Homeசெய்திகள்கட்டுரைமாநில சுயாட்சி தீர்மானம்! வரலாறு திரும்புது... பாஜக பதறது! 

மாநில சுயாட்சி தீர்மானம்! வரலாறு திரும்புது… பாஜக பதறது! 

-

- Advertisement -

மாநில சுயாட்சி கொள்கையில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் உறுதியாக இருந்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ள மாநில சுயாட்சி தீர்மானத்தின் முக்கியத்துவம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- ராஜமன்னார் குழு 1969ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் தொடர்பாக, அதிகாரப்பகிர்வு  ஆய்வு செய்து அறிக்கை அளித்த பின்னர் தான் 1974 ஏப்ரல் 14ஆம் தேதி கலைஞரால் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏ.ஆர்.சி எனப்படும் நிர்வாக சீர்திருத்த கமிஷன் தான், மத்திய மாநில உறவுகள் தொடர்பாக சுதந்திர இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் கமிஷனாகும். அவர்கள் வலிமையான மத்திய அரசு என்கிற கருத்தை தான் வலியுறுத்தினார்கள். அதற்கு காரணம் அப்போது சுதந்திரம் அடைந்து சில ஆண்டுகளே ஆகி இருந்து. நாடு முழுமையாக ஒன்றிணைந்து இருக்கவில்லை. அதன் பிறகு மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பு என்பன உள்ளிட்ட மாநில அபிலாஷைகள் பெருகிவிட்டது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்பது திமுகவின்  அடிப்படைய கொள்கையாகும். ஆரம்பத்தில் தனித்தமிழ்நாடு என்று திமுக வலியுறுத்தியது. பின்னர் அந்த கொள்கையை அண்ணா கைவிட்டார். அதன் பிறகு 1967ல் திமுக ஆட்சிக்கு வந்தது. தொடர்ந்து 1969ல் ராஜமன்னார் குழு அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் நம்மோடு சேர்ந்தன.

kalaignar

திமுக மத்திய அரசில் அங்கம் வகித்தபோது ஏன் இது தொடர்பாக பேசவில்லை என கேள்வி  எழுப்புகிறார்கள். அது சரியானதாக தோன்றவில்லை. ராஜமன்னார் குழுவின் முக்கிய பரிந்துரைகள் என்பது, மாநில அரசை கலைக்கும் 356வது சட்டப்பிரிவு உபயோகம் மற்றும் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை ஆய்வு செய்வதற்கான ஒரு அமைப்பு ஆகும். அந்த கோரிக்கை 1990ல்  வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் தான் சாத்தியப்பட்டது. அதன் பிறகு பாஜகவும் பல முறை சொல்லியுள்ளது. மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது பல முறை சொல்லியுள்ளார். ஆனால் சாத்தியப்படவே இல்லை. நாம் எதற்காக அதிக அதிகாரங்களை கேட்கிறோம். மாநில மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு என்பது மாநில அரசுகளுக்கு தான் உள்ளது. ஆனால் மத்தியில் அதிகார குவிப்பு பெருகிக்கொண்டே போகிறது. இயல்பாக இந்த நாடு எதை நோக்கி சென்றிருக்க வேண்டும் என்றால் மத்தியில் அதிகார குறைப்பு, மாநிலங்களுக்கு அதிகாரம் கூடுதலாக்க பட்டிருக்க வேண்டும். ஆனால் போகவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய செய்தியாகும்.

அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு - சோனியா

இந்திரா காந்தி பிரதமராக வந்தபோது மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்றார். அதனுடைய தீமைகளை இன்றைக்கும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஜிஎஸ்டி 101வது பிரிவு மூலம் கொண்டுவரப்பட்டது. இன்றைக்கு மாநிலங்களுக்கு வரிவிதிப்பு அதிகாரமே கிடையாது. பத்திரப்பதிவுத்துறை, மது மற்றும் பெட்ரோல் டீசல் விற்பனையில் கிடைக்கும் வருவாய் ஆகியவற்றை தாண்டி எந்த அதிகாரமும் கிடையாது. மத்திய அரசு வரியை பகிர்ந்தளிக்க வேண்டும். அப்படி பகிர்ந்தளிக்கும் போது கட்டாயமாக வழங்க வேண்டிய வரிகள் உள்ளன. நியூஸ் பிரிண்ட்டுகள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டாலும், அதன்  வாயிலாக தமிழ்நாட்டிற் எந்த பலனும் கிடையாது. தற்போதைய கட்டமைப்பில் இதுபோன்ற பல்வேறு கோளாறுகள் உள்ளன. அவரை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

மாநில உரிமையை நிலைநாட்டவே ராஜமன்னார் குழு அமைத்து ஆய்வு - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மத்திய அரசு ஈட்டுகிற வரி மற்றும் வருவாயில் தென்மாநிலங்கள் பெரிய பங்களிப்பினை வழங்குகிறார்கள். ஆனால் அந்த அளவுக்கான தொகை நமக்கு கிடைக்கிறது. மாநிலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமரின் திட்டம் என்கிறார்கள். காரணம் என்ன என்றால் ஒவ்வொரு மாநில அரசுக்கு நிதியை விடுவித்து, மாநில அரசு அந்த திட்டத்தை நிறைவேற்றும். பி.எம். ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொண்டால்தான் சமக்ரா சிக்ஷா அபியான் திட்ட நிதியை விடுவிப்போம் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். ஆனால் எநத ஒரு திட்டத்தையும் அப்படி செயல்படுத்த வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. அப்போது தேவையா தேவை இல்லையா என்பதை சட்டமன்ற முடிவு எடுக்கும். இதை எப்படி சரி செய்ய முடியும் என்றால் இன்டர்ஸ்டேட் கவுன்சிலை வலுப்படுத்துவதன் மூலமாக சரி செய்ய முடியும். ஆனால் கொஞ்சம் நாட்கள் அந்த கவுன்சில் செயல்பட்டது. தற்போது எங்கே உள்ளது என்றே தெரியவில்லை. இப்படிபட்ட சூழலில் மீண்டும் ஒரு முறை மாநில சுயாட்சி தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறோம்.

அள்ளிக் கொடுக்கும் வள்ளல் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் இன்று!

கொள்கை என்பது மாநில சுயாட்சி. ஒரு மாநிலம் என்று எடுத்துக்கொண்டால் ஒரு இயங்கு சக்தி இருக்க வேண்டும். ஒரு இயக்கு சக்தி இருக்க வேண்டும். மாநிலத்தின் இயக்கு சக்தி என்றால் மக்கள். இயங்கு சக்தி எது என்றால், மாநிலத்தின் சில சித்தாந்தங்கள். நம்முடைய சித்தாந்தம் எது என்றால்?  1967 முதல் மாநில உரிமைகளை பாதுகாப்பதுதான் திமுக, அதிமுகவின் சித்தாந்தமாக உள்ளது. எம்ஜிஆர் மத்திய அரசை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். திமுக இன்னும் கொஞ்சம் போர்க்குணத்துடன் இருந்திருக்கும். நாட்டில் முதன் முதலாக கேரளாவில் நம்பூதிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசுதான் கலைக்கப்பட்டது. அதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

நாடு தழுவிய அளவிலான ஒரு விவாதத்திற்கு வழிவகுத்தால்தான் அடுத்த கட்டத்திற்கு போக முடியும்.  இதனால் நமக்கு 2 நன்மைகள் கிடைத்தன. திமுக மத்திய அரசில் பங்கெடுத்தபோது மத்திய – மாநில கமிட்டி வந்தது. அதற்கு அடுத்தாற்போல் வந்தது. நீதிபதி பூன்ச் தலைமையில் வந்த கமிட்டி இன்னும் தீவிரமான பரிந்துரைகளை வழங்கியது. இருந்தபோதும் 1976ல் திமுக அரசு கலைக்கப்பட்டது.  மாநில அரசு கலைப்பு எப்படி தடுத்து நிறுத்தப்பட்டது என்றால் 1994 பொம்மை Vs  மத்திய அரசு தொடர்பான வழக்கிற்கு பிறகுதான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ