Homeசெய்திகள்கட்டுரைசெங்கோட்டையன் போர்க்குரல்! எடப்பாடிக்கு அருமையான தருணம் வரும்! அடித்துச்சொல்லும் குபேந்திரன்!

செங்கோட்டையன் போர்க்குரல்! எடப்பாடிக்கு அருமையான தருணம் வரும்! அடித்துச்சொல்லும் குபேந்திரன்!

-

- Advertisement -

அதிமுகவில் பிரிந்தவர்கள் மீண்டும் இணைந்தால் கட்சி வலிமைபெறும் என அனைத்து தரப்பினரும் விரும்புவதாகவும், மூத்த தலைவரான செங்கோட்டையனிடம், எடப்பாடி பழனிசாமி பேசி சமாதானம் செய்ய வேண்டும் என்றும் பத்திரிகையாளர் குபேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மோதல் விவகாரம் குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு பத்திரிகையாளர் குபேந்திரன் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது: எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு வலிமையான கூட்டணி அமைப்பேன் என்று சொன்னார். தற்போது விஜய் வருகைக்காக காத்திருக்கிறார். விஜய் வந்துவிட்டால் அதிமுக எழுச்சியான கூட்டணி. இதை மறுக்கவே முடியாது. திமுக கூட்டணி உறுதியாக இருந்தாலும், அதிமுக வலிமை ஆகிவிடும். விஜய் வந்தால் பாமக வந்துவிடும். தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் கட்சிகள் வந்துவிடும். திமுக கூட்டணியை போட்டு பார்த்துவிடலாம் என்று துணிச்சல் வந்துவிடும். பணமே இல்லாவிட்டாலும் வீட்டை காட்டை அடகுவைத்து வேலை பார்ப்பார்கள். உற்சாகம் இழுந்து காணப்படும் தொண்டர்களுக்கு நம்பிக்கையுடன் பிரச்சாரம் மேற்கொள்வார்கள்.

எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
File Photo

அதிமுகவினர் வெளிப்படையாக என்ன சொல்கிறார்கள் என்றால், கட்சி ஒற்றுமையாக இருந்தால் தேனி, ராமநாதபுரத்தில் ஜெயித்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். வைத்திலிங்கம், அதிமுகவில் 1991 முதல் வலிமையான தலைவர். எடப்பாடி பழனிசாமிக்கு முன்பாகவே அதிமுகவில் அமைச்சராக இருந்தவர். இன்று ஒட்டுமொத்த டெல்டாவில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உள்ளிட்ட 4 தொகுதிகள் அவரிடம் உள்ளன. புதுக்கோட்டை வரை அவரது வார்த்தை செல்லுபடியாகும். அப்போது யாரை எங்கே பயன்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வேண்டும். ஏன் ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்க்கு எல்லோரும் மாஞ்சி மாஞ்சி ஓட்டு போடுகிறார்கள். அதற்கு காரணம் சாதி ஓட்டு.

ஓபிஎஸ்சுடன் இணைவதை தொண்டர்கள் எப்படி ஏற்று கொள்வார்கள்?டிடிவி தினகரன் பதில்

அப்போது கட்சியில் பிரச்சினை உள்ளது என்று சொல்ல வந்தால், அதை கணிவோடு கேட்டு, அவர்களுக்கும் கணிவோடு பதில் அளித்திருந்தால் அவர்களும் ஒரு நம்பிக்கையோடு சென்றிருப்பார்கள். பிரிந்து சென்றவர்களை நீங்கள் கட்சியில் சேர்க்காவிட்டாலும் அவர்கள் சிறிது நம்பிக்கையோடு இருந்திருப்பார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி அந்த சந்திப்பை பச்சைப் பொய் என்று சொன்னார். இது தான் செங்கோட்டையனிடம் கோபத்தை உருவாக்கியது. ஒன்று அந்த விவகாரத்தை எப்படி முடித்திருக்க வேண்டுமோ அப்படி செய்திருக்க வேண்டும். அதன் பின்னர் ஊடகத்திற்கு வந்தபோது அதை எப்படி டீல் செய்ய வேண்டுமோ அதையும் விட்டுவிட்டீர்கள். இன்றைக்கு தேவை இல்லாமல் உங்களுக்கு தான் சிக்கல்.

அதிமுகவில் இருந்து விலகி அமைச்சர் முத்துசாமி திமுகவில் இணைகிற போது, அவரிடம் ஜெயலலிதா போனில் பேசுகிறார். ஏனென்றால் முத்துசாமியை இழக்கக் கூடாது என்று ஜெயலலிதா முடிவு செய்கிறார். அவர் நினைத்திருந்தால் அரசியலில் முத்துசாமியை காணாமல் ஆக்கியிருக்க முடியும். ஆனால் எதற்காக அவரை கூப்பிட்டார் என்றால், முத்துசாமி போன்ற ஒரு நல்ல விசுவாசமான தலைவரை இழந்துவிடக் கூடாது என்பதற்காகதான். இதேபோல், எடப்பாடி பழனிசாமியும், செங்காட்டையனை நேரில் சந்தித்து பேச வேண்டும். அப்போதுதான், செங்கோட்டையன் எத்தனை விசுவாசம் உள்ளவர் என்பதை உணர முடியும். ஏனென்றால் கடந்த 1991-1996 கால கட்டத்தில் செங்கோட்டையன் அமைச்சர். அவர் எத்தனைமுறை லஸ் ரோட்டில் எடப்பாடி பழனிசாமியை பார்த்ததற்கான சாட்சிகள் இன்றும் உள்ளது. லஸ் பகுதியில் உள்ள ஹவுசிங் போர்டு வீட்டில் செங்கோட்டையனை சந்திக்க, எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக்கொண்டு அவரது அமைச்சரவையில் செங்கோட்டையன் அமைச்சராக இருந்துள்ளார். அப்போது எதாவது முரண்டு பிடித்தாரா?

இது போன்று செங்கோட்டையன் பேட்டி கொடுத்த பின்னர், எடப்பாடி பழனிசாமி என்ன செய்திருக்க வேண்டும்?. செங்கோட்டையனிடம் நேரில் சென்று பேசி சமாதானம் செய்திருக்க வேண்டும். அத்துடன் இந்த விவகாரம் முடிந்து போயிருக்கும். தற்போது செங்கோட்டையன் அதிமுகவில இருந்து விலக உள்ளதாக தகவல் உலாவுகிறது. இது தவறானது. எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் குறித்து யாரும் விமர்சிக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும். செங்கோட்டையன் தொண்டர் படைமிக்க தலைவரா என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். நாங்கள் யாரும் அப்படி சொல்லவில்லை. ஆனால் அவர் எழுப்பிய கேள்வி நியாயமானது அவர் எழுப்பிய குரல் இன்று எதிரொலிக்கிறது. இதனை அறியாதவர் அல்ல எடப்பாடி பழனிசாமி. இந்த விவகாரத்தை முடிக்க எடப்பாடி பழனிசாமிக்கு இன்னும் ஒரு அருமையான தருணம் நிச்சயமாக அமையும். அதை செய்தால் எடப்பாடி மீண்டும் தலைவர். அப்படி இல்லாவிட்டால், கட்சிக்கு தான் இழப்பாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ