Homeசெய்திகள்கட்டுரைவேலை நேரத்திலும் தூக்கமா?

வேலை நேரத்திலும் தூக்கமா?

-

வேலை நேரத்திலும் தூக்கமா?

தூக்கம் என்றாலே எல்லாருக்கும் பிடித்த ஒன்று. அதிலும் வெகு நேரம் உறங்க ஆசை படுபவர்கள் அதிகம்..  அதேநேரம் ஒருபக்கம்  தூக்கம் வராமல் சிரமம் படுபவர்களும் அதிகம் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இயல்பாக தூங்குவதில் தவறில்லை, ஆனால்  வேலை நேரத்தில் தூங்கினால்? அப்படி வேலை நேரத்தில் வரும் தூக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

அலுவலகங்களில்  மதிய உணவு சாப்பிட்டுவிட்டு வேலையில்  அமரும்போது ஒரு தூக்கம் வருமே அது சொர்க்கம், அதேபோல்  மீட்டிங் நடக்கும் பொழுது நம்மை அறியாமல் கண் அயர்ந்துவிடுவோமே அதுவும் இயல்பு தான்.

அந்த சமயங்களில்   பலரும் தூக்கத்தைக் கட்டுப்படுத்த தான் நினைப்போம்;  இருந்தும்  தொடர்ச்சியாகக் கொட்டாவி தானே வருகிறது. இதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் குழம்புவதுண்டு, ஆனால் சொல்யூஷன் ரொம்ப சிம்பிள்.

தினமும் காலையில் அலுவலகம் வருவதற்கு முன்னர் தியானம் செய்ய வேண்டும்.  ஆனால் இதனை பெரும்பாலனோர் செய்வதில்லை.  தியானம் உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும்,வேலையின் மீதான கவனமின்மையைத் தடுக்கவும் உதவும்.

அதுமட்டுமின்றி கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகள், எண்ணெய் பொருட்கள்  போன்றவற்றை  அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம், தீர்வுகள் எளிமையானது தான் , ஆனால் நாம் அதை செய்வதில்லை.

வேலைக்கு கிளம்பும் அவசரத்திலோ அல்லது வேலைக்கு வந்த பின்னரோ டீ  டைமில் கிடைத்த உணவை சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொள்கிறோம்..

தினமும் எட்டு மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டுமாம். அதையாவது நாம் செய்கிறோமா?  தூங்கும் நேரத்தில் தான்  வாட்ஸ் ஆப், முகநூல் (Face Book), இன்ஸ்டாகிராம், YouTube போன்ற சமுக வலைத்தளங்களில்  மூழ்கி விடுகிறோம்..

நேரம் போவது கூட தெரியாமல், இரவில் தூக்கத்தை தொலைப்பதோடு கண்களின் ஆரோக்கியத்தையும் இழக்கிறோம்..  தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களும், அலுவலகங்களில் தூங்கி வழிபவர்களும்  சீக்கிரம் படுக்கைக்குச் செல்வதையும், காலையில் சீக்கிரமாகக் கண்விழிப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள்.

தூக்கம் பிரச்சனை நீங்க:  காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.. இதனால் ரத்த ஓட்டம் சீராகி தூக்கப் பிரச்னைகள் தீருமாம்.

பணியிடத்தில் தூக்கம் வந்தால்: பகலில் அலுவலகத்தில் தூக்கம் வந்தால்,  உடனே  எழுந்து நடக்கத் தொடங்குங்கள். மாடிப்படிகளில் ஏறி இறங்கியோ, சிறு உடற்பயிற்சிகளைச் செய்தோ  தூக்கத்திலிருந்து விடுபட முயலுங்கள் என்கிறார்,   Apollo First Med Hospitals மருத்துவர் ஜெயராமன் (நுரையீரல் மற்றும் தூக்கவியல் சிறப்பு மருத்துவர்).

MUST READ