Homeசெய்திகள்கட்டுரைவளர்ச்சியை அடிப்படையாக கொண்ட தமிழ்நாடு பட்ஜெட்!  சிறப்பு அம்சங்களை விளக்கும் ஆனந்த் சீனிவாசன்! 

வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட தமிழ்நாடு பட்ஜெட்!  சிறப்பு அம்சங்களை விளக்கும் ஆனந்த் சீனிவாசன்! 

-

- Advertisement -

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தேர்தலுக்கானது அல்ல. தொழில்துறை, சேவைத்துறை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டை அடிப்படையாக கொண்டது என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் 2025-06ஆம் ஆண்டிற்கான நிதிநிலை குறித்து பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அரசு ஊழியர்கள் தங்கள் 15 நாள் விடுப்பை சரண்டர் செய்து, அதற்கான பணப்பலனை பெறலாம் என நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது முதலில் இருந்த திட்டம்தான். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதனை தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தனர். தற்போது அதனை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள். நாலட்ஜ் சிட்டி, டைட்டில் பார்க் போன்றவை கொண்டு வருவதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகும். பம்புசெட்டுகளுக்கு என்று தொழில்துறை, பேட்டரி ஸ்டோரேஜ் தொழில்துறையை அறிவித்திருக்கிறார். இதன் மூலம் பல்வேறு அளவுகளில் வேலைவாய்ப்புகள் உருவாகக் கூடும். பல்வேறு தொழிற் பூங்காக்கள் அமைப்பது, பெங்களுருவில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பது என்பது, பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அண்மையில் வெளியான கட்டுரை ஒன்றில் ஓசூரில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும், அடுத்த ஜம்ஷட்பூராக இந்த பகுதி வளர்ச்சி அடையுமா? என்றும் கேட்கிறார்கள். நகரமயதால் ஏற்பட்டாலே வளர்ச்சியைத் தான் நீங்கள் பார்க்க வேண்டும். கோவையில் செமி கண்டக்டர் அமைக்க 500 கோடி ஒதுக்கியுள்ளார்கள்.

தமிழக நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல் – டீசல் விலை குறைப்பு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். கச்சா எண்ணெய் விலை 148 டாலர் ஆக விற்றபோது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் 78 ரூபாய்க்கு பெட்ரோல் கொடுத்துக் கொண்டிருந்தார். இன்றைக்கு கச்சா எண்ணெய் 60 டாலருக்கு விற்பனையாகும்போது  பெட்ரோல் ரூ.102க்கு கொடுக்கிறீர்களே? இதனை தனது நண்பரான மோடியிடம், எடப்பாடி கேட்க மாட்டேன் என்கிறார்? ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெயை வாங்கி, அதனை சுத்திகரிப்பு செய்து வெளிநாடுகளுக்கு மலிவு விலைக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார்கள். ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கில், அரசு விலையை விட ரூ.5 விலை குறைவாக பெட்ரோல் ஏன் கிடைக்கிறது என்று எடப்பாடி ஏன் கேட்க மாட்டேன்கிறார். அவருக்கு இது தெரியாதா?

edappadi

பெண்கள் பாதுகாப்புக்கென தமிழ்நாடு அரசின் 2025-2026 நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீண்ட நாட்ளாகவே பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருந்து வருகிறோம். நாட்டின் மற்ற பகுதிகளில் நடைபெறுவதை போன்ற பெரிய குற்றச்சம்பவங்கள் இங்கே நடைபெறுவது கிடையாது. அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்திலேயே பெரிதாக்க முயற்சித்தபோது, அதற்கு ஒரு சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து சரிசெய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். என்றைக்குமே தமிழகத்தில் பெண்களுக்கு மதிப்பும் அதிகம். பாலின சமத்துவமின்மை வந்துவிடக் கூடாது என்பதற்காக மாணவிகளுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்கள். மாணவிகளுக்கு மாதம்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தமிழக நிதிநிலை அறிக்கையில் என்னை மிகவும் கவர்ந்த விஷயங்கள் என்பது சென்னைக்கு புதிய நீர்த்தேக்கத்தை உருவாக்குவது. அடுத்தபடியாக பறவைகளுக்கு சரணாலயம் அமைக்கும் அறிவிப்பாகும். பல்வேறு அரசியல் சூழல்களுக்கு மத்தியிலும் பறவைகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த பட்ஜெட்டில் சென்னை – புதுச்சேரி அருகே ஒரு பறவைகள் சரணாலயத்தை அறிவித்தார். ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் வனவிலங்குகள் பாதுகாப்பிற்கென்று திட்டங்களை அறிவித்துக்கொண்டுள்ளார். இது எனக்கு மிகவும் முக்கியமானதாக தோன்றுகிறது.

இந்த பட்ஜெட் தேர்தலுக்கான பட்ஜெட் இல்லை. அப்படி தேர்தல் பட்ஜெட் என்றால் டைடல் பார்க்கிற்கு பதிலாக பணமாக கொடுத்திருப்பார்கள். நான் இதனை ஒரு பாப்புலஸ் பட்ஜெட் ஆக இருக்கும் என்று நினைத்தேன். பட்ஜெட்டில் இலவசங்களை வாரி வழங்கி வாக்குகளை ஈர்க்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த பட்ஜெட் தொழில்துறை, சேவை மற்றும் உட்கட்டமைப்புகளை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனது இளமைக்காலத்தில் பெங்களுருவில் போக்குவரத்து நெரிசல் கிடையாது. ஆனால் இன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னையில் அதுபோன்று ஏற்படாததற்கு காரணம் நம்மிடம் புறநகர் ரயில் சேவை இருந்தது. அதனை ஒருங்கிணைத்து, தற்போது மெட்ரோ வந்துள்ளது. இதுதவிர்த்து அடுத்து 6 மெட்ரோ வழித்தடங்களுக்கு திட்டம் உள்ளதாக நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளார். மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால் 6 மெட்ரோ ரயில் திட்டங்களையும் செயல்படுத்துவோம். அவினாசி முதல் சத்தியமங்கலம் வரை மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவந்தால் கோவை வளர்ச்சி அடையும். இதனை ஏன் அங்கே குறிப்பிடுகிறேன் என்றால், திமுக தோற்ற இடத்திலும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது என்பது பெருந்தன்மையாகும்.

சென்னைக்கு அருகே புதிய நகரம் உருவாக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேவை நிச்சயமாக உள்ளது. நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவன். அப்போது அடையாறு தாண்டிவிட்டால் எதுவும் கிடையாது. அரசு சொல்கிற ஐ.டி. காரிடார் போன்றவை எல்லாம் இன்னும் தூரம் சென்றால் தான் மக்கள் வர முடியும், தங்க முடியும். இன்னும் 5 வருடங்கள் வந்தார்கள் என்றால் உட்கட்டமைப்பை மேம்படுத்தி மும்பை, பெங்களுரு, ஐதராபாத் போன்ற பெருநகரங்களுடன் போட்டிபோடும் அளவுக்கும் மீண்டும் சென்னை வர வேண்டும். இதற்கு முன்பிருந்த 10 ஆண்டுகளில் உட்கட்டமைப்பு, மென்பொருள் என எல்லாவற்றிலும் நாம் பெங்களுரு, ஐதராபாத்திடம் பின்தங்கிவிட்டோம். இந்த 5 ஆண்டுகளில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக மெட்ரோ உள்ளிட்ட உட்கட்டமைப்புகளில் மும்பை, பெங்களுருவை விட நாம் வளர்ச்சி அடைய வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ