Homeசெய்திகள்கட்டுரைஅண்ணாவை திடீரென புகழ்ந்த சீமான்... இது சோவின் மொழி... பத்திரிகையாளர்   ஜீவசகாப்தன் விளாசல்!

அண்ணாவை திடீரென புகழ்ந்த சீமான்… இது சோவின் மொழி… பத்திரிகையாளர்   ஜீவசகாப்தன் விளாசல்!

-

- Advertisement -

பேரறிஞர் அண்ணாவை பிச்சைக்காரன் என்று விமர்சித்த சீமான், இன்று ஈரோட்டில் முதலியார் சமுதாயத்தின் வாக்குகளை பெறுவதற்காக அவரை பெருமிதமாக சொல்வதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

பார்ப்பனர்கள் குறித்த சீமானின் கருத்துக்கு பதில் அளித்து பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் யூடியுப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- பார்ப்பான் என்றால் எல்லோரையும் சமமாக பார்ப்பான் என்று சீமான் வந்து நிற்கிறார். முன்பு  கொளத்தூர் மணி சொன்னார், 15 ஆண்டுகளுக்கு முன்பு குருமூர்த்தி சொல்லிதான் சீமான் நாம் தமிழர் கட்சியை தொடங்கினார் என்று. அது இதுவரை செய்திகளாக இருந்தது. தற்போது ஆணித்தனமான உண்மையாகி உள்ளது. சீமான் பேசும் தமிழ் என்பதில் நாமெல்லாம் கொஞ்சம் மயங்கினோம். தமிழர் அரசியல் என்பது, திராவிட அரசியல் தானே. பாஜக அப்படி பேசாது. அதனால் வைகோவை போன்றே திராவிட இயக்க அரசியலை சீமான் பேசுவதாக நினைத்தேன். ஆனால் அதை வைத்து சீமான் ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறார். இதனை சீமான் தொடக்க காலத்தில் பேசவில்லை. அப்போது, பார்ப்பனர்களையும், பிராமணர்களையும் விமர்சித்தார். எனது பேட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழர்கள் கிடையாது, துப்புறவு பணியாளர்கள் தமிழர்கள் கிடையாது. ஆனால் 10 சதவீத இ.டபிள்யு.எஸ் சமூகத்தினர் நம்ம ஆட்கள். அவர்கள் இடஒதுக்கீட்டிற்கு நாம் நிற்க வேண்டும் என்று சொன்னார். அப்போதே அவர் யார் என்று அம்பலபட்டு விட்டார். நாம் சமூக நீதி அடிப்படையில் மனிதர்களை பார்த்தோம். ஆனால் அவர் அப்படி எண்ணவில்லை.

சீமான் தமிழ்நாட்டில் பெரும்பான்மையினராக உள்ள நாடார், தேவர், கவுண்டர்கள், வன்னியர்கள், நாயக்கர் போன்ற பெரும்பான்மையினர், பிராமணர்களை அடிப்படிதாக சீமான் சொல்கிறார். இது எவ்வளவு பெரிய அப்பட்டமான பொய். இதனை பார்ப்பனர்கள் நேரடியாக பேசினால் சிரித்துவிடுவார்கள் என்தால், சீமானை வைத்து பேசு வைக்கின்றனர். சாதிய படிநிலையில் அனைத்து பலன்களையும் பெறுபவர்கள் பிராமணர்கள். சாதி  2 அலகுகளில் செயல்படும். ஒன்று தூய்மை வாதம். மற்றொன்று பெரும்பான்மையின வாதம். இந்த 2 பாசிச வாதங்களையும் சீமான் கையில் எடுக்கிறார். பார்ப்பனர், பனியாக்கள் எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மையினர், ஆனால் 97 சதவீத இந்தியர்களின் பொருளாதாரத்தை அவர்கள் தீர்மானிக்கின்றனர். ஆனால் சீமான் எவ்வளவு தட்டையாக எடுத்து வைக்கிறார் பாருங்கள்.  சிறுபான்மையினர் என்றால் என்ன என்ன ஐ.நா. வரையறுத்துள்ளது. மத அடிப்படையில் இந்தியாவில் வரையறுத்தால் சிறுபான்மையினர் என சொல்லக் கூடாது என்கிறார். இது பாஜகவின் ஸ்லோகம். ஏன் என்றால் அவர்களுக்கு சிறபான்மையினர் என்ற  பெயரில் சில சலுகைகள் கிடைக்கிறது. அதை தடுக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. அதுதான் சீமான் விருப்பமும். இவர்களை சிறுபான்மையினர் என சொல்லக்கூடாது என சொல்லிவிட்டு, பார்ப்பனர்களை சிறுபான்மையினர் என சொல்வதன் வாயிலாக வெளிப்படையாக சோ, துக்ளக், சுப்பிரமணியினரின் மொழிக்கு வந்துவிட்டார்.

அடுத்து அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது பிராமணர்களின் உரிமைகளுக்கு எதிரானது என்பார். இப்படி எல்லா பாசிச வடிங்களையும், பார்ப்பனிய வடிவங்களையும், சமுதாய ஏற்றத் தாழ்வுகளையும் நியாயப்படுத்தி, கேட்டால் தமிழ் தேசியம் என்ற பெயரில் முகமூடி போட்டுக்கொண்டு ஏமாற்றி வருகிறார். வெளிப்படையாக சாதி அரசியல் செய்து வருகிறார். பார்ப்பனர்களின் சாதி தூய்மை வாதத்தை பெருமைப்படுத்துகிறார். மற்றொரு பக்கம் பெரும்பான்மை வாதம் பேசுகிறார். ஈரோடு இடைத்தேர்தல் என்பதால் அண்ணாவை சீமான் கையில் எடுக்கிறார். ஏனென்றால் செங்குந்த முதலியார்கள் அதிகம் உள்ள பகுதி ஈரோடு. சாதி ஓட்டு என்பதற்காக அண்ணாவை பாராட்டி பேசுகிறார். இதே ராமநாதபுரத்தில் இடைத்தேர்தல் வந்தால் சீமான் அண்ணாவை பற்றி பேச மாட்டார். இவர் அண்ணாவையும், கலைஞரையும் பிச்சைக்காரர் என்று சொன்னார். அதனை பி. ஜெயினுலாபுதீன் வெளிப்படுத்தியபோது நான் அப்படி சொல்லவில்லை என்று மறுத்தார். அண்ணாதுரை என்று தினமலரின் மொழியில் பேசிவிட்டு, இன்று ஈரோட்டில் பெருமிதம் பேசுகிறார். செங்குந்த முதலியாரின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக திடீரென அண்ணா தமிழர் தலைவர் ஆகிவிட்டார்.

அறிஞர் அண்ணா

சீமான் சொல்வதை போல அண்ணா, பெரியாரை எதிர்த்து களம் கண்டவர் கிடையாது. அண்ணா பெரியாரை எதிர்த்து கட்சி தொடங்கவில்லை. பெரியாரிடம் இருந்து பிரிந்துசென்றார். பெரியாரை எதிர்த்தவர் ராஜாஜி, சத்தியமூர்த்தி அய்யர் போன்றோர்தான். மா.பொ.சி.தான் பெரியாரின் எதிரி. அவர்தான் சீமானின் தலைவர். பெரியார் இந்தியை எதிர்த்தால், மா.பொ.சி இந்தியை ஆதரித்தார். இப்படி முழுக்க இந்திய கைக்கூலிகளாக இந்துத்துவ அடியாளாக இருந்த தலைவர்களை தன்னுடைய தலைராக சொல்லும் சீமான், முழுக்க முழுக்க வடஇந்தியர்களை, சமஸ்கிருதத்தை எதிர்த்து, சனாதனத்தை எதிர்த்து போரிட்ட தலைவர் தந்தை பெரியார் மட்டும்தான். அவர் வழி வந்தவர் அண்ணா. சீமான் சம்பந்தம் இல்லாமல் இந்திய தேசிய தலைவர்களை எல்லாம் தலைவர் என சொல்லிவிட்டு, பெரியாரையும், அண்ணாவையும் சண்டை மூட்டிவிட்டார். முதலில் பெரியாருக்கும், முத்துராமலிங்க தேவருக்கும் சண்டை மூட்டிவிட்டார். தேவரும், காமராஜரும்தான் எதிர் எதிராக இருந்தனர். திருப்பூர் குமரனுக்கும், பெரியாருக்கும் பிரச்சினை ஏற்படுத்தினார். பிறகு பெரியாருக்கும், வஉசிக்கும் சண்டை மூட்டிவிட்டார். சைதாப்பேட்டையில் பெரியார் சிலையை அவமதித்தவர் அவரால் பயன்பெற்ற சமுதாயத்தை சேர்ந்தவராக தான் இருப்பார். அவரால் பயன்பெற்றவரை வைத்தே பெரியாரை அடிக்க வைக்கிறார்கள். இதுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் வேலை. சீமானே சனாதனத்தால் பாதிக்கப்பட்ட நபரே ஆவார். அவர் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தினார் என்றால், அவர்தான் எனக்கு பீஸ் கட்டினாரா? என்கிறார்.

அம்பேத்கரை யாராலும் வெறுக்க முடியாது.... பா. ரஞ்சித் பேட்டி!

தமிழ்நாட்டில் மட்டும்தான் வளர்ச்சி என்றால் அனைத்து சமுதாயத்தினரும் வளர்ச்சி பெற்றுள்ளனர். பெண்களும் வளர்ச்சி பெற்றுள்ளனர். இங்கு அனைத்து தரப்பும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் நாட்டின் மற்ற இடங்களில் மேல் வகுப்பினர், குறிப்பபிட்ட சில வகுப்பினர் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளனர். பெரியார் படிக்க வைத்தாரா? என சீமான் கேள்வி எழுப்புகிறார். நான் சொல்கிறேன் சீமான் பேண்ட், சட்டை போட்டதில் இருந்து, படித்து இன்று பகுத்தறிவோடு பேசுவதற்கு காரணம் பெரியார்தான். பெரியார், தெலுங்கர்களுக்காக, கன்னடர்களுக்கு பாடுபட்டார் என்கிறார். நேரு தட்சிணபிரதேசம் என்ற திட்டத்தை கொண்டுவந்தார். அப்படி என்றால் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு அடங்கிய  திராவிட நாடுதான். ஆனால் பெரியார் அதனை வேண்டாம் என்றார். இந்த தெலுங்கர்கள், கன்னடர்களையும், தமிழர்களோடு இணைக்க வேண்டாம். இது வேண்டாம் என காமராஜரிடம் சொன்னார் பெரியார்.

உத்தரபிர தேச மாநிலத்தில் அமித்ஷா, அகிலேஷை கவிழ்க்க என்ன சதி செய்தார் என்றால் தனக்கு அகிலேஷின் யாதவ் சமுதாயத்தினர் வாக்களிக்க மாட்டார்கள் என்பதால், யாதவ் அல்லாத மற்ற சாதியினரை ஓரணியில் திரட்டினார். இதேபோல், மாயவதியின் சாதி, முலிம்களின் ஓட்டுகளை தவிர்த்து, அதே பிரிவில் உள்ள மற்ற அனைவரது வாக்குகளையும் ஒருகிணைத்தார். அதேபோன்று, சீமான், நாயக்கர், அருந்ததியர் தெருக்கள் பக்கம் வாக்கு கேட்க போக மாட்டார். மற்ற சாதிகளிடம் சென்று அவர்களை எதிரிகளை போன்று கட்டமைத்து வாக்கு சேகரிப்பார். தமிழ்நாட்டை சாதி வாரியாக பிரிக்க வேண்டும் என்பதுதான் சீமானின் அடுத்த திட்டம். கொங்குநாடு, வடதமிழ்நாடு என மூன்றாக பிரிப்பதுதான் அவர்களுடைய நோக்கம். ஏனென்றால் இதுதான் பாஜகவின் திட்டம். அவர்களால் வென்று எடுக்க முடியாவிட்டால் அழித்துவிடுவார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ