Homeசெய்திகள்கட்டுரைதிமுகவின் வலிமையை காட்டிய சர்வே... 79% பேர் பாஜகவை எதிர்க்கிறார்கள்! புள்ளி விபரங்களுடன் ஜென்ராம்!

திமுகவின் வலிமையை காட்டிய சர்வே… 79% பேர் பாஜகவை எதிர்க்கிறார்கள்! புள்ளி விபரங்களுடன் ஜென்ராம்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் அதிருப்தி உள்ளது, ஆட்சிக்கு எதிரான மனநிலை உள்ளது என்று சிலர் சொல்வது உண்மைக்கு மாறானது என்றும், இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுகவுக்கு உள்ள மக்கள் வலிமையை காட்டுவதாகவும் பத்திரிகையாளர் ஜென் ராம் தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்பாக பத்திரிகையாளர் ஜென் ராம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- இந்தியா டுடே கருத்துக்கணிப்பு ஒரு உண்மையை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. உரிமைகளை இழந்து நிற்கிற பகுதிகளை ஒவ்வொன்றாக தேர்வு செய்து, அவர்களுக்கான திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்தி, அவர்களது மனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் வென்றுள்ளார். சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட பெரும் கூட்டத்தினுடைய திரள் வாக்குகள் தான்அது. 2021ல் ஆட்சிக்கு வந்த ஸ்டாலின், 2021க்கு பிறகு அவர் கொண்டுவந்த திட்டங்கள் வாயிலாக மக்களிடம் மிக நெருக்கமாக சென்று சேர்ந்துள்ளார். மக்கள், பள்ளி மாணவர்கள், உரிமைத்தொகை பெற்ற பெண்கள் என அனைத்து தரப்பினரும் அவரை ஏற்றுக்கொண்டுள்ளனர். அரசின் திட்டங்களின் பலன்கள் ஏதாவது ஒரு திட்டத்தின் வாயிலாக ஒரு குடும்பம் பலனடைகிறது என்ற நிலை உள்ளதால், அவர்கள் மிக உண்மையாக ஆட்சி தொடர வேண்டும் என வாக்களிக்கிறார்கள். அதனால் படிப்படியாக பழைய 28 சதவிகிதம் தான் திமுகவுக்கு என்பது மாறிவிட்டது. கூட்டணியோடு சேர்ந்து வலிமையாக 50 சதவீதத்தை தாண்டி திமுகவுக்கு வாக்குகள் கிடைக்கும். 2021ல் இருந்த நிலையைவிட இப்போது திமுக வலிமையாக உள்ளது. தமிழ்நாட்டில் அதிருப்தி உள்ளது, ஆட்சிக்கு எதிரான மனநிலை உள்ளது என்று சிலர் சொல்வது உண்மைக்கு மாறானது. இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுகவுக்கு உள்ள மக்கள் வலிமையை காட்டுகிறது.

வரலாற்று சிறப்புமிக்க திட்டம் புதுமைப் பெண் திட்டம் - தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்

திமுகவுக்கான வாக்குகள் எங்கிருந்து வந்தது என்றால், அனைத்து கட்சிகளில் இருந்தும் வந்திருக்கலாம். ஒரு அரசியல் கட்சியின் தீவிர விசுவாசிகள் மற்றொரு கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் நடுநிலையாளராக இருப்பதாக நினைத்தவர்களில் பலர், பெண்கள் பலர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ தான் நமக்கு வாழ்வு அளிப்பார்கள் என்று எதிர்பாத்திருந்த மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பெரும்பாலானோர் இப்போது திமுகவை நோக்கி நகர்ந்து வருகிறார்கள். கலைஞர் காலத்தில் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த நகர்ப்புற மக்கள், ஆசிரியர்கள், மாத சம்பளம் பெறுவோர் இருந்தனர். அவர்களில் பாதிக்கும் மேல் தற்போது பாஜக பக்கம் நகர்வதை உணர்கிறேன். ஆனால் கிராமப்புறங்களில் பெரும்பாலானோர் ஸ்டாலின் பக்கம் நகர்கிறார்கள்.

விஜய்க்கு வாக்களிக்கும் பெண்கள் ஒருவேலை மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம். சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்கள் ஸ்டாலினின் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண் போன்ற திட்டங்களால் பயன்பெறும் பெண்களை கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒருபோதும் விஜய்க்கு நகர்ந்து போக மாட்டார்கள். கடந்த காலங்களில் அதிமுவுக்கு வாக்களித்தவர்களாக இருந்தாலும், இப்போது 2024ல், 2026ல் அவர்கள் திமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள். இந்த ஓராண்டில் திமுக இன்னும் தீவிரமாக செயல்பட்டால் வாக்கு சதவீதம் 52 என்பது 55 ஆக கூட உயரலாம். எதிர்க்கட்சிகள் தீவிரமாக வேலை செய்தால், 52 என்பது ஒன்று, இரண்டு சதவீதம் குறையலாம். எஞ்சியுள்ள 40 சதவீத வாக்குகளை தான் மற்றவர்கள் பிரித்துக்கொள்ள வேண்டும். அதில் அதிமுக 25 சதவிகிதம் வரை வாங்கிவிடும் என நம்புகிறேன். திமுக கூட்டணி + அதிமுக இதோடு தமிழ்நாடு சட்டப்பேரவை 2026ல் முடிந்துவிடும். அதற்கு மேல் யாருக்கும் இடம் இருக்காது.

டிச.3-க்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!
Photo: AIADMK

விஜய் வருகிறார். விஜய் வருகிறார் என்று சொல்கிறார்கள். யார் அந்த விஜய்? திரைப்பட புகழை வைத்து விஜயை எல்லாரும் பேசுகிறார்கள். விஜயகாந்த், ஒரு தொகுதியில் ஜெயித்தபோது அரசியல்நுட்பம் இருந்தது. அதுபோன்ற நுட்பமான அரசியலில் விளையாட இவர்கள் தகுதி படைத்தவர்களா என தெரியவில்லை. அதனால் அவர்கள் எந்த தொகுதிகளில் நின்றாலும் ஜெயிக்க முடியாது. அவர்கள் தோற்பவர்கள் எல்லாருடனும் அனைத்து சமரசங்களுக்கும் தயாராக உள்ளனர். ஆனால் வெற்றி பெறுபவர்களோடு சமரசத்திற்கு போக மாட்டார்கள். அதனால்  அவர்களுக்கு அந்த நுட்பம் தெரியவில்லை. விஜய், அதிமுக கூட்டணியில் இருந்தால் எதிர்க்கட்சி வரிசையில் அமரலாம். இப்போது உள்ள சட்டமன்றத்தை பார்த்தோம் என்றால், அதில் திமுக கூட்டணி உள்ளது. திமுக கூட்டணி அல்லாமல் அதிமுக உள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்த பாமக எம்எல்ஏக்கள் 5 பேர், பாஜக எம்எல்ஏ-க்கள் 4 பேர் உள்ளனர். அதேபோல் தான் திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும் தான் உள்ளே உள்ளன. அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக போட்டியிட்டால் யாரும் உள்ளே வர முடியாது. அதிமுக சில இடங்களில் வரலாம். அதிமுக கூட்டணியில் விஜய் இடம்பெற்றால் வரலாம். ஆனால் ஆட்சியை பிடிக்க வாய்ப்புகள் இல்லை.

இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடன செய்போது அதற்கு எதிராக 5 கட்சிகள், தங்களது கட்சி அடையாளத்தை முற்றிலும் துறந்து ஒரே கட்சியாக இணைந்தனர். அதுவரை தாங்கள் வளர்த்து வந்த அத்தனை அடையாளங்களையும் துறந்து, ஒரு தெளிவான கூட்டணியாக வந்தனர். இந்தியா கூட்டணி வருவதற்கு கூட பல்வேறு விசாரணை அமைப்புகள் முலம் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்தது. ஆனால் அதையும் விட  மிகவும் குறைவான அழுத்தம் தான் திமுக ஆட்சியில் உள்ளது. அப்படி இருக்கும்போது, திமுக ஆட்சியை அகற்றியே ஆக வேண்டும் என வருகிறார்கள் என்றால், பொலிட்டிகல் அஜெண்டாவை செயல்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என்ற அந்த உந்துதலை தவிர அழுத்தமான கட்டாயம் எதுவும் இல்லை. எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி அகற்றப்பட்டபோது, மக்கள் திமுகவை கொண்டாவில்லை. மாறாக மிகப்பெரிய நிம்மதி பெருமூச்சு விட்டனர். இப்போது அந்த நிம்மதி பெருமூச்சை தேடக்கூடிய அளவில் எந்த அழுத்தமும் மக்களிடம் இல்லை. மாறாக டெல்லியில் இருந்து வரக்கூடிய செயல்கள்தான் அதுபோன்ற அழுத்தங்களை கொடுக்கிறது. சீக்கிரம் அதுபோன்ற அழுத்தங்களில் இருந்து விடுபட வேண்டும் என்ற தவிப்புதான் உள்ளது.

எடப்பாடி பழனிசாமி அந்த தவிப்பை உணர்ந்து கொண்டிருந்தால் என்றால் அவர்களது வாக்கு சதவீதம் 25க்கும் மேலாக வந்திருக்கலாம். ஆனால் எடப்பாடி பழனிசாமி அறிக்கைகள் மூலமாகவோ, அதிமுகவின் 2ஆம் கட்ட தலைவர்களான ஜெயக்குமார், முனுசாமி போன்றவர்களை  பேசவைத்தோ  நாங்கள் அந்த லைனை எடுத்தவிட்டோம் என்று சிறுபான்மையினரை நம்பவைத்து ஏமாற்ற முயற்சி செய்கிறார்களோ என்ற சந்தேகத்தை தான் உருவாக்கியது. அதனால்தான் வாக்கு சதவீதம் குறைந்தது. இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 21 சதவீதம் கிடைத்திருக்கிறது என்றால், 79 சதவீத வாக்குகள் அவருக்கு எதிராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

MUST READ