Homeசெய்திகள்கட்டுரைஇன்னும் 3 மாதங்களில் சீமான் கட்சி சிதறுண்டு போகும்... மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் எச்சரிக்கை

இன்னும் 3 மாதங்களில் சீமான் கட்சி சிதறுண்டு போகும்… மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் எச்சரிக்கை

-

தேமுதிக போன்ற கட்சிகளுக்கு என்ன நடந்ததோ, அது சீமான் கட்சிக்கு நடக்கும், 2027ல் அவரது கட்சி சிதறுண்டு போகும் என்றும் மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் பாண்டியன், தனியார் யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- சீமான் ஒரு அரசியல் கட்சியை தொடங்கி ஆட்சியை பிடித்து, மக்களின் மனதில் இடம்பிடிப்பிப்பதற்கான எந்த எதிர்காலதிட்டமும் இல்லாத நபர். அவர் ஆட்சியை பிடிப்போம் என்பது ஏமாற்று வேலை. இதனால்தான் நாம் தமிழர் கட்சியின் வலிமையான தலைவர்களான ராஜிவ்காந்தி, கலியாண சுந்தரம், வியனரசு போன்றோர் வெளியே சென்றார்கள். கட்சி என்பது ஆயிரம் பேர் கொண்ட ஒரு பெரிய அமைப்பு, தனிப்பட்ட சீமான் என்ற நபர் மட்டும் கட்சி அல்ல.

திமுக, அதிமுகவில் மாவட்டத்திற்கு ஓரு ஸ்டாலின், எடப்பாடி உள்ளனர். ஒரு படைத்தலைவன் இருந்தால் நிறைய தளபதிகளை உருவாக்க வேண்டும். சீமானிடம் 3 மாதங்களுக்கு மேல் யாராலும் இருக்க முடியவில்லை. காரணம் அவர் கட்சியை வைத்து வருமானம் பார்க்க வேண்டும் என எண்ணுகிறார். தேர்தலில் பொறுப்பாளர்களை நியமித்து பணியாற்ற அனுமதித்தால அவர்கள் வேலை செய்வார்கள், ஆனால சீமான் அப்படி யாரையும் பணியாற்ற அனுமதிக்கவில்லை.

அப்படி சீமான் முன்னிலைப் படுத்தியவர்தான் காளியம்மாள். அவர் மாயவரத்தில் பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டினார். இதுதான் அவர் செய்த பெரிய தவறு. பின்னர் அவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். சீமான் ஒரு நல்ல தலைவன் என்றால் காளிம்மாளுக்கு பதவி உயர்வு வழங்கி இருக்க வேண்டும். மாயவரம் தான் காளியம்மாளின் அடையாளம், மதுரை தான் வெற்றிக்குமரனின் அடையாளம், கிருஷ்ணகிரிதான் பிரபாகரனின் அடையாளம், அபிநயா தான் விக்கிரவாண்டியின் அடையாளம். திமுக, அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் மாவட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

2009ல் நாம் தமிழர் கட்சியை தொடங்கி 2011 பொதுத் தேர்தலில் ஜெயலலிதாவிடம் 20 கோடி வாங்கினார். தற்போது 300 கோடியில் வந்து நிற்கிறார். சீமானிடம் உள்ள 9 சதவீத வாக்குகளை பெற எடப்பாடி 300 கோடியும், 30 எம்.எல்.ஏ இடங்களையும் வழங்க தயாராக உள்ளார். இதனால் சீமானை எதிர்ப்பவர்களை திமுக அரவணைத்து கொள்கிறது. சீமான்  மீது அதிருப்தியில் உள்ளவர்கள் வெளியே வர திமுக பாதுகாப்பு வழங்குகிறது. சீமான் கட்சியை பலவீனப்படுத்த திமுக நினைக்கிறது. அது இயல்பாகவே நடக்கிறது.

மாமனிதன் விஜயகாந்தின் பிறந்த தினம் இன்று!

சீமானால் 15 வருடங்களில் ஒரு எம்எல்ஏவை கூட ஜெயிக்க வைக்க முடியவில்லை. ஒரு கவுன்சிலரை கூட டெபாசிட் வாங்க செய்ய முடியவில்லை. விஜயகாந்த் 15 சதவீத வாக்குகள், 29 சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர். அவரது மறைவுக்கு பின்னர் தேமுதிக காணாமல் போய்விட்டது. இதேபோல் 2027ல் சீமான் கட்சியும் சிதறுண்டு போகும். தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அமமுக போன்ற கட்சிகளுக்கு என்ன நடந்ததோ, அது சீமான் கட்சிக்கு நடக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ