Homeசெய்திகள்கட்டுரைசீமான் - பிரபாகரன் புகைப்பட விவகாரம்... நடந்தது என்ன?  இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேட்டி!

சீமான் – பிரபாகரன் புகைப்பட விவகாரம்… நடந்தது என்ன?  இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேட்டி!

-

- Advertisement -

சீமான் – பிரபாகரன் இணைந்த புகைப்படம் சமூக நல்லிணக்கம், சமூகத்தில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய செயலுக்கு வழிவகுப்பதால் அது போலியானது என்ற உண்மையை வெளிப்படுத்தியதாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

சீமான் – பிரபாகரன் இணைந்த புகைப்படம் போலியானது என அறிவித்துள்ள  இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள போடடியில் கூறியிருப்பதாவது:- சீமான் – பிரபாகரன் இணைந்துள்ள புகைப்படம் போலியானது என நான் தெரிவித்துள்ள நிலையில், கருத்தியல் ரீதியில் மோத முடியாமல் இவ்வளவு வருஷம் கழித்து இந்த புகைப்படத்தை நான்தான் எடிட் செய்தேன் கூறுவது ஏன் என கேள்வி கேட்கின்றனர். அந்த புகைப்படத்தை எடிட் செய்தபோது அது தமிழக அரசியலை இந்த அளவிற்கு மாற்றக்கூடிய புகைப்படமாக மாறும் என்று எனக்கு ஒரு சதவீதம் கூட தெரியாது. அந்த மென்பொருள் வந்த நேரத்தில் இறந்துபோனவர்களுடன் சேர்ந்து இருப்பது போல புகைப்படம் எடுப்பது போலவும், வெளிநாட்டிற்கு சென்றது போல பின்னணியை மாற்றுவது போன்ற வேடிக்கையான புகைப்படமாக தான் வேலை செய்தேன். உண்மையில் ஒருவர் இருக்கிறார் என்றால், நான் எங்க வீட்டின் சுவருக்கு பின்னால் நிற்கிறேன், என்னை அமெரிக்காவில் இருப்பதை போல எடிட் பண்ணி கொடுங்கள் என்கிறார். காலப்போக்கில் அவர் அமெரிக்கா சென்றுவந்தேன் என்று சொன்னால் சிரித்துக்கொள்வோம். சரி சொல்லிவிட்டு போகட்டும், வேறு ஒரு தேவைக்கு பயன்படட்டும் என்று விட்டுவிட்டேன். ஆனால் இன்று அந்த புகைப்படம் சமூக நல்லிணக்கம், சமூகத்தில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய செயலுக்கு வழிகோளுவதால்  இதற்கு மேல் ஏன் அமைதியாக இருக்க வேண்டும் என உண்மையை வெளிப்படுத்தினேன்.

சீமான் இலங்கை போய்விட்டு வந்ததாக சொல்லும் காலகட்டத்தில் இந்த கதைகளை சொல்லவில்லை. அதன் பின்னர் 7,8 வருடங்கள் கழித்து பிரபாகரன் உயிரிழந்துவிட்டார் என்பதை உறுதிபடுத்திய பின்னரே ஆமைக்கறி போன்ற கதைகளை சொன்னார். இப்போது, தமிழக சமுகநீதிக்கும், நல்லிணக்கத்திற்கும் சீமானால் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. அவரது வளர்ச்சியில் தொடக்கத்தில் நாமும் ஒரு பங்காக இருந்துள்ளோம். இப்போதும் சொல்லாவிட்டால் சமுகத்திற்கு செய்யும் மிகப்பெரிய அநீதி என்று தோன்றியது. அதனால் இந்த உண்மையை சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

சீமான் புகைப்படம் சரியாக எப்போது எடிட் செய்யப்பட்டது என்பது நினைவு இல்லை. 15ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால் குறிப்பட்ட நாள், மாதம் நினைவில்லை. ஆனால் 2007 இறுதி அல்லது 2008ஆம் ஆண்டு தொடக்கத்தில் எடிட் செய்யப்பட்டது. 2007ல் நான் மக்கள் தொலைக்காட்சியில் வெங்காயம் தொடர் எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது அதற்காக நான் எடுத்திருந்த அலுவலகத்தில் தான் சீமான் எடிட் செய்தார். அதனால் தோராயமாக இதனை சொல்கிறேன். அப்போது, நான் பிரபாகரனை சந்தித்துவிட்டு வந்தேன்.  பிரபாகரன் தமிழக சூழல் பற்றியும், திரைப்படத்துறை பற்றியும் விசாரித்தார் என்றுதான் சீமான் சொன்னார். சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை அவர் சொல்லவில்லை.

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் ஈரோட்டில் பிரச்சாரம் செய்வதற்கு எதிர்ப்பு

சீமான், தந்தை பெரியாரை விமர்சித்தார் என்பதால் நான் எதிர்த்து நிற்கிறேன் என்று சொல்லவில்லை. இருப்பதை பேசுங்கள். மறுஆய்வு செய்யுங்கள். அதனை பெரியாரே சொல்கிறார். பெரியார் சொன்னதை சொன்னால் பிச்சினையில்லை. ஒட்டு மொத்தமாக பொது சமூகத்தில் பெண்களை பற்றி மிகவும் கேவலமானவர் பெரியார் என்பதை போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும் விதமாக, உண்மைக்கு புறம்பான அப்பட்டமான பொய்யை சொல்லிவிட்டு அதற்கு ஆதாரம் கேட்டால் அதைவிட மலுப்பலான பொய்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். பிபிசி ஊடகம் சீமான் வெளியிட்டது பொய்யானது என விடுதலை நாளிதழை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. பெரியார் பேசியது எந்த இடம் என்ன சொல்ல வேண்டும். பெரியாரின் அனைத்து பேச்சுக்களும், விடுதலையில், குடியரசில் பதிவு செய்யப்பட்டது.

ஆதாரம் கேட்டால் நாட்டு உடமை ஆக்குங்கள் என்கிறார். மிகவும் எளிமையான கேள்வி என்ன என்றால் எங்காவது படித்துவிட்டு வந்துதானே அவர் இதனை ஒப்பித்தார். அதனை திருப்பி எடுத்துக்காட்டுவதற்கு ஏன் கிடைக்கவில்லை. இதனை கேட்டால் அடுத்த அடுத்த கட்டத்திற்கு டைவர்ட் செய்து கொண்டிருக்கிறார். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மதவாதத்திற்கு இங்கே பெரிய அளவில் முயற்சி நடைபெறுகிறது. அதற்கு இடம் கொடுக்கும் விதமாக இதுநாள் வரை பெரியாரை தூக்கிப்பிடித்த சீமானே, அவரை தூக்கிவீசிவிட்டார் பாருங்கள், பெரியார் ஒன்றும் இல்லை என்று சொல்ல முயற்சிக்கிறார்கள். இது சமூகநீதியையே பாதிக்கும் செயல் என்பதால்தான் இதனை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

சீமான் ஒரு தமிழ் தேசிய சிந்தனையாளர், மதவாதம், சாதியவாதத்திற்கு எதிராக ஏதாவது ஒரு சித்தாந்தம், ஒரு தலைவர் வருவார் என அமைதியாக இருந்தோம். ஒரு கட்டத்தில் சீமானால் ஈழத்திற்கும் பலன் கிடைக்கில்லை. தமிழ்நாட்டிற்கும் முற்றிலும் எதிராக இருந்ததால் இதற்கு மேல் பொருமை காக்கக்கூடாது என்று சொல்லி விட்டோம். சீமான் எதாவது நல்லது செய்வார். தமிழக அரசியலில் இவரும் சமுகநீதி சார்ந்து பேசுவார் என்று கருதினோம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

MUST READ