர்வதாகும். சேரும் போது மாநில பொறுப்பில் சேர்வது என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் சீமான் தரப்பில் இருந்து தற்போது பாஜகவில் சேர வேண்டாம் என்று டீல் பேசப்பட்டுள்ளது. ஏனென்றால் சீமானின் அந்தரங்க ஆடியோ, வீடியோக்கள் சாட்டையிடம் உள்ளது. அவற்றை வாங்கிய பின்னர் அவரை அனுப்பலாம் என்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. சாட்டை துரைமுருகன் பாஜகவில் சேர்வது உறுதி. இன்னும் தேதி மட்டும்தான் உறுதியாகவில்லை. தமிழ் தேசியம் என்றால் தனித் தமிழ்நாடு ஆகும். அப்படி தனித் தமிழ்நாடு என்கிற வார்த்தையை இருவரும் பயன்படுத்தி உள்ளனரா? அப்படி பயன்படுத்தினால் பிரிவினைவாதம் பேசுவதாக கூறி சீமானை பிடித்து உள்ளே போட்டுவிடுவார்கள். குருமூர்த்தி, ஈரோடு இடைத்தேர்தலில் சீமான் சிறப்பாக செயல்பட்டதாக  சொல்கிறார். பெரியாருக்கு எதிராக சிறப்பாக பேசி அதிக வாக்குகளை பெற்றுள்ளதாக பாராட்டு தெரிவிக்கிறார். தமிழ்தேசியம் என்று பெயர் வைத்திருப்பதால் அவர் தமிழ்தேசியம் கிடையாது. அந்த பெயரில் முழுக்க முழுக்க பார்ப்பனியத்திற்கு, சனாதன வருணாசிரமத்திற்கு இவர்கள் தான் இவர்கள் வேலை பார்க்கிறார்கள். அதனால் கிளை அலுவலகத்தில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு துரை முருகன் செல்கிறார். அவ்வளவுதான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ