Homeசெய்திகள்கட்டுரைமுதலமைச்சர் மீதான குற்றச்சாட்டு அரசமைப்புக்கு புறம்பானது... ஆளுநர் ரவி இதை செய்வது பெஸ்ட்... தராசு ஷியாம்...

முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டு அரசமைப்புக்கு புறம்பானது… ஆளுநர் ரவி இதை செய்வது பெஸ்ட்… தராசு ஷியாம் தாக்கு!

-

- Advertisement -

சட்டசபையில் தேசிய கீதம் பாட மறுப்பதாக ஆளுநர் குற்றம்சாட்டுவதன் மூலம் தமிழ்நாடு அரசு தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்க மறுப்பதாக அவர் கட்டமைக்க முயற்சிப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் குற்றம்சாட்டியுள்ளார்.

shyam
மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ஆளுநர் ஆர்.என்.ரவி இடையிலான மோதல் தொடர்பாக பத்திரிகையாளர் தராசு ஷியாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ஆளுநர் ஆர்.என்.ரவி இருக்கும் வரை திமுகவுக்கு ஒரு அணு கூலம் உள்ளது. மதங்களுக்கு அப்பாற்பட்டவராக திகழ்ந்த திருவருட் பிராக வள்ளலாரை அவர் சனாதனவாதி என்று முத்திரைக்குத்துவார். அய்யா வைகுண்டரையும் சனாதனவாதி என்கிறார். இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சனாதனம் என்றால் என்ன என்று தெரியாது என நினைக்கிறேன். இவர் செட் செய்யும் நேரட்டிவ் நமக்கு அரசியல் ரீதியாக சாதகமாகத்தான் உள்ளதாக திமுக நினைக்கிறது. திமுகவை பொருத்தவரை ஆளுநர் ஆர்.என்.ரவி தான் தங்களுக்கு பிரச்சாரகர். அவர் இருக்கும் வரை ஓட்டிற்கு பஞ்சமில்லை என நினைக்கின்றனர். இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே பகிரங்கமாக சொன்ன விஷயம்தான். 2026 ஆம் ஆண்டிலும் சட்டமன்றத்தில் இருந்து அவர் வெளிநடப்பு செய்தார் என்றால் அது திமுகவுக்கு பெரிய வரவேற்பு உள்ளது.

governor

ரவியை திரும்ப பெறக்கோரி நாம் இன்னும் தீர்மானம் போடவில்லை. ஆனால் ஆளுநர் சென்னா ரெட்டிக்கும், ஜெயலலிதாவுக்கும் பிரச்சினை வந்தபோது, அவரை திரும்ப பெறக்கோரி ஜெ. தீர்மானம் போட்டார். ரவி ஓட் கேட்சராக இறங்கிவிட்டார். ஆளுநர் சொல்வது எல்லாம் அபத்தம்தான். தேசிய கீதம் பாடுவது பற்றி அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. அந்த காலத்திலேயே இதுபோன்ற பிரச்சினை வந்தது. திரையரங்குகளில் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது, பலர் எழுந்து நிற்கவில்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் அது அவமதிப்பு இல்லை என்று கூறியது. தேசிய கீதம் அவமதிப்பு என்பதற்கான வரையறை மத்திய அரசின் சட்டத்தில் உள்ளது. அதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற வில்லை. சொல்லப்போனால் ஆளுநர்தான் தேசிய கீதத்திற்கு உரிய மரியாதையை அளிக்கவில்லை. ஆளுநர் முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டை வைப்பது என்பது ஒரு வகையில் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது.

ஒரு நாட்டின் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டியது யார் என்றால் இந்தியாவை பொருத்தவரை உச்சநீதிமன்றம் தான். ஆனால் நாடாளுமன்றமும், சட்டமன்றமும் மனசாட்சியை பாதுகாவலர்கள். நாட்டின் மனசாட்சி என்பது ஒரு மாநில சட்டமன்றத்தில் தேசிய கீதம் பாடப்படுகிறதா என்பதுதான் கேள்வி. நாம் 1991ல் அவையை எப்படி நடத்த வேண்டும் என்றும் ஒரு அரசாணையை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். சபாநாயகர் அவை அவரது கட்டுப்பாட்டில் உள்ளவை. ஆளுநர், அவைக்கு கட்டுப்பட்டவர் ஆவார். அதனால் 1991 முதல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு முறை கடைபிடிக்கப்படுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இது தெரியும். ஆளுநராக வந்த முதல் வருடம் அதை ஏற்றுக் கொண்டார். 2-வது வருடம் தேசிய கீதம் பாட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார். ஆனால் சபாநாயகர் அதற்கு மறுப்பு தெரிவித்து பதில் அளித்தார். அப்படி என்றால் ஆளுநர் அவைக்கு செல்வதற்கு முன்பாகவே அவருக்கு தேசிய கீதம் முதலில் பாடப்படாது என்று தெரியும். சரி அவையில் ஆளுநர் விரும்பிய படி நடக்கவில்லை. அதனால் அங்கிருந்து புறப்படுகிறார். அவர் ராஜ்பவன் சென்றடைவதற்கு முன்பாகவே ட்விட் வந்துவிட்டது.

அதன் குறைகளை நான் தொலைக்காட்சியில் நேரலையில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே டெலிட் ஆகிவிட்டது. அப்படி எனில் ஆளுநர் முதலில் ட்விட் தயார் செய்துவிட்டு அவைக்கு சென்றுள்ளார். இவர் அங்கு சென்ற பின்னர் பிழைகளை அறிந்து ட்விட்டை டெலிட் செய்கிறார். பின்னர் புது ட்வீட் செய்கிறார். பின்னர் அதை மறுக்க முதலமைச்சரை குற்றம்சாட்டி நீண்ட அறிக்கையை கொடுக்கிறார். பின்னர் அதை திசை திருப்ப முசிறிக்கு செல்கின்றனர். இதன் முலம் என்ன நேரேட்டிவ் செட் ஆகிறது என்றால், தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் எல்லாம் பழைய பிரிவினைவாத கொள்கையில் ஊறியவர்கள். பாரதம் என்ற தாய், தேசிய கீதத்திற்கு மதிப்பு கொடுக்க மறுப்பவர்கள் என்ற நேரேட்டிவை செட் செய்ய விரும்புகிறார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

இதில் அடிப்படை தவறு என்ன என்றால் திராவிட உணர்வு, தேசிய உணர்வு, தமிழ் தேசியம் இவற்றை மிகவும் குழப்புகிறார்கள். தமிழ் தேசியமும், திராவிடமும் வேறு வேறு என் சீமான் சொல்கிறார். தமிழ் தேசியமும் இந்திய தேசியமும் வேறு என்பது ஆளுநரின் கருத்தாக உள்ளது. அடிப்படையில் திரமிள சங்கம். அது சமண முனிவரான வஜ்ரநந்தி மதுரையில் தொடங்கியது. கி.பி. 400களில் தொடங்கப்பட்ட இந்த சங்கத்தில் சமணம் சமயம் மற்றும் சமணம் தொடர்பான நூல்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. தமிழ் பெருங்காப்பியங்களில் பல சமண முனிவர்களால் இயற்றப்பட்டதாகும். 5 குறுங்காப்பியங்களும் சமணர்களால் இயற்றப்பட்டதாகும். 2000 வருஷத்துக்கு முன்னாடி இந்தியா என்ற நாடு கிடையாது. பிரிட்டிஷ் ஆட்சிவரை ஏராளமான சமஸ்தானங்கள் தான் இருந்தன. பின்னர் பிரிட்டிஷ் இந்தியா வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மதராஸ் மாகாணம் தனியான ஒரு அரசியல் போக்கை கொண்டுள்ளது. அது திராவிட நாடு, இதேபோல் வங்காளமும் தனி நாடு கோரி போராடியது.  சுதந்திரத்திற்கு முன்னர் பல பிரிவினை கோரிக்கைகள் இருந்தன. வரலாற்றில் அவை ஒரு பகுதிதான். ஆனால் அதனை காரணமாக வைத்து இவர்கள் பிரிவினைவாதிகள் என்று சொல்லுவது அபத்தமானது. 1989ஆம் ஆண்டில் கட்சிகள் பதிவு சட்டம் மாற்றப்பட்டபோது, அனைத்து கட்சிகளும் தங்களுடைய கட்சியின் சட்ட திட்டங்களில் இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற விதியை சேர்த்து அனுப்பிய பின்னர் தான் கட்சிகளை பதிவே செய்தனர்.

governor

1989ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த கட்சியும் எந்த காலத்திலும் பிரிவினை குறித்து பேச முடியாது. அதனால் அனைத்துக் கட்சிகளும் இந்திய தேசம் என்ற ஒற்றை கான்செப்டிற்கு கட்டுப்பட்டவர்கள் தான். சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றும் உரிமை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு தான் முன்முதலில் மாநில கீதம் கொண்டுவந்தோம். அதாவது தமிழ்த்தாய் வாழ்த்து கொண்டு வந்தோம். அப்போது, மாநிலங்களுக்கு தனிக் கொடி வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. கலைஞர் அப்போது முதலமைச்சராக இருந்தார். பிரதமராக இருந்த இந்திரா காந்தி அது வேண்டாம் என்றார். அதற்கு பதிலாக இந்திய தேசிய கொடியை சுதந்திர தினத்தன்று ஏற்றுங்கள், குடியரசு தினத்தன்று ஆளுநர்கள் கொடி ஏற்றவார்கள் என்று கூறினார். அதற்கு முன்பு ஆளுநர்கள் தான் 2 முறை கொடிகளை ஏற்றினர். அப்படி என்றால் இந்திரா காந்தி இந்திய தேசியத்திற்கு எதிரானவரா?.

நமது இந்திய வரலாற்றில் பல விஷயங்களை மாற்றியுள்ளோம். பல விஷயங்களை மரபாக கடைபிடித்து வருகிறோம். அப்படி தமிழ்நாடு சட்டமன்றத்தின் மரபு என்ன என்றால் இப்போது நாம் கடைபிடிக்கும் மரபுதான். 35 ஆண்டுகளாக இதனை பின்பற்றி வருகிறோம். ஆளுநராக ஆர்.என். ரவி வந்துவிட்டார். அவர் சொல்கிறார் அதனால் மாற்றுங்கள் என்றால், நாளை இன்னொருவர் வந்து மாற்ற சொன்னால் என்ன சொல்வது?. சட்டசபை என்பது சபாநாயகருக்கு கட்டுப்பட்டதாகும். இன்றுதான் அப்பாவு பேரவை தலைவராக உள்ளார். இதற்கு முன்பு எத்தனை பேர் பேரவை தலைவர்களாக இருந்தார்கள். தான் என்ன செய்யலாம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியே சொல்விட்டார். பேசாமல் தனது சொந்த ஊரில் சென்று விவசாயம் பார்க்கலம் என்று ஆளுநர் ரவி சொன்னார். அதுதான் அவருக்கு சிறந்தது ஆகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ