Homeசெய்திகள்கட்டுரைஉசுப்பிய ஸ்டாலின்! உளறிய அமித்ஷா! ஐதராபாத்தில் அடுத்த சரவெடி!

உசுப்பிய ஸ்டாலின்! உளறிய அமித்ஷா! ஐதராபாத்தில் அடுத்த சரவெடி!

-

- Advertisement -

1971 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர வேண்டும் என்பதை தென் மாநிலங்கள் ஒரு கோரிக்கையாக வைத்துள்ளதாகவும், அதனை ஏற்காவிட்டால் விகிதாச்சார அடிப்படையிலாவது தொகுதி மறுசீரமைப்பு செய்திட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தலாம் என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையினால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட போகும் பாதிப்புகள் குறித்தும், அதனை தடுக்க திமுக மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- தொகுதி மறுவரையறை செய்வதற்கு 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பை தான் அடிப்படையாக கொள்ள வேண்டும். அதில் நாம் பாதிக்கப்பட்டோம் என்பது உண்மைதான் 2 தொகுதிகளை இழந்தோம். 1971க்கு பிறகு எந்த  வருட கணக்கெடுப்பை பின்பற்றினாலும் தமிழகத்தில் எண்ணிக்கை குறைவே செய்யும். அல்லது நாம் 39 தொகுதிகளிலே இருப்போம். அவர்கள் 80லிருந்து 100 ஆகவோ, 130 ஆகவோ அல்லது 140ஆகவோ அதிகரிப்பார்கள். அதனால்தான் 1971ஆம் ஆண்டில் இருந்த விகிதாச்சாரத்தில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்கிறோம். 1971ல் இந்த ஆபத்துகளை எல்லாம் உணர்ந்து ஒரு சட்டத்தை இயற்றினார்கள். அதற்கும் பின்னால் நம்மால் போக முடியாது. அதனால் 1971ஆவது இருக்க வேண்டும்.

தென்மாநில அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் செய்தது மிகவும் சரியான நடவடிக்கையாகும். அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். அந்த தீர்மானத்துடன் குடியரசுத் தலைவரை சந்திப்பார்கள். பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவார்கள். இன்றைக்கு இந்த விவகாரத்திற்காக நாம் நீதிமன்றத்திற்கு செல்வோம் என்றால் நீங்கள் மத்திய அரசிடம் இதுகுறித்து கேட்டீர்களா என்பார்கள். அவர்கள் பதில் அளித்தார்களா? இல்லையா?. அப்படி இல்லாவிட்டால் பதில் அளிக்க உத்தரவிடுவார்கள். நேரடியாக கேட்டு வந்தால் என்ன செய்ய முடியும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பும். அதனால் இந்த விவகாரத்தில் ஸ்டாலின் அடுத்தடுத்து மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் சரியாகதான் உள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்ன என்றால் 1971 அடிப்படையிலான தொகுதிகளின் விகிதாச்சாரத்தை இன்னும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா கூட்டணியில் இருக்கக்கூடிய வடஇந்திய கட்சிகள் ஆதரிக்காது. அவர்களுக்கு அதிக இடங்கள் வர வேண்டும் என்பதை அவர்கள் எப்படி எதிர்ப்பார்கள். பாஜகவினுடைய கணக்கும் அதுதான். காங்கிரஸ் கட்சி எப்படி வடஇந்திய மாநிலங்களில் இந்த கோரிக்கைகளை வைப்பார்கள். அப்போது, காங்கிரசின் செல்வாக்கு குறையும் அல்லவா? காங்கிரஸ், திமுகவுடன் சேர்ந்துகொண்டு தொகுதிகளை குறைக்க முயற்சிக்கிறார்கள் என்று பாஜக அரசியல் செய்ய முயலும். இதை ஒரு கோரிக்கையாக வைத்து, அவ்வாறு ஏற்காவிட்டால் விகிதாச்சார அடிப்படையிலாவது தொகுதி மறுசீரமைப்பு செய்திட வேண்டும் என்று கேட்கலாம். இதனை ஒரு அழுத்தம் தரக்கூடிய விஷயமாகத்தான் வைக்க முடியும். அவர்களும் அப்படித்தான் வைத்துள்ளார்கள்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் - கணிக்க முடியாத கள நிலவரம்..!!

இந்தி பேசாத மாநிலமாகிய மேற்கு வங்கம் இந்த கூட்டத்தை புறக்கணித்து இருப்பது ஏன் என்று பெரிய கேள்வி எழுப்புவார்கள். தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி இன்றைக்கு முடிவு எடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் நாளை அவர் வேறு முடிவை எடுப்பார்கள். இதற்கு முன்பும் பல முறை அவ்வாறு மம்தா செய்திருக்கிறார். மம்தாவுக்கு இன்றைக்கு இருக்கக்கூடிய பிரச்சினையில் இதனை பார்க்காமல் இருந்திருக்கலாம். 80 மதிப்பெண் வாங்கியவர்களை,ஏன் 100 சதவீத மதிப்பெண் எடுக்கவில்லை என்று கேட்பது போன்றுதான் இது உள்ளது. கூட்டு நவடடிக்கைக்குழு கூட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகள் வந்திருந்த நிலையில், அந்த ஒரு மாநிலத்தில் இருந்து மட்டும் ஏன் வரவில்லை என கேட்கிறார்கள்.

நாங்கள் சொல்கிறோம். ஆந்திராவில் இருந்து பாஜக ஆகவே மாறிய பவன் கல்யாண் கட்சி பங்கேற்றுள்ளதே. ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வரவில்லை. ஆனால் தமிழகத்தின் கருத்தில் ஒன்றுபட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளாரே? நாளை ஐதராபாத்தில் நடைபெறும் கூட்டத்தில் அவர் பங்கேற்கலாமே?நீட் விவகாரத்தில் முதலில் நமக்கு யாருமே ஆதரவு அளிக்கவில்லை. இன்று ஒவ்வொருவராக வருகிறார்கள். அதுபோலத்தான் இந்த விவகாரத்திலும் நடைபெறும். ஐதராபாத்தில் நடைபெறும் கூட்டு நடவடிக்கை குழுவின் அடுத்த கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பங்கேற்பாரா? என கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் சந்திரபாபு நாயுடு, மாயாவதி ஆகியோர் ஒரே காரணத்திற்காகதான் மவுனம் காக்கிறார்கள் என்று தோணுகிறது.

தமிழ் படங்களை ஏன் இந்தியில் டப்பிங் செய்கிறார்கள்? ..... பவன் கல்யாண் கேள்வி!

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர்தான் அமலுக்கு வரும் என்று பாஜகவினர் சொன்னார்கள். தற்போது தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தள்ளிப்போனால் இதுபோன்ற முற்போக்கான விஷயங்களும் தள்ளிப்போகும் வாய்ப்புகள் உள்ளன. மசோதா கொண்டுவந்தபோது புதிய நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு செய்த பிறகு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதாக சொன்னார்கள். ஏன் இப்போதுள்ள 534 தொகுதிகளுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டுவரும் பட்சத்தில், அது 800 தொகுதிகளாக அதிகரித்தாலும் தன்னிச்சையாக 33 சதவீத இடங்கள் கிடைத்துவிடும் அல்லவா.அதனால் பாஜகவின் உண்மையான நோக்கம் என்பது மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்பதுதான். இங்கேயுள்ள அரசியல் கட்சிகள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று செயல்பட்டு வருகிறது. ஆனால் அங்குள்ளவர்கள் வருணாசிரம தர்மத்தை நம்புபவர்கள் ஆவர். அங்குள்ள காங்கிரஸ்காரர்களே வருணாசிரமத்தை பின்பற்றுபவர்கள் ஆவர். அதனால்தான் ராகுல்காந்தி, இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பது ஆயிரம் ஆண்டுகளாக நடைபெறும் கருத்தியல் யுத்தம் என் சொன்னார்.

உலக மக்கள் தொகை தற்போது 900 கோடியாக உள்ளது. இன்னும் 50 ஆண்டுகளில் இது 600 கோடியாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்தியாவும், சீனாவும் மக்கள் தொகையை குறைத்தாக வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு வருடத்தில் கருத்தரிக்கும் வல்லமை கொண்டவர்களில் 1000 பேரில் 14 பேர்தான் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். பீகாரில் சில ஆண்டுகளுக்கு முன்பு 30 ஆக இருந்தது. நம்மை போல இரு மடங்கு மக்கள் தொகை அங்கு வந்துகொண்டிருக்கிறது. அவர்கள் 5 குழந்தைகளில் இருந்து 3ஆக குறைத்துள்ளனர். ஆனால் இன்னும் குறைத்தாக வேண்டிய நிலை உள்ளது. அதுவரை நாம் பாதிக்கப்படக்கூடாது. நிதிக்குழு நமக்கு எதிராக போய் கொண்டிருக்கிறது. ஏன் என்றால் சட்டம் அப்படி உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ