Homeசெய்திகள்கட்டுரைமகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டேவுடன் மூத்தத் தலைவர் சரத்பவார் சந்திப்பு - விரைவில் அரசியல் மாற்றம்?

மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டேவுடன் மூத்தத் தலைவர் சரத்பவார் சந்திப்பு – விரைவில் அரசியல் மாற்றம்?

-

மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டேவுடன் மூத்தத் தலைவர் சரத்பவார் சந்திப்பு - விரைவில் அரசியல் மாற்றம்?

மகாராஷ்ட்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள நிலையில் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சாத்பவார் மராட்டிய மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் மீண்டும் சந்தித்துள்ளார். 12 நாட்களில் இரண்டு முறை இருவரும் சந்தித்துள்ளதால் விரைவில் அரசியல் மாற்றம் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி பிடித்துள்ளது. 2024இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனித்து 240 தொகுதிகளில் மட்டும் வெற்றிப் பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களிலும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 சீட், ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 தொகுதிகள், லோக் ஜனசக்தி 5 சீட் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டேவுடன் மூத்தத் தலைவர் சரத்பவார் சந்திப்பு - விரைவில் அரசியல் மாற்றம்?

பாஜக ஆட்சிக்கு தேவையான மேலும் 32 தொகுதிகள் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், ஏக்நாத் ஷிண்டே ஆகிய மூன்று முக்கிய தலைவர்களால் பிரதமர் நாற்காலி உயிரோட்டத்துடன் இருக்கிறது.

இந்த நிலையில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை அம்மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவர் சரத்பவார் அடுத்தடுத்து இரண்டு முறை சந்தித்து பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அரசியல் குழப்பங்களுக்கும் அதிரடி அரசியலுக்கும் பஞ்சமில்லாத மாநிலம்.

தொடர்ந்து சிவசேனை கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே அக்கட்சியை உடைத்து பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். ஆனாலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஷிண்டே – பாஜக கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஷிண்டே தலைமையிலான சிவசேனா வெறும் 7 தொகுதிகளில் மட்டும் வெற்றிப் பெற்றது. 3-வது முறையாக பாரதீய ஜனதா கட்சி தலைமையில் மத்தியில் அமைந்துள்ள அமைச்சரவையில் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட அமைச்சராக்கப்படாததால் பாஜக-ஷிண்டே இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டேவுடன் மூத்தத் தலைவர் சரத்பவார் சந்திப்பு - விரைவில் அரசியல் மாற்றம்?

அதேபோன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அஜித் பவர் அண்மையில் நடந்த தேர்தல்களில் பெரும் தோல்வியை சந்தித்தார். அதனால் அஜித் பவார் வசம் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மீண்டும் சரத்பவார் தலைமைக்கு திரும்பி உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த ஜூலை 22ம் தேதி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மும்பையில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே-வை சந்தித்தார். மாநிலத்தின் மக்கள் சார்ந்த விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்பட்ட நிலையில் 12 நாட்களில் மீண்டும் இரண்டாவது முறையாக இன்று (சனிக்கிழமை) ஷிண்டேவை சந்தித்துள்ளார் சரத் பவார். மராத்தியர்களின் இட ஒதுக்கீடு குறித்து இருவரும் பேசியதாக கூறப்பட்டாலும் இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளதால் ஷிண்டே – சரத் பவார் ஆகிய இருவரின் தொடர் சந்திப்புகள் மராட்டிய மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப் படுகிறது.

அரசியல் சாணக்கியர் சரத்பவார் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பாஜக தலைவர்களுக்கு அரசியல் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

MUST READ