Homeசெய்திகள்கட்டுரைபாசிஸ்ட்டுகளை அச்சுறுத்தும் 'ஸ்டாலின்'! உடைத்து பேசும் ஜென்ராம்! 

பாசிஸ்ட்டுகளை அச்சுறுத்தும் ‘ஸ்டாலின்’! உடைத்து பேசும் ஜென்ராம்! 

-

- Advertisement -

தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால், தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை தர முடியாது என்று சொல்லி, மத்திய அரசு எல்லாவற்றுக்கும் ஒரு அடித்தளத்தை ஆணவத்தோடு போட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் குற்றம்சாட்டியுள்ளார்.

தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கான நிதியை வழங்க முடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளதற்கு பதில் அளித்து தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் கூறி இருப்பதாவது:- மும்மொழி கொள்கையை வைத்து யார் அரசியல் செய்கிறார்களோ?, அவர்கள் தான் இந்தியை வைத்தும் அரசியல் செய்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கையை முன் நிபந்தனையாக வைத்து யார் அரசியல் செய்கிறார்களோ?, அவர்கள்தான் இந்தியை வைத்தும் அரசியல் செய்கிறார்கள். மாணவர்கள் கற்கும் கல்வியில் மண் அள்ளிப்போடும் விதமாக, அல்லது சாப்பிடும் சாப்பாட்டில் மண் அள்ளிப்போடும் விதமாக அரசியலை செய்து கொண்டிருப்பது யார்? அப்படி என்பது இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும், அது மத்திய பாஜக அரசுதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அமைதியாக இருக்கக்கூடிய ஒரு குளத்தில் கல்எறிவது மத்திய அரசு. அமைதியாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டில் பதற்றத்தை பற்ற வைப்பது மத்திய அரசு. தேசிய கல்விக்கொள்கையை ஏற்கா விட்டால், கல்விக்கான நிதியை தர முடியாது என்று சொல்லி எல்லாவற்றுக்கும் ஒரு அடித்தளத்தை ஆணவத்தோடு போட்டிருப்பது மத்திய அரசு. அவர்கள் தான் அச்சுறுத்துகிறார்கள். அவர்கள்தான் இந்தியை வைத்து அரசியல் செய்கிறார்கள். அதுபோக இந்த இந்தி அரசியல் இந்தியாவிற்கு புதிதும் அல்ல.

"இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்"- பிரதமர் நரேந்திர மோடி!

எந்த கட்சியையும் சாராத இந்திய குடிமக்களுக்கு பாஜக, காங்கிரஸ் என அனைத்து அரசுகளும் இந்திய அரசுதான். இந்திய அரசு, இந்திய அரசமைப்பு சட்டத்தால் நிறைவேற்றப்படுகிறது. அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 14 சமத்துவத்தை பற்றி பேசுகிறது. அதில் மொழியை அடிப்படையாக கொண்டு எந்த குடிமக்களையும் பாகுபாட்டோடு நடத்த மாட்டோம் என்கிற அடிப்படை உரிமையை சொல்கிறது. ஆனால் தற்போது நீங்கள் ஒரு மொழியை அடிப்படையாக கொண்டு தமிழ்நாட்டின் மீது அல்லது இந்தி பேசாத மக்கள் மீது ஒரு அழுத்தத்தை கொடுக்கிறீர்கள். ஏற்கனவே மொழி சத்துவம் என்பது 14வது பிரிவில் உள்ளது போல இல்லை என்ற கருத்து இங்கே நீண்ட காலமாக உள்ளது. இந்திய ஆட்சிமொழி என்று பார்த்தால் இந்தி, ஆங்கிலம் என 2 மொழிகள் தான் உள்ளது. இந்தியை தவிர எந்த ஆட்சி மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது, இந்திய ஆட்சி மொழிகள் எத்தனை என்று பார்த்தாலே தெரிந்துவிடும். அது மொழிபெயர்ப்பு விவகாரம் என்று புரட்சிக்கவி பாரதிதாசன் தெரிவித்தார்.

எனது சுய அனுபவத்தை சொல்கிறேன். மாஸ்கோவில் நான் வாடகை வாகனத்தில் பயணம் செய்கிறபோது, ஓட்டுநர் தான் வைத்துள்ள ஐபேடில் ரஷ்ய மொழியில் பேசுகிறார். அது ஆங்கிலத்தில் மாற்றம் செய்யப்பட்டு நமக்கு பதில் சொல்கிறது. நாம் ஆங்கிலத்தில் பேசுவதை, ரஷ்ய மொழியில் மாற்றம் செய்து அவரிடம் சொல்கிறது. இதில் மொழி பெயர்ப்பில் என்ன பிரச்சினை ஏற்படுகிறது. இந்திய மொழிகளுக்குள் இதனை செய்ய முடியாதா?  இந்தியைதான் கொண்டு வர வேண்டும் என்பது எந்த வகையில் சரியானது.

டெல்லியில் அரசியல் செய்ய வேண்டும் என்றால் இந்தி மொழி அவசியம் என்று சொல்கிறார்கள். அந்த இந்திய அரசியல் என்பது இந்தியாவை பல ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச்செல்லும் அரசியல் ஆகும். உலகம் மாறுகிறது, தமிழ்நாடு இன்னும் மாறாமல் இருக்கிறது என்று போகிற போக்கில் அமைச்சர் சொல்கிறார். உலகில் ஏற்படும் மாற்றங்களை இரண்டு விதமாக சொல்லலாம். ஒன்று இருக்கும் இடத்தில் இருந்து முன்னோக்கி செல்வதும் மாற்றம்தான், மற்றொன்று இருக்கும் இடத்தில் இருந்து பின்னோக்கி செல்வதும் மாற்றம்தான். பாஜகவினர் பின்னோக்கி இழுத்துக்கொண்டு செல்கிறார்கள். பிளாஸ்டிக் சர்ஜரி அந்த காலத்திலேயே விநாயகருக்கு நடைபெற்றது. ரைட் சகோதரர்களுக்கு முன்னதாகவே புஷ்பக விமானத்தை ராமர் பயன்படுத்தினார். புல்புல் பறவையில் சிறையில் இருந்து ஒருவர் தப்பிச் சென்றார். நோய்களுக்கு எல்லாம் அருமருந்து பசுவினுடைய கோமியம் என்றெல்லாம் பாஜகவினர் சொல்கிறார்கள். இவர்கள் இந்தியாவை அறிவியல் ரீதியாக முன்னோக்கி அழைத்துச்செல்வதற்கு பதிலாக பின்னோக்கி அழைத்துச்செல்கிறார்கள்.

தங்களுடைய சுய நலத்திற்காக சில கட்சிகள், அடிப்படையில் ஒரு முற்போக்கான முகாமில் வளர்ந்த போதும் கூட ஆதாயத்திற்காக பாஜக போன்ற கட்சிகளை ஆதரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய குரலாக இவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மிகவும் வருந்தத்தக்க ஒரு மாற்றமாக இதை பார்க்கிறேன். பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பொழுதுபோகவில்லை என்றால், தமிழ்நாட்டில் மொழிப் பிரச்சினையை கையில் எடுக்கிறார்கள் என்று சொல்கிறார். அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும், இந்திய ஆட்சி மொழி ஆக்கிவிட்டால் ஒருநாளும் யாரும் பொழுது போகாமல் அந்த பிரச்சினையை கையில் எடுக்க முடியாது. ஏன் அதை செய்ய மாட்டேன் என்கிறீர்கள். ஜனநாயகத்தில் ஒரு சிக்கல் வந்தால், அதை மேலும் ஜனநாயகப்படுத்த வேண்டும் என்ற கோட்பாடு உள்ளது. ஜனநாயகத்தில் நீங்களே ஒரு சிக்கலை உருவாக்கி,  அடக்குமுறையையும், சர்வாதிகாரத்தையும் கையில் எடுப்பதற்கு முயற்சி செய்கிறீர்கள். ஜனநாயக பூவர்வமாக செயல்படும் மாநிலங்களை நிர்மூலமாக்க முயற்சிக்கிறீர்கள்.

மும்மொழி கொள்கையோடு மட்டும் இந்த தேசிய கல்வி கொள்கையை குறுக்கிவிட முடியாது. மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் அல்ல, தேசிய கல்வி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க முடியாது என்றுதான் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவிக்கிறார். தேசிய கல்விக்கொள்கையில் மாணவர்களை ஆல் பாஸ் செய்யும் நடைமுறை ரத்து செய்யப்பட்டு, 3ஆம் வகுப்பில்,  5ஆம் வகுப்பில், 8ஆம் வகுப்பில் மாணவர்களை வடிகட்டும் முறை இடம்பெற்றுள்ளது. மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி அடையாவிட்டால் ஒரு குழந்தையை வீட்டிற்கு போ என்று சொன்னால், அந்த குழந்தை என்ன செய்யும். அவன் இந்த 3 ஆண்டுகளில்தான் பள்ளிகளையே காண்கிறான். அவனுக்கு 3ஆம் வகுப்பிலேயே பொதுத்தேர்வு வைத்து வெளியே தள்ளினால் என்ன வளர்ச்சி இருக்கும்? . 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பில் ஆல் பாஸ் முறையில் வந்தவர்கள் எந்த விதத்தில் குறைந்து விட்டார்கள். அரசுப் பள்ளிகளில் இருக்கும் மாணவர்களோ, பிற பள்ளிகளில் இருக்கும் மாணவர்களோ எந்த வகையில் குறைந்து போய்விட்டார்கள். கல்வியில் வளரக்குடிய தமிழ்நாட்டை பின்னோக்கி இழுக்கவும், எல்லா விஷயத்திலும் எல்லோரையும் பின்னோக்கி இழுக்கவும் இதுபோன்ற அச்சுறுத்தல்களையும், நிபந்தனைகளையும் போட்டு கொண்டிருக்கிறார்கள்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் நீட் பயிற்சி!
File Photo

மும்மொழி கொள்கை என்பது ஒரு சாதாரண விஷயம். இதனை தமிழக அரசியல் கட்சிகள் பூதாகரமாக்குகிறார்கள் என்று பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் பாஜகவினரின் முயற்சிகள் இந்தியாவை செலுமை படுத்துவதாக இல்லை. தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு மாணவர், உ.பி.யில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். தற்போதைய நடைமுறையில் அந்த மாணவர் எந்த சிக்கலும் இல்லாமல் ஆங்கிலத்தை வைத்து மேனேஜ் செய்து கொள்ளலாம். அங்கு போன 6 மாதங்களில் எந்த மாநிலத்தில் படிக்கின்றனரோ, அந்த மாநில மொழியை கற்று விடுவார்கள். அதனால் அவர்களுக்கு எந்த மொழியும் பிரச்சினை இருக்காது. புதிய கல்விக் கொள்கை அலுக்கு வந்தால், உ.பி மாநிலத்திற்கு படிப்பதற்காக சென்றால் பயிற்று மொழியாக ஆங்கிலம் இருக்காது. இந்தியில்தான் இருக்கும். அப்போது உங்கள் தாய் மொழியில், மாநில மொழியில் பயிற்று மொழியாக பாடம் கற்பிக்கிறோம் என்ற பம்மாத்து. இது மேல்புறத்தில் இனிப்பு தடவி, உள்ளே விஷத்தை வைப்பது போன்றதாகும்.

Stalin - மு.க.ஸ்டாலின்

இன்று விவாத மேடையில் நான் உள்ளிட்ட எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதற்கு ஸ்டாலின்தான் காரணம்… ஜோசப் ஸ்டாலின்தான் காரணம். 2-வது உலகக்போரில் ஹிட்லருடைய, முசோலினியுடைய பாசிஸ்ட் படைகளை, ஜோசப் ஸ்டாலின் முறியடிக்கவில்லை என்றால் இந்தியா இன்று இருக்கும் இந்தியாவாக இருக்காது. உலகம் இன்றைய ஒழுங்கில் இருக்காது. அதனால் இன்றைய தேதியில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்குமா? என்பதே பெரும் சந்தேகம். அதனால் உலக வரலாற்றில் ஸ்டாலின் என்ற பெயரை பிரிக்கவே முடியாது… மறக்கவே முடியாது… அப்படி ஒரு பெயரை கொண்டவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். தன்னுயை மத அடையாளத்தை, தன்னுடைய சாதி அடையாளத்தை எந்த அடையாளத்தையும் காட்டாத ஒரு மதச்சார்பற்ற பெயரை கொண்டவராக இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அதனால் பாராட்ட மனம் இல்லாமல், அந்த பெயர் அவர்களை தொந்தரவு செய்கிறது. அதனால் அந்த பெயரை வந்து மு.க.ஸ்டாலினோடு உள்ள பிரச்சினை மட்டும் இல்லை, ஜோசப் ஸ்டாலினோடும் அவர்களுக்கு பிரச்சினை உள்ளதால் அந்த பெயரை அதிர்ச்சியை கொடுக்கிறது. அதிர்வை கொடுக்கிறது.

மொழி சமத்துவத்தை நிலை நாட்டாமல் இந்தி திணிப்பு என்கிற பிரச்சினை தீரவே தீராது. அரசமைப்பின் 8வது அட்டவணையில் உள்ள மொழிகள் அனைத்தும்  இந்திய ஆட்சி மொழிகள் ஆக வேண்டும் என்பது மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வாகும். இந்தியை, இந்திக்கு பின்னர் சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக கொண்டு வருவதற்கான முதற்கட்ட சதிதான் இந்த மும்மொழி கொள்கை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ