Homeசெய்திகள்கட்டுரைகலைஞர் ஒரு சாதி ஒழிப்பு போராளி... திமுகவை பார்த்து அஞ்சும் பாஜக... ஆ.ராசா எம்.பி. பெருமிதம்!

கலைஞர் ஒரு சாதி ஒழிப்பு போராளி… திமுகவை பார்த்து அஞ்சும் பாஜக… ஆ.ராசா எம்.பி. பெருமிதம்!

-

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மாபெரும் சாதி ஒழிப்பு போராளி என்றும், சமூகநீதிககு தானே ஒரு சான்றாக திகழ்வதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா பங்கேற்று சிறப்பு உரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் நாட்டில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற தலைவர்களும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புதான் இறுதி. அதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் எனக்கு தெரிந்தவரை அரசியலுக்கு புதிதாக வந்த தலைவர் ஒருவரிடத்தில் மசூதி இருந்த இடத்தில் கோவில் கட்டி உள்ளார்களே என கேட்டபோது, உச்சநீதிமன்றமே சொல்லி இருந்தாலும் அந்த தீர்ப்பு தவறுதான் என்று சொன்னவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

கலைஞர் - அண்ணாதுரை

பெரியார், அண்ணாவை கடந்து கலைஞர் என்ற நபர் சாதி ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். கலைஞருக்கு இருந்த மதிநுட்பம் எவ்வளவு பெரியது தெரியுமா? இந்து மதத்தின் சாதியத்தை பாதுகாக்கும் கட்டமைப்புதான் கிராமங்கள் என்று அம்பேத்கர் கூறினார். அதை ஒழிக்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னாரா?, பெண்களுக்கு சொத்து உரிமையில் சமபங்கு தருவேன் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னாரா?, அருந்ததியினருக்கு 3 சதவீத உள்இடஒதுக்கிடு தருவேன் என்று தேர்தல் சொன்னாரா?. ஆனால் அவற்றை எல்லாம் செய்துகொடுத்தார். இதற்காக கலைஞர் யாரிடமாவது கருத்து கேட்டாரா?.  தான் ஏற்றுக்கொண்ட கொள்கையை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தினுடைய முதலமைச்சர் பதவி ஒரு கருவியாக இருந்ததே தவிர அது தடையாக இருக்கக்கூடாது என்று சட்டமன்றத்தை கேட்கவில்லை, கேபினட்டை கேட்காமல் நிறைவேற்றித் தந்த தலைவர் ஒருவர் இருக்கிறார் என்றால் சாதி ஒழிப்பு போராளி கலைஞரை தவிர வேறு யாரும் இல்லை.

மகாராஷ்டிரா தேர்தல்

மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவிடம் கேட்டேன். அவர் சொன்னார் சிவசேனா என்ற கட்சி தங்களது இருப்பை அடையாளத்தை கைவிட்டதால் இவ்வளவு பெரிய தோல்வி என்றார். என்ன அடையாளம் சிவசேனா இந்து என்று அடையாளப்படுத்தி கொண்டவர்கள். நானும் இதைவிட பெரிய இந்து என பாஜககாரன் வந்துவிட்டான். அவன் அடையாளம் போயிற்று உள்ளபடியே அவர்கள் கையில் எடுத்திருக்க வேண்டியது மராத்திய இனம். அதனை சிவசேனா கையில் எடுத்திருந்தால் சிவசேனா இவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்து இருக்காது. பாஜகவுக்கு என்ன புரியவில்லை. ஈரோடு எம்.பி.யை பார்த்து பாஜககாரர் கேட்டார். நீங்கள் கடவுள் இல்லை என்கிறிர்கள் ஆனால் பொட்டு வைத்துள்ளீர்கள் என்று. மதத்தை, சாதியை எதிர்க்க நாங்கள் பெரியாரைதான் மனதில் வைத்திருப்போம், தனிமனித நம்பிக்கை என்று வந்தால் பொட்டு வைப்போம். ஆனால் எந்த இடத்திலும் பெரியாரை விட்டுத்தர மாட்டோம் என்றோம். இந்த மனலிமையை துணிச்சலை தந்த இயக்கம் திமுக.

நான் முதலமைச்சரிடம் சொன்னேன். சேகர்பாபுவின் இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து நிகழ்வு. ஆன்மீகவாதிகள் எல்லாம் சேர்ந்து ஒரு கருத்தரங்கு போட்டுள்ளனர். அதில் பள்ளி மாணவர்களுக்கு பாராயணம் செய்வது என தீர்மானம் போட்டார்கள். அது அரசுக்கு தொடர்பில்லாது. ஆனால் அரசு மீது குற்றம்சாட்டப்பட்டது. நான் கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தபோது எனது அருகில் பக்திபரவசமாக அமர்ந்திருந்த பயணி ஒருவர் என்னிடம் கேட்டார். நீங்கள் ஏன் இப்படி ஆகிவிட்டீர்கள் என்றார். ஏன் என்று கேட்டேன். பொட்டுவைத்துள்ள எங்களை நீங்கள் தான் பாதுகாக்கிறீர்கள். நீங்கள் ஏன் உங்கள் அடையாளத்தை இழந்தீர்கள் என்றார். அத்தகைய கட்டமைப்பை திமுக ஏற்படுத்தி உள்ளது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் எங்களுக்கு சாதி வேண்டாம் என்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்த்தால், அவர்களது தந்தை, தாத்தா எல்லோரும் பெரிய பெரிய அரசு பதவிகளில் இருந்தவர்கள். 1910ல் என் தாத்தா தீண்டாமைக்கு, ஏழைமைக்கு பயந்து இலங்கைக்கு ஓடி போய்விட்டார். பின்னர் எங்க அப்பா தமிழ்நாட்டிற்கு திரும்பி வந்தார். எங்க அப்பா ஆங்கிலம் படித்தவர். நான் வெறும் அரசுப்பள்ளியில் படித்து மத்திய அமைச்சர் ஆகியிருக்கிறேன். எனக்கு சாதி தெரியும். ஆனால் இன்று என் மகள் லண்டனில் படித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் பெரியார், அண்ணா, கலைஞர். சமுக நீதிக்கு நானே ஒரு சாட்சியாக உள்ளேன். இதை நான் நாடாளுமன்றத்திலேயே பேசியிருக்கிறேன். பாஜககாரன் உத்து பார்க்கிறான். ஓ இதுதான் சமூக நீதியா என்று. எங்களை கண்டால் அவர்களுக்கு பயம். பிரதமர் மோடி யாருக்கு பயப்படுகிறாரோ இல்லையோ. கருப்பு சிவப்பு வேட்டியை கண்டால் பீதி கிளம்புகிறார்கள். என்ன காரணம் நாங்கள் அப்படி வடிவமைக்கப்பட்டு உள்ளோம் என்றால், அதற்கு பின்னால் உள்ள பகுத்தறிவும், சமூகநீதியும்தான் காரணம்.

MUST READ