Homeசெய்திகள்கட்டுரைதொடங்கியது புத்தகதிருவிழா-புத்தக பிரியர்களுக்கு!

தொடங்கியது புத்தகதிருவிழா-புத்தக பிரியர்களுக்கு!

-

தொடங்கியது புத்தகதிருவிழா-புத்தக பிரியர்களுக்கு?

புத்தகப்பிரியர்களே மீண்டும் உங்களுக்காக ஆவடியில் புத்தக கண் காட்சி!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர், மற்றும் பதிப்பாளர் சங்கம், சார்பில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து, ஆவடி எச்.வி.எப். மைதானத்தில் நேற்று மாலை தொடங்கிய புத்தக கண்காட்சி இந்த மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

நேரம் காலை 11-மணி முதல் இரவு 9-மணி வரை.
இந்த விழாவில் தினமும் பிரபல நட்சத்திரங்கள், பேச்சாளர்கள் கலந்துக்கொள்ள உள்ளார்கள், மக்களை மகிழ்விக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த புத்தக கண்காட்சியில் 100-க்கும் மேற் பட்ட அரங்குகள், லட்சம்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக வைத்துள்ளார்கள்.

சிறியவர்களை கவரும் விதமாக. கதை புத்தகங்கள், ஓவிய புத்தகங்கள், பெரியவர்கள் படிபதற்காக, புத்தகங்களை 10 ரூபாயிலிருந்தே விற்பனைக்காக வைத்துள்ளனர்.

 

புத்தகங்களை பற்றி தெரிந்து கொள்வதற்காக, ஒரு புத்தக நிறுவனத்தின் பணியாளரிடம் பேசியபொழுது :
ஆப்பிள் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தின் புத்தகங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளது, குழந்தைகள் அதிகம் விரும்பும் வண்ணம், கதை புத்தகங்கள், ஓவிய புத்தகம், அவர்களின் அறிவு திறனை மேம்படுத்தும் விதமாக puzzles, போன்றவை விற்பனைக்காக வைத்துள்ளோம், வாங்கும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் 10% வரை தள்ளுபடி அளிக்கிறோம்.


ஜனவரி மாதம் சென்னை, நந்தனம் YMCA வில் நடந்த புத்தக கண்காட்சியிலும் நாங்கள் ஸ்டால் அமைத்து விற்பனை செய்தோம் நினைத்ததை விட அதிக லாபம் கிடைத்தது, இதை நாங்கள் லாபதிற்காக செய்யவில்லை.


குழந்தைகள் அனைரும் சிறு வயதில் இருந்தே, படிக்க வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் அவர்களுக்கு வர வேண்டும் என்பதற்காக குறைந்த விலையில் விற்பனை செய்துகொண்டு வருகிறோம்.

MUST READ