Homeசெய்திகள்கட்டுரைபிரபாகரன் போட்டோவை தன்னுடைய தனிப்பட்ட அரசியலுக்கு பயன்படுத்திய சீமான்... பத்திரிகையாளர் அய்யநாதன் விளாசல்!

பிரபாகரன் போட்டோவை தன்னுடைய தனிப்பட்ட அரசியலுக்கு பயன்படுத்திய சீமான்… பத்திரிகையாளர் அய்யநாதன் விளாசல்!

-

- Advertisement -

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தனது இயக்கத்தில் செயல்படுத்தியவர் என்றும் பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார். பிராபாகரனுடயை புகைப்படத்தை தனது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக சீமான் பயன்படுத்திக்கொண்டார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

சீமானுக்கு ஆதரவாக தமிழீழ அரசியல் துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையின் நம்பகத் தன்மை தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- இலங்கையில் தமிழீழ அரசியல் பிரிவு தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற ஒரு அமைப்பு இருந்தது. நடேசன் என்பவர் பொறுப்பில் இருந்தார். அவர் ராணுவத்திடம் சரணடைந்தபோது இறந்துவிட்டார். அவருக்கு பிறகு பலரும் பொறுப்பில் உள்ளதாக சொல்கின்றனர். இப்போது இந்த அறிக்கையின் நோக்கம் என்பது விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனே, சீமானை இலங்கைக்கு வரவழைத்ததாகவும், அவரே விருந்து வழங்கியதாகவும் நிரூபிப்பதுதான். நமது கேள்வி ஒன்றுதான். இதுதொடர்பாக பேசிய எல்லாளன் திரைப்பட கேமராமேன் என்ன சொல்லியுள்ளார் என்றால், பிரபாகரனை சந்தித்தால் புகைப்படம், வீடியோ எடுக்கப்படும் என்பதுதான். இவர்கள் ஒரு படத்தை வெளியிட்டனர். அது சர்ச்சையானது. எல்லோரும் என்ன சொல்கிறார்கள் என்றால் சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை. ஆனால் அவர் சொல்லும் ஆமைக்கறி விவகாரத்தை தான் எல்லோரும் எதிர்க்கின்றனர். ஆமைக்கறி விருந்து உண்மை என்றால் தமிழீழ அரசியல் துறை வெளியிடட்டும்.

உண்மை என்ன என்றால் சீமான், பிரபாகரனின் பெயரை வைத்துக்கொண்டு அவர் சொல்லாத, செய்யாத, ஏற்காத ஒரு விஷயத்தை அரசியலுக்காக சொல்கிறார். அதில் ஒன்று பெரியார் குறித்தது. நான் பிரபாகரனை சந்தித்த பின்னர்தான் திராவிட அரசியல் கட்சிகளின் சுய ருபம் தெரிந்தது என சொல்கிறார். அதன் பிறகு மாறிவிட்டேன் என்கிறார். இந்த சம்பவம் 2008 காலகட்டத்தில் நடைபெற்றது. அதன் பிறகு மாறிவிட்டேன் என சொல்பவர் 2009ல் அதிமுகவுக்கு ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். 2014 மக்களவை தேர்தலில் மீண்டும் அதிமுகவை ஆதரித்தது ஏன்?  பிரபாகரனை எவ்வளவோ பேர் சந்தித்து உள்ளனர். ஆனால் சீமான் அளவிற்கு இதை  தனது தனித்த அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தி கொண்டது இல்லை. பிரபாகரனுக்கு எதோ பெரியாரின் கொள்கையில் உடன்பாடு இல்லை என்கிறார். அதை மறுத்துதான் பழ. நெடுமாறன் அறிக்கை வெளியிட்டிருந்தார். ராஜிவ்காந்தி படுகொலையின்போது தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்க வழக்கை நடத்தியவர் பழ.நெடுமாறன். அதில் குற்றம்சாட்டப்பட்ட பலர் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள். தந்தை பெரியாரின் கொள்கைகளான பெண் விடுதலை, சாதி மறுப்பு, சமத்துவம் என எல்லாவற்றையும் பிரபாகரன் தனது இயக்கத்தில் சாதித்தவர் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். 1983ல் இருந்து இலங்கை விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் நாங்கள். எங்களுக்கு இதுபோன்ற புகைப்படம் போட வேண்டிய அவசியம் இல்லை.

தந்தை பெரியார்

தமிழ்நாட்டு மக்களிடையே ஈழ விடுதலைக்கான செல்வாக்கு அளப்பறியது. அரசியல் கட்சிகள் ஈழம் என்பது ஒரு பிரச்சினையே இல்லை என்றனர். ஆனால் 2011 தேர்தலில் ஈழ போராட்டம் மையப்படுத்தப்பட்டது. இதனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக 3வது இடத்திற்கு சென்றது. இங்கு ஜனநாயக அரசியல் இருந்தது. அங்கு விடுதலைக்கான அரசியல் இருந்தது. இதை பேச வேண்டும் என்றால் பழ நெடுமாறன், கொளத்துர் மணி, கோவை ராமகிருஷ்ணன், விடுதலை ராஜேந்திரன் போன்றவர்கள் சொல்லலாம். ஏனென்றால் இவர்கள் எல்லாரும் பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்தவர்கள். பாரதிராஜா, மகேந்திரன் போன்றவர்களும் சீமானுடன் சென்றனர். மரியாதை நிமித்தமாக, பண்பாட்டு நிமித்தமாக அவர்களை பிரபாகரன் சந்தித்தார். ஆனால் இவர் சொன்ன கதைகளை, அவர்கள் ஒருத்தரும் சொல்லவில்லை.

இப்படி ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டு விருந்து வைக்கும் நிலை அங்கு இல்லை. அவரை கொல்வதற்கான முயற்சிகள் நடைபெற்று கொண்டே இருந்தன. சாட்டிலைட்டை வைத்து அவரை கண்காணித்து கொண்டே இருப்பார்கள். அதனால் பிரபாகரன் இடம் பெயர்ந்து கொண்டே இருப்பார். அதனால் சீமானுடன் அமர்ந்துகொண்டு அவர் பேசியிருக்க மாட்டார். அமைதி பேச்சவார்த்தை காலத்தின்போது நார்வே தூதர் எரிக்சால்கைம், விடுதலை புலிகள் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் போன்றோர் அமர்ந்து விருந்து சாப்பிடும் புகைப்படம் இருந்தால் காட்டுங்கள். பத்திரிகையாளர் சந்திப்புக்கு கூட எவ்வளவு பாதுகாப்பாக வந்தார் என்பது தெரியும். நான் சீமானுடன் 4 வருடங்கள் இருந்தேன். அப்போது இந்த கதைகள் எல்லாம் என்னிடம் சொன்னதில்லை. அவர் என்னிடம் சொன்னதெல்லாம் நாம் பிரபாகரனை சரியாக கொண்டுசெல்வோம் என்றுதான் சொன்னார். பிரபாகரனை பரவலாக ஒரு கட்சியின் தலைவராக கொண்டு சென்றது சீமான்தான். ஆனால் நீங்கள் சொல்லும் கதைகள் எல்லாம் ஏற்க முடியாத அளவிற்கு உள்ளது.

போர் முடிந்த  சில நாட்களுக்கு பின்னர் பிரபாகரன் இறந்துவிட்டார் என எனக்கு ஒரு அறிக்கை வருகிறது. இதே மாதிரி எனக்கு அறிக்கை வருகிறது இறந்தது தலைவர் இல்லை என்று. அப்போது நான் வெப்துனியா டாட் காமின் எடிட்டர். இந்த அறிக்கை எங்கிருந்து வந்தது என்பதையும், மெயில் ட்ரெயில் என்பதையும் அனுப்பி புலிகள் காட்டி கொடுத்தனர். நான் அறிக்கையை முழுமையாக வெளியிட்டு விட்டு, அறிக்கையின் இறுதியில் பிரபாகரன் எந்த இடத்தில் எப்படி கொள்ளப்பட்டார் என்பதற்கான தகவல் எதுவும் இல்லை ஆசிரியர் என்று தெரிவித்தேன். சீமான் இதை எனக்குதான் முதலில் சொல்லி இருக்க வேண்டும். சீமான், பிரபாகரனை ஒரு அரசியல் பிராண்ட் ஆக்குகிறார்.

சீமானை புலிகள் நம்புவதற்கு எதுவும் இல்லை. இவர் என்ன கப்பல் வாங்கி தரப்பேகிறாரா? விடுதலைப்புலிகள் தங்களது பிரச்சினைகளை பேச வேண்டும் என எதிர்பார்த்தனர். கொளத்துர் மணி, வைகோ, காசி ஆனந்தன், புலமைப்பித்தன் போன்றோர் இந்த பிரச்சினை குறித்து பேசினர். சீமான் ஒன்றும் இயக்கத்துடனும், போராட்டத்துடனும் சம்பத்தப்பட்டவர் இல்லை. இவரும் ஒரு ஆதரவாளர். ஒரு கட்சியாக இருந்து தீர்மானம் போட்டு வெளிப்படையாக பேசுகின்றனர். ஆனால் மற்றபடி பிரபாகரன் பேரில் நீங்கள் வெளியிடும் கதைகள் எல்லாம் பொய்தான். விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு நீங்கள் பொருளதவி எதாவது வழங்கினாரா? தங்களுக்காக பேசக்கூடியர் நேர்த்தியாக உள்ளதா? என்று சீமானை விடுதலைப்புலிகள் கண்காணித்தனர்.

திராவிட மாடல் குறித்து கேலி செய்பவர்களுக்கு இந்த கைத்தடி போதும்- முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

விடுதலைப்புலிகள் அமைப்பிடம் இருந்த ஆயுதங்களை எல்லாம் பறித்துவிட்டனர். அப்போது பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தார். எம்ஜிஆர் திரும்ப வந்த உடன் ஆயுதங்கள் திரும்ப வழங்க உத்தரவிட்டார்.அப்போது, தனது போராட்டத்தை முடித்துவைக்க பிரபாகரன் அழைத்தவர் ஆசிரியர் கி.வீரமணி. அப்போது சீமான் யார்?. விசிக, திராவிடர் கழக மேடைகளில் பேசிக்கொண்டிருந்தவர்தான் சீமான். பேச்சாளர் வேண்டும் என்பதற்காக சீமான் அனுப்பப்பட்டார் அவ்வளவுதான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ