Homeசெய்திகள்கட்டுரைசுருங்கிப்போன பலூன்! பீஸ் பிடுங்கிய மோடி! புட்டு புட்டு வைத்த ஷ்யாம்!

சுருங்கிப்போன பலூன்! பீஸ் பிடுங்கிய மோடி! புட்டு புட்டு வைத்த ஷ்யாம்!

-

- Advertisement -

பதவி என்ற காற்று இல்லை என்றால் அண்ணாமலை சுருங்கிபோன பலூன் போன்றவர் என்றும்,  பதவி இல்லாவிட்டால் 2 வாரத்தில் அவரை மறந்துவிடுவார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.

shyam
மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம்

தமிழ்நாடு அரசு மீதான பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு மற்றும் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- ராமேஸ்வரத்தில் புதிய ரயில் பாலம் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதி வழங்கியுள்ளதாகவும், 8 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாகவும், அப்படி இருந்து நிதி தரவில்லை என்று அழுகிறார்கள் என்று திமுக அரசை விமர்சித்துள்ளார். ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு என்பது நாடு முழுமைக்குமானது. அது தமிழ்நாட்டிற்கு ஒதுக்கியது அல்ல. தமிழ்நாட்டிற்கு வரி பங்கீடு என்ன வந்தது என்பது தான் தொடக்கம் முதலே கேள்வியாக உள்ளது. பல்வேறு வரியாக மத்திய அரசுக்குதான் நாம் செலுத்த வேண்டி உள்ளது. இங்குள்ள சிஸ்டம் அப்படி. நாம் ஒரு ரூபாய் செலுத்தினால் மீண்டும் எவ்வளவு வருகிறது என்று தான் அனைத்து மாநில முதலமைச்சர்களும் ஒப்பிட்டு பார்ப்பார்கள். அதனால்  பிரதமர் மோடி அப்படி சொல்வது தவறான புரிதலாகும்.

பிரதமர் நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவிலை என்று அண்ணாமலை சொல்வது மிகப் பெரிய தவறாகும். பிரதமர்கள் வருகிறபோது, முதலமைச்சர்கள் வரவேற்க போகாமல் இருந்தது பல சந்தர்ப்பங்களில் நடைபெற்றுள்ளது. பிரதமர் மோடியின் வருகை என்பது 3 வாரங்களுக்கு முன்புதான் உறுதி செய்யப்பட்டது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதகை பயணம் 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டதாகும். வெயில் தாங்காமல் ஊட்டிக்கு சென்றுவிட்டார் என்று சொல்வதெல்லாம் மிகப்பெரிய தவறாகும்.

அண்ணாமலை என்பவர் ஒரு 4 வருடத்திற்கு முன்பு அவரது பெயர் அறிமுகம். 3 வருடமாக அரசியலில் அவருக்கு கிடைத்த அணுகூலம் என்ன என்றால் மத்திய அவர்கள் கட்சியின் அரசாங்கம். அதனால் முழுக்க முழுக்க பைனான்ஸ் ரீதியாக அள்ளி எடுத்தார்கள். நான் இல.கணேசன், பொன்.ராதா ஆகியோரிடம் பணியாற்றி உள்ளேன். அப்போதே கட்சியை சர்வைவ் செய்ய வைக்க பெரும்பாடுபட்டனர். ஜனசங்கம் காலத்தில் இருந்து கட்சியில் உள்ளவர்கள் எல்லாம் எனக்கு தெரியும். அண்ணாமலை என்ன ஆர்எஸ்எஸ் பயிற்சி பெற்ற சித்தாந்தவாதியா? கர்நாடகாவில் அவருக்கு பாஜகவினரோடு தொடர்பு இருந்தது. பாஜகவின் தவறு என்ன என்றால் எந்தவித சித்தாந்த அனுபவமும் இல்லாத அண்ணாமலையை மாநில தலைவராக திணித்தார்கள். அதற்கு பிறகு ஏராளமான பணம். அண்ணாமலையை புரமோட் செய்ய 200 கோடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அண்ணாமலை கொடுத்தது எல்லாம் பெரிய பெரிய வாக்குறுதிகள். அவற்றில் ஒன்றை கூட அவரால் நிறைவேற்ற முடியவில்லை. கோவையில் அண்ணாமலை போட்டியிட்டபோது 35 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

அண்ணாமலை

அண்ணாமலைக்கு பண பலத்தை வைத்து அறிமுகம் கிடைத்தது. அதை வைத்து அவர் அதிரடியாக மாற்றிக் கொண்டார். அண்ணாமலைக்கு படை பலமும், அதிகார பலமும் இருந்தது. அதற்காக  அவர் மீது நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை. அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபித்துள்ளாரா? என்றால் அதுவும் இல்லை. பதவி என்ற அந்த காற்று இல்லை என்றால் அண்ணாமலை சுருங்கிபோன பலூன். பதவி இல்லாமல் மட்டும் போகட்டும். ஒரு வாரம் அல்லது 2 வாரத்தில் அண்ணாமலையை எல்லோரும் மறந்துவிடுவார்கள். அண்ணாமலை தனிப்பட்ட முறையில் என்ன சாதித்தார்? நேற்று அண்ணாமலையும், சீமானும் கலந்துகொள்ளும் கூட்டம் ஒரே மேடையில் இருவரும் பங்கேற்கிறார்கள். சீமானோடுதான் அவர் மிக நெருக்கமாக அடையாளப்பட்டு கொண்டிருக்கிறார். அரசியல் ரீதியாக அவருக்கு வேறு கருத்துகள் இருக்கலாம்.

அப்பேற்பட்ட இல.கணேசன், தமிழிசை போன்றவர்கள் அந்த பதவியில் இருந்து எடுக்கப்பட்டு மாற்று பதவிகளில்  நியமிக்கப்பட்டதுதான். மாநில தலைவர் பதவி போகும்பட்சத்தில் அண்ணாமலைக்கான வாய்ப்பு என்பது மத்திய அமைச்சர் பதவி தான். தேசிய அளவில் இன்னும் தேசிய தலைவர்கள் போட வில்லை. உயர்ந்த பதவி என்பது தேசிய பொதுச்செயலாளர் ஆகும். மத்திய அமைச்சர் ஆனால்  எல். முருகனை போன்று மீண்டும் அதிகார பலத்துடன் இருக்கலாம். அது இல்லாமல் நான் தொண்டனாக இருக்க போகிறேன் என்றால் கீழே இருக்க வேண்டியது தான்.

m

பிரதமர் பங்கேற்ற மேடையில் நயினார் நாகேந்திரன் பங்கேற்றது பிரதமர் அலுவலக அறிவுறுத்தல் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அண்ணாமலை அவர் சட்டமன்ற தலைவர் என்பதால் ஏற்றப்பட்டார் என்று சப்பை கட்டு கட்டுகிறார். அர்ஜுன மூர்த்தி தான் தற்போது பாஜக தலைவர் பதவிக்கு பேசப்பட்டு வருகிறார். அணணாமலை இல்லாவிட்டால் கட்சி இல்லை என்பது அபத்தமானதாகும். அமித்ஷா வரும் 10ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். அதிமுக அலுவலகத்திற்கு அவர் போறப் பேகிறார். பாஜக கூட்டணியில் அதிமுக தொண்டர்களுக்கு மனக்கசப்பு உள்ளது. அண்ணாமலையை நீக்கினால் மட்டும் அது சரியாகாது. அமித்ஷா போன்ற உச்சபட்ச தலைவர் அதிமுக அலுவலகத்திற்கு செல்வது, தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். அது சரியான முவ் ஆகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ