Homeசெய்திகள்கட்டுரைஉங்களிடம் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்- என்.கே.மூர்த்தி

உங்களிடம் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்- என்.கே.மூர்த்தி

-

உங்களிடம் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்- என்.கே.மூர்த்தி

இந்த வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று பல அறிஞர்கள் சொல்லி கொடுத்திருக்கிறார்கள், அதற்கு ஏராளமான நூல்கள் கிடைக்கிறது. ஆனால் நான் அதுகுறித்து எழுதவரவில்லை. இந்த சமுதாயத்தில் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதுகிறேன்.

சமுதாயம் மிகவும் ஆபத்தான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் வன்முறை, கலவரம், கொலை, தற்கொலை என்று மனித உறவுகள் பாழடைந்து வருகிறது. யாருக்கு, யாரிடமிருந்து, எப்பொழுது ஆபத்து வருமோ என்கிற பயத்தில் மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

உங்களிடம் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்- என்.கே.மூர்த்தி

இதற்கெல்லாம் யார் காரணம்? இந்த சமுதாயம் இப்படிப்பட்ட துயரமான நிலைக்கு செல்ல காரணமானவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?

இப்போது ஒவ்வொரு தனி மனிதனும் உடைந்து போய் இருக்கிறான். ஒருவருக்கும் சுதந்திரமான, ஆரோக்கியமான சிந்தனைவோட்டம் இல்லை. கணவன், மனைவிக்கு இடையே சுமூகமான உறவுகள் இல்லை. மாமியார், மருமகள் உறவுகள் ஆரோக்கியமாக இல்லை. அருகருகே உள்ள வீடுகளில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை. எல்லாரும் உள்ளுக்குள் உடைந்துபோய் விரக்தியின் உச்சத்தில் வாழ்ந்து வருகிறோம். அதேபோன்று  ஒருவரிடமும் உண்மை இல்லை. போலியான தோற்றத்தில், சிறந்த நடிப்பு நாயகனாக வாழ்ந்து வருகிறோம்.

உள்ளுக்குள் உங்களையே நீங்கள் கவனித்து பாருங்கள். வாழ்க்கையில் பெரும்பகுதி பொய்யை மட்டும் பேசி வரும் நாம் சமுதாயத்தில் நல்லவனாக காட்டிக்கொள்ள எவ்வளவு முயற்சி செய்கிறோம் என்பதை கூர்ந்து கவனித்து பாருங்கள். கோயிலுக்கு போகிறோம் நெற்றி நிறைய விபூதி, குங்குமத்தை வைத்துக் கொண்டு அபார விதமான நடிப்பை நடித்து பொய்யர் வேடத்தை மறைத்துக் கொள்கிறோம். கிறிஸ்தவம், இஸ்லாம் என்று அனைத்து மதத்தவர்களும் உள்ளுக்குள் கழுவ முடியாத கறை படிந்தவர்களாகத்தான் இருக்கிறோம்.

ஆண்களும், பெண்களும் காமத்தில் மூழ்கி இருக்கிறார்கள். தினமும் படுக்கையை மாற்றிக் கொள்ளாவிட்டால் அவர்களால் தூங்கவே முடியாது. ஆனால் அவர்கள் எப்படி நடிக்கிறார்கள் என்பதை சுலபமாக கண்டுப்பிடித்து விட முடியும்.

உங்களிடம் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்- என்.கே.மூர்த்தி

சமுதாயத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் நடிக்கிறோம், போலியான வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறோம்.  இந்த நெருக்கடியான, குழப்பமான, பிரச்சனைகள் நிறைந்த சமுதாயத்தில் வேறு தெரியாமல் நாமும் வாழ்ந்து வருகிறோம்.

இந்த நெருக்கடியில் இருந்து முதலில் நாம் எப்படி தப்பிப்பது? எனக்குள் நானே குழப்பம் உள்ளவனாகவும், பிரச்சனைக் குறியவனாகவும் இருக்கும் போது என்னிடம் இருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நானேதான் எனக்கு எதிரி. எனக்கு அடுத்தவரிடம் இருந்து வரும் தீங்கைவிட, ஆபத்தை விட நான் உருவாக்கும் ஆபத்து அதிகம்.

நான் உள்ளுக்குள் வன்முறையாளனாகவும், துரோகியாகவும், பொய்யனாகவும் முட்டாளாகவும் இருக்கிறேன். எனக்குள் நான் எதுவாக இருக்கிறேனோ அப்படியே தான் இந்த சமூகத்தையும் பார்க்கிறேன்.

பக்கத்து வீட்டுக்கார், எதிர் வீட்டுக்காரர்களை கண்டால் பொறாமை படக்கூடியவராகவும், அவன் கொஞ்சம் ஏமாந்திருந்தால் அவனுடைய சொத்தை, அவனுடைய உடமையை அபகரிக்க காத்திருக்கும் நான் தான் பயங்கரமானவன்.

நானே எனக்குள் ஆபத்தை விளைவிக்கும் மொத்த உருவமாக இருக்கிறேன்.

உங்களிடம் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்- என்.கே.மூர்த்தி

இதை அறிந்துக் கொள்ள தனிமையில் ஒதுங்கி, தரையில் அமர்ந்து தியானம் செய்வதன் மூலமோ, யோகா செய்வதன் மூலமோ உங்களை நீங்கள் அறிந்துக் கொள்ள முடியாது. உங்களை நீங்கள் புரிந்துக் கொள்வது என்பது உங்கள் சிந்தனையின் போக்கை அறிந்துக் கொள்வது. உங்கள் சிந்தனை, எண்ணம் எதை மையப்படுத்தி அல்லது எதை நோக்கி சிந்திக்கிறது என்பதை கூர்ந்து கவனித்து வந்தால் நீங்கள் யார் என்று உங்களுக்கு தெரிந்துவிடும்.

ஆபத்து என்பது மற்றவர்களால் வருவது மிகவும் குறைவு. அது விபத்து போன்றது. அது எப்பொழுதாவது ஒரு முறைதான் வரும். உங்களால் உங்களுக்கு நிகழும் ஆபத்துகள் தான் அதிகம். அது எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். வாயிற்படியில் காத்துக் கொண்டிருக்கிறது. மற்றவர்களிடம் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்வதைவிட உங்களிடம் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்வதுதான் மிகவும் கடினமானது.

உங்கள் வீடுகளில் தினமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் உறவுகளுக்குள், பொய்யாக நடிப்பது, சண்டை போட்டுக் கொள்வது, குழந்தைகள் முன்பு தவறாக பேசுவது, கோபத்தை அடக்க முடியாமல் தன்னைத்தானே அடித்துக் கொண்டு தண்டித்து கொள்வது இவை அனைத்தும் மனநோய் தான். இதற்கு தேவாலயங்களுக்கு போனாலும், மசூதிகளுக்கு போனாலும் மற்ற எந்த கடவுளை வணங்கினாலும் தீர்வு கிடைக்காது. இது ஆபத்தான மனநோய். இந்த நோய் உங்களை தாக்குவதோடு மட்டுமல்லாமல் உங்கள் குழந்தைகளை, குடும்பத்தை, உங்களை சுற்றியுள்ள உறவுகளை சேர்த்து தாக்குகிறது. ஒரே ஒரு முறை உங்களை நீங்கள் உற்று கவனித்து பாருங்கள்.  நீங்கள் எவ்வளவு ஆபத்தானவர் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

உங்களிடம் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்- என்.கே.மூர்த்தி

இன்று பெரும்பாலான கொலைகள், பிரச்சனைகள் காமத்தை மையப்படுத்தியே நடந்து வருகிறது. நீங்கள் காம சிந்தனை கொண்டவராக இருந்தால் உங்கள் மனம் அதை மையப்படுத்தியே இயங்கும். கண்ணெதிரே தெரிகின்ற மனிதரை கண்டால் அதே சிந்தனையில் பார்ப்பது, பழகுவது, அவர்களிடம் பேச்சு கொடுத்து எப்படியாவது வளைத்து போட வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கும். அதிலே வெறியும், வன்மமும் பிறக்கும். உங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கும் துரோகம் செய்ய மனம் துணிந்து விடும்.  இதுபோன்ற காம சிந்தனையில் சிக்கிக் கொண்டவரா என்பதை உங்களையே உற்றுக் கவனியுங்கள்.

அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சுவாமி விவேகானந்தர், தன் உரையை தொடங்கும் போது சகோதர, சகோதரிகளே (brothers and sisters) என்று ஆரம்பித்து இந்தியர்களின் கலாச்சாரம், பண்பாடுகளை குறித்து நீண்ட நேரம் பேசினார். அவருடைய பேச்சு வெள்ளையர்களை கவர்ந்தது, இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை தந்தது, பெண்கள் மத்தியில் மரியாதையை ஏற்படுத்தியது, அந்த உரை வரலாற்றில் இடம்பெற்றது. உரையை முடித்துவிட்டு விவேகானந்தர் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தார்.

உங்களிடம் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்- என்.கே.மூர்த்தி

அவரை ஒரு இளம் பெண் நெருங்கி வந்து உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது. உங்களை பார்த்தால் பெருமையாக இருக்கிறது. நீங்கள் தான் உண்மையான மனிதர்.எனக்கு உங்களைப் போன்ற ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கு நீங்கள் உதவி செய்வீர்களா என்று அந்த பெண் கேட்கிறார். அப்போது விவேகானந்தர், என்னைப் போன்ற குழந்தை எதற்கு தாயே, இன்று முதல் நானே உங்களுக்கு பிள்ளையாக இருந்து சேவை செய்ய தயாராக இருக்கிறேன். என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள் தாயே என்று அந்த பெண்ணின் காலில் உடனடியாக விழுந்தார்.

அதே பெண் அல்லது அதுபோன்ற ஒரு பெண் உங்களிடம் வந்து உங்களைப்போன்ற ஒரு குழந்தை வேண்டும், அதற்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? அதை உங்கள் மனப் பக்குவத்திற்கு விட்டுவிடுவோம்.

சுவாமி விவேகானந்தர் தன்னை முழுமையாக அறிந்தவர். தனக்குள், தனது எண்ணவோட்டத்தை, சிந்தனையை முழுமையாக அறிந்தவர். சமுதாயம் அழைக்கும் பாதையில் பயணம் செய்தவர் அல்ல, தன் சிந்தனையின் வாயிலாக முற்போக்கான சமுதாயத்தை படைக்க முயன்றவர். அதற்காக உழைத்தவர்.

இன்று வெளியாகும் ‘அமரன்’ ரிலீஸ் தேதி….. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

இந்த உலகமும் சமூகமும் என்னிடம் இருந்துதான் தொடங்குகிறது. நான் இல்லாதபோது இந்த சமூகமும் உலகமும் இல்லாமல் போய்விடுகிறது. இந்த சமூகமும் உலகமும் என் சிந்தனையின் வெளிப்பாடாகவும், என் அறிவின் வெளிப்பாடாகவும், என் ஆசையின் வெளிப்பாடாகவும், என் கனவுகளின் வெளிப்பாடாகவும், என் கோபத்தின் தோற்றமாகவும், என் வெறுப்பின் வெளிப்பாடாகவும், என் எண்ணத்தின் வெளிப்பாடாகவும் இந்த சமுதாயம், உலகம் இருக்கிறது.

நானே உலகமாகவும், சமுதாயமாகவும் இருக்கிறேன். நானாகவே உள்ள இந்த சமுதாயத்தில் மாற்றம் நிகழ வேண்டும் என்றால் அந்த மாற்றம் என்னிடம் இருந்து தொடங்க வேண்டும். அந்த மாற்றத்திற்கான பகுத்தறிவு புரட்சி என்னிடம் இருந்து தொடங்க வேண்டும்.

MUST READ